இந்த பதிவில் “நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.
இளைஞர்கள் புரட்சிகரமானவர்கள் துடிப்பும் வேகமும் செயல்திறனும் எப்போழுதும் மாற்றத்தை சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள்.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளைஞர்களின் கனவு
- நாட்டின் முதுகெலும்பு
- சாதனைகள்
- சமூகப்பற்று
- முடிவுரை
முன்னுரை
“உலகத்தில் அதிக இளைஞர்கள் சதவீதத்தை கொண்ட நாடு இந்தியாவாகும்” இளைஞர்கள் புரட்சிகரமானவர்கள் துடிப்பும் வேகமும் செயல்திறனும் எப்போழுதும் மாற்றத்தை சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். இத்தகைய புரட்சிகர சிந்தனை உடைய இளைஞர்கள் இந்தியாவின் பெரும் பலமாகும்.
இதனால் தான் இளைஞர்களின் ஆற்றல்களால் இந்திய ஒரு சிறந்த நாடாக மாறும் என உலக அரங்கில் பேசப்பட்டு வருகின்றது. இக்கட்டுரையில் இளைஞர்களின் பங்களிப்பினை பற்றி நோக்குவோம்.
இளைஞர்களின் கனவு
“என்னிடம் நூறு துடிப்புள்ள இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
இவ்வாறு இளைஞர்களால் சாத்தியமாகாத விடயங்கள் என்று எதுவும் இல்லை இருப்பினும் இந்தியா இன்று ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற முடியாமல் உள்ளது.
காரணம் பழைய தலைமுறையின் மோசமான பிற்போக்கான அரசியல் நிலைகளாகும். இவற்றை உடைத்து ஒரு புதுமையான இந்தியாவை படைப்பதே இளைஞர்களின் கனவாக இருக்க வேண்டும்.
நாட்டின் முதுகெலும்பு
ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டினுடைய பொருளாதாரத்தில் தங்கியிருக்கிறது.
ஆகவே இளைஞர்கள் விவசாயம், கல்வி, அரசியல், உற்பத்தி போன்ற துறைகளில் மிகச்சிறப்பான உழைப்பை வழங்கும் போது தான் ஒரு நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும்.
இன்று இந்திய இளைஞர்கள் தமது ஆக்கபூர்வமான திறமைகளாலும் கடின உழைப்பாலும் நாட்டினை முன்னேற்ற பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சாதனைகள்
இந்திய இளைஞர்களது சாதனைகள் இன்று இந்தியாவை தாண்டியம் உலகமெங்கும் பரந்துள்ளது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தொழில்முனைவு, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற துறைகளில் உலகமெங்கும் இந்திய இளைஞர்கள் கால் பதித்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து கற்று உலகத்தின் தலைசிறந்த நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலாளர் வரை உயர்ந்த சுந்தர் பிச்சை போன்றவர்களுடைய வாழ்க்கை பல இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது.
சமூகப்பற்று
இன்றைய கூடுதலான இளம் தலைமுறையினர் அதிகளவான நேரத்தை சமூகவலைத்தளங்களிலும் சினிமா போன்ற தளங்களில் களித்து வருகின்றனர்.
இந்த போக்கானது அவர்களது வளர்ச்சிக்கோ நாட்டின் வளர்ச்சிக்கோ பொருத்தமற்றதாகும்.
இளைஞர்கள் சமூக அக்கறை உடையவர்களாகவும் முற்போக்கான சிந்தனை உடையவர்களாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இதனை தவிர்த்து சமூகம் சார்ந்த அக்கறையுடைய ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்.
முடிவுரை
ஒரு நாட்டின் வளர்சிக்கும் மற்றும் சமத்துவத்துக்கும் பங்களிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது.
காரணம் இளைஞர்களது தைரியமான மனநிலையும் நடவடிக்கைகளும் தான் ஒட்டுமொத்த தேசத்தையும் மாற்ற கூடியது.
பல கோடி மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் இளைஞர்களுக்கு உண்டு என்பதனை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
You May Also Like: |
---|
கவிஞர் பாரதிதாசன் கட்டுரை |
சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி |