பாரம்பரிய உணவுகள் கட்டுரை

parambariya unavugal katturai in tamil

பாரம்பரிய உணவுகள் எம் நோய் தீர்க்கும் மருந்தாகவே காணப்பட்டது எனலாம். அதாவது பாரம்பரிய உணவுகளானவை பண்டைய தமிழர்களுடைய வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்ததாக திகழ்கின்றது. பாரம்பரிய உணவு முறைகளானவை உணவே மருந்து மருந்தே உணவு என்றடிப்படையில் காணப்பட்டது.

பாரம்பரிய உணவுகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கம்
  • சங்ககால உணவுகள்
  • குறுந்தொகை உணவு முறை
  • பாரம்பரிய உணவுகளின் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு திகழ்ந்த உணவுகளாகவே பாரம்பரிய உணவுகள் காணப்பட்டன.

அதாவது இன்று காணப்படும் உணவுகளைப் போல் அல்லாது பண்டைய காலத்தில் மக்கள் உண்ட உணவுகளானவை இயற்கையானதாகவும் நோயற்ற வாழ்க்கையை வாழ்வதற்கும் சிறந்த உணவுகளாகவே காணப்பட்டன.

பாரம்பரிய உணவுப் பழக்கம்

பாரம்பரியர்களின் உணவு முறை பற்றி புறநானூற்றில் பின்வருமாறு கூறப்படுகிறது. அதாவது உணவானது 3 முறை மட்டுமே உட்கொள்ளப்படுவதோடு அதனுள் கேழ்வரகு, கொள்ளு, அவரைக்காய், சாமை போன்றனவும் உணவாக காணப்பட்டது.

அதேபோன்று பாரம்பரிய உணவுகளில் மருத்துவ குணமுள்ள பொருட்களையும் சேர்த்து சமைத்தனர். மேலும் பழங்கள், தானியங்கள், கீரை வகைகள், பயறு வகைகள் போன்றவையே எமது பாரம்பரிய உணவுகளாக காணப்பட்டது.

பாரம்பரிய உணவுகள் எம் உடல் ஆரோக்கியத்தை பேணக் கூடியதாகவே காணப்பட்டமை சிறப்பிற்குரியதாகும். வாழை இலையில் உணவுகளை உண்ணுகின்ற பழக்கமும் எமது முன்னோர்களால் எமக்கு கிடைக்கப் பெற்ற அரியதொரு வாய்ப்பாகும்.

பாரம்பரிய காலப் பகுதிகளில் காலை உணவில் சாமை, கேழ்வரகு என்பவற்றை சேர்த்து கொள்வதோடு மதியத்திற்கு தானியங்கள் மற்றும் அரிசியையும் உண்டு வந்தனர்.

சங்ககால உணவுகள்

சங்ககால மக்களின் உணவு முறையானது உடல் நலத்திற்கு சிறந்ததாகவே காணப்பட்டதோடு உணவினை ஆரோக்கியமாக சமைப்பதிலும் சிறந்து விளங்கினார்கள்.

சங்ககாலத்தில் உணவுகளை நீரிட்டு அவித்தல் மற்றும் வறுத்தல், சுடுதல் போன்ற முறைகளை பயன்படுத்தி உணவுகளை சமைத்தனர். மேலும் அத்திப்பழம், இலுப்பைப்பழம், கொன்றைப்பழம், நாவற்பழம் போன்றவையும் தானியங்கள் மற்றும் சோற்றினையும் அதிகம் உண்டு வந்தனர்.

குறுந்தொகை உணவு முறை

பாரம்பரிய மக்கள் பெரு வாரியாக அசைவ உணவினையே உண்டு வந்தனர். அந்த வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரிக்கப்பட்டே மக்கள் வாழ்ந்து வந்தனர்.

இதனுள் குறிஞ்சி நில மக்களானவர்கள் மலையில் விளைந்த திணையை சோறாக்கி உண்டதோடு நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சிகளையும் உண்டு வந்தனர். அதேபோன்று மருத நில மக்கள் பழைய சோறு, அவல், பீர்க்கங்காய் போன்றவற்றையும் நெய்தல் நில மக்கள் இறால், மீன் போன்றவற்றையும் பாலை நில மக்கள் புளி இடப்பட்ட சோறு மற்றும் இறைச்சியையும் உணவாக அதிகம் உட்கொண்டு வந்தனர்.

பாரம்பரிய உணவுகளின் பயன்கள்

இன்று நாம் உண்ணும் உணவு வகைகளில் இருந்து பெரிதும் வேறுபட்டதே பாரம்பரிய உணவுகளாகும். அதாவது இன்று பெருவாரியாக நாம் உண்ணும் துரித உணவுகள் எமக்கு பல்வேறுபட்ட நோய்களையே உண்டு பண்ணுகின்றன.

ஆனால் பாரம்பரிய உணவுகளானவை நோயற்ற வாழ்க்கையை வாழ்வதற்கும் சிறந்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் உதவுகின்றது.

அக்கால உணவுகளில் முக்கியமான திணையானது வயிறு, குடல் புண்களை ஆற்றக் கூடியதாக உள்ளதோடு சாமை, வரகு போன்றவை சக்கரை நோயை கட்டுப்படுத்தவும், விற்றமின் மற்றும் கனியுப்புக்களை கொண்டதாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் காணப்படுகின்றது.

முடிவுரை

பாரம்பரிய மக்கள் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் திகழ்ந்தமைக்கான பிரதானமான காரணம் அவர்கள் உண்ணும் உணவுகளே ஆகும். பாரம்பரிய உணவுகளை மீண்டும் நாம் எமது உணவு முறையில் சேர்த்துக்கொள்கின்ற போதே சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்.

You May Also Like:

ஆரோக்கியமான உணவு கட்டுரை

இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும்