பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை

pirapokkum ella uyirkkum katturai in tamil

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை

இந்த பதிவில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை” பதிவை காணலாம்.

சமூக பிரிவினைகள் மனிதர்களிடையே சமத்துவத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்த ஒரு பொழுதும் அனுமதிக்காது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • யாவரும் சமன்
  • ஆற்றும் செயல்களில் உயர்வு
  • பிரிவினைகள்
  • மேன்மை என்பது
  • முடிவுரை

முன்னுரை

“பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்” என்று நம் பெருமைக்குரிய உலக பொதுமறையானது உலக வாழ்வின் சமத்துவ தன்மையினை எடுத்துகாட்டியிருக்கிறது.

இதனை பின்பற்றி இந்த உலகத்தார் நடந்து கொள்கின்றார்களா? என்றால் அது விவாதத்துக்குரிய விடயமாகவே இருக்கிறது.

நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை எவ்வகையான செயல்களை ஆற்றுகின்றோம் என்பதனை பொறுத்து தான் நமது சிறப்பும் பெருமையும் தங்கியிருக்கின்றது.

யாவரும் சமன்

மனித சமுதாயத்தில் வன்முறைகள் பிரச்சனைகள் போன்ற பாதகமான சூழல்கள் உருவாக காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் அது மனிதனுடைய உயர்வு, தாழ்வுகள் பற்றி புரிந்துணர்வு இல்லாத தன்மைகளாக தான் இருக்க முடியும்.

எமது சமுதாயத்தில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், ஏழை, பணக்காரர்கள், நிறபேதங்கள், மத பேதங்கள், இன பேதங்கள் என பலவகையான அளவு கோல்களை கொண்டு மனிதர்கள் பாகுபாடுகளை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த தவறான நடைமுறைகள் தன்னையும் தன் சமூகத்தையும் தவறான வழிகளில் இட்டு செல்கின்றது. விலங்குகள் கூட தங்களில் உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை. யாவரும் சமன் என்பதுவே இங்கு உண்மையாகும்.

ஆற்றும் செயல்களில் உயர்வு

செய்கின்ற காரியங்களில் எப்போதும் துணிவும் சீரிய எண்ணங்களும் வேண்டும். இவ்வகையான நல்லெண்ணங்கள் எமது உள்ளத்தில் வாய்க்க பெறின் எமது வாழ்வு உயர்நிலையினை அடையும்.

தாம் முன்னேறி செல்வதோடு தம்மை சார்ந்த பிறரையும் முன்னேற்றி விடுதல் சிறந்த பண்பாகும் இது ஒரு மகிழ்ச்சியான அமைதியான சமூகம் உருவாக காரணமாக அமையும்.

இவ்வாறான உயர்ந்த எண்ணங்கள் நமது உள்ளத்தில் தோன்றுவதனால் சமூகப்பற்று, ஒற்றுமை உணர்வு, சமத்துவம் போன்ற விடயங்கள் எமக்குள் உருவாகும்.

பிரிவினைகள்

இன்று நாம் வாழ்கின்ற சமூகம் எத்தனை கல்வி அறிவுடையதாக இருப்பினும், எவ்வளவு செல்வ செழிப்புடையவர்களாக இருப்பினும், எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து இருப்பினும் ஒரு ஆராக்கியமான சமுதாயமாக இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இதற்கான காரணமாக மனிதர்களிடத்தில் காணப்படும் வேற்றுமைகளும் பிரிவினைகளும் மட்டுமேயாகும். இத்தகைய சமூக பிரிவினைகள் மனிதர்களிடையே சமத்துவத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்த ஒரு பொழுதும் அனுமதிக்காது.

மேன்மை என்பது

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்” என்கிறது திருக்குறள். அதாவது ஒரு மனிதனுடைய மேன்மை எனப்படுவது அவனது உள்ளத்தில் உள்ள உயர்ந்த பண்புகள் தான்.

தன்னை போலவே பிற மனிதர்களையும் மதித்தல், அன்பு செய்தல், உதவிசெய்தல் போன்ற நல்ல இயல்புகளை ஒவ்வவொரு மனிதர்களும் கொண்டிருந்தால் அந்த சமூகம் மேன்மை உடையதாக இருக்கும்.

இந்த மனநிலையானது அனைவருக்கும் உருவாகினால் இந்த மனிதவாழ்வானது ஆசீர்வதிக்கப்பட்டதாக அமையும்.

முடிவுரை

“வாழு வாழவிடு” என்ற வாசகத்திற்கிணங்க இந்த உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் ஒன்றை ஒன்று சார்ந்தே படைக்கப்பட்டுள்ளன.

ஒரு ஆறறிவு படைத்த மனிதனாக இந்த இயற்கையின் படைப்பினை புரிந்து கொண்டு பிறரையும் வாழ்வித்து இந்த இயற்கையினையும் பாதுகாத்து ஒரு அர்த்தம் நிறைந்த வாழ்வினை நாம் வாழ வேண்டும். இதுவே நமது வாழ்வினை மேலும் மேன்மையடைய செய்யும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”

You May Also Like:

விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுரை

வாய்மையே வெல்லும் கட்டுரை