நெகிழியின் தீமைகள் கட்டுரை

negiliyin theemaigal katturai in tamil

சூழல் மாசடைவதற்கு பிரதானமான காரணங்களில் ஒன்றாக காணப்படுவது நெகழிப் பாவனையாகும் இன்று நெகழிப்பாவனையானது மிகவும் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.

இன்று பல்வேறுபட்ட நோய்கள் எம்மை ஆட்கொள்வதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றாக நெகிழிப் பாவனையானது காணப்படுகின்றது.

நெகிழியின் தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நெகிழி என்பது
  • சூழல் மாசடைதல்
  • நீர் மாசடைதல்
  • நெகிழிப்பாவனையை தவிர்ப்பதற்கான வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

உலகில் பல்வேறு நோய்கள் எம்மை ஆட்கொள்வதற்கான காரணங்களில் நெகிழிப் பாவனையும் ஒன்றாகும். இத்தகைய நெகிழிப் பாவனையானது இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது எம்மை மட்டுமல்லாது எமது எதிர்கால சந்ததியினருடைய வாழ்வை அழிக்கும் ஓர் உயிர்கொல்லியாக நெகிழிப் பாவணையானது திகழ்கின்றது.

நெகிழி என்பது

நெகிழி என்பது யாதெனில் ஒரு பொருள் ஏதாவதொரு நிலையில் அதாவது இளகிய தன்மையில் இருந்து பின்னர் இறுகி ஓர் திடநிலையை அடைவதாகும்.

இன்று பெருவாரியாக பிளாஸ்டிக் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. அதாவது நாம் அழுத்தும்போது உடையாமல் பிசைவு கொள்ளும் பொருட்களே நெகிழி பொருட்களாகும்.

இன்று நெகிழி பயன்பாடானது உபகரணங்கள், கொள்கலன்கள், குளிர்பான போத்தல்கள், சமயல் உபகரணங்கள் என பல்வேறுபட்ட பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இது சந்தையில் மிக குறைவான விலையில் காணப்படுவதால் அதிகமான மக்களால் வாங்கப்படக்கூடியதாகவே காணப்படுகிறது. மேலும் நெகிழிப்பாவனையானது பல்வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இதனை அறியாது இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே நோய்கள் மற்றும் சூழல் மாசடைதல் என பல்வேறுபட்ட விளைவுகள் எம்மை ஆட்கொள்கின்றன.

சூழல் மாசடைதல்

அதிகரித்த நெகிழிப்பாவனையின் காரணமாக சுற்றுச் சூழலானது மாசடைந்து கொண்டே வருகின்றது. அதாவது நாம் பல்வேறு நெகிழிப் பொருட்களை சூழலில் வீசுகின்றோம். இத்தகைய சூழலில் வீசப்பட்ட நெகிழிப்பொருட்களானவை மண்ணை மலடாக்கும் தன்மை கொண்டதாகும்.

மேலும் இதன் காரணமாக மண்வளம் குன்றுவதோடு பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத ஒரு நிலையும் ஏற்படுகின்றது.

இவ்வாறாக பல்வேறுபட்ட வகையில் சூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்டதாக நெகிழிப்பாவனையானது திகழ்கின்றது. மேலும் வறட்சி ஏற்படவும் பிரதானமான காரணமாக நெகிழியே காணப்படுகிறது.

நீர் மாசடைதல்

இன்று மனிதர்கள் நெகிழிப்பொருட்களை பயன்படுத்திவிட்டு நீர்நிலைகளில் வீசுகின்றனர். இதன் காரணமாக நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர் மாசடைவானது அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியாவில் பல நீர்நிலைகளில் நெகிழிப்பொருட்களானவை அதிகரித்து காணப்படுவதோடு நெகிழிப்பாவனையின் காரணமாக ஒட்சிசன் அளவு குறைந்து நீர்வாழ் உயிரினங்களை அழிவுக்குட்படுத்தும் நிலையினையே அவதானிக்க முடிகின்றது.

நெகிழி நீரில் கலப்பதினூடாக எம்மையும் பிற உயிர்களையும் பல்வேறுபட்ட நோய்கள் ஆட்கொள்கின்றன.

நெகிழிப்பாவனையை தவிர்ப்பதற்கான வழிகள்

நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களானவை எமக்கு தீங்கிழைக்கக் கூடியனவாகும். அந்த வகையில் நாம் இதனை தவிர்க்கும் முகமாக உணவுப் பொருட்களை மூங்கில்கள் மற்றும் வாழை இலையாலான தட்டுக்களில் பரிமாறிக் கொள்ள முடியும்.

அதேபோன்று நெகிழிப்பொருட்களை கண்ட இடங்களில் வீசாது மீள் சூழற்சிக்கு உட்படுத்தல் வேண்டும். நெகிழிப் பாவனையிற்கு பதிலாக மக்கக்கூடிய தாவர குழமங்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பேணப்படும்.

முடிவுரை

நெகிழிப் பாவனையானது உயிர்களை அழிக்கக்கூடியதாகும் என்பதனை உணர்ந்து அதனை பாவிப்பதை தவிர்க்க வேண்டும்.

நெகிழியின் தீமைகள் பற்றி விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் எம் அனைவருடையதும் கடமையாகும்.

You May Also Like:

நெகிழி பற்றிய கட்டுரை

நெகிழி மறுசுழற்சி கட்டுரை