பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை

சூரிய குடும்பத்தில் பல்வேறு கிரகங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் உயிரினங்கள் வாழத் தகுதியான ஒரே ஒரு கிரகம் இந்த புவி ஆகும். நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தற்கால சூழ்நிலையில் புவியானது எம்முடைய செயற்பாடுகளினால் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது.

இந்த புவி நமக்கு மட்டும் சொந்தமானதல்ல வரக்கூடிய வருங்கால சந்ததிகளுக்கும், பிற உயிர்களுக்கும் சொந்தமானது என்பதனை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பூமியின் முக்கியத்துவம்
  • பூமி பாதிப்புக்குள்ளாகும் வழிகள்
  • பூமியை பாதுகாக்கும் வழிமுறைகள்
  • பூமிக்கும் மனிதனுக்குமான பிணைப்பு
  • முடிவுரை

முன்னுரை

பூமியில் உள்ள ஒவ்வொரு இயற்கை வளங்களுக்கும், உயிரிகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் பூமி மனிதர்களுக்கு சொந்தமானது மட்டுமல்ல இந்த மனிதர்கள் தான் பூமிக்கு சொந்தமானவர்கள் என கூற முடியும்.

அதாவது ஒரு மனிதன் பிறந்து ஏதோ ஒரு வகையில் வாழ்ந்து மறுபடியும் இறந்து விடுகின்றான். அவனுடைய வாழ்க்கை நிச்சயம் அற்றதாகவே காணப்படுகின்றது.

ஆனால் வருங்கால சந்ததிகளும் வாழும் வாழிடமாக இந்த பூமி காணப்படுகின்றது. ஆகவே பூமிக்கு சொந்தமானவர்கள் நாமே தவிர எமக்கு மட்டுமே பூமி சொந்தம் கிடையாது என கூற முடியும்.

பூமியின் முக்கியத்துவம்

விண்வெளியில் கோள் மண்டலத்தில் பல்வேறு கோள்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை யாவற்றிலும் இருந்து சிறப்பு வாய்ந்ததாகவும் தனித்துவமானதுமான ஓர் கோளாக பூமி காணப்படுகின்றது.

அதாவது உயிர்கள் வாழ்வதற்கு உகந்த நீர், வளி, காலநிலை போன்றவற்றை கொண்டிருக்கக் கூடிய ஒரே ஒரு கோளாக இந்த பூமியே காணப்படுகின்றது. ஆகவே இந்த பூமிக்கு சொந்தமான நாம் அதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

பூமி பாதிப்புக்குள்ளாகும் வழிகள்

20ஆம் நூற்றாண்டுகளின் பிற்பாடே பூமி அதிகமாக மாசடைந்து, பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமையை காணலாம்.

அதாவது பிளாஸ்டிக் பொருட்களின் அதீத பாவனை, வன ஜீவராசிகளை வேட்டையாடுதல், காடுகளை அழித்தல், தொழிற்சாலை கழிவுகளை நீர் நிலைகளில் கலக்க விடுதல் மற்றும் பொலித்தீன் பாவனை, வாகனப் புகை போன்ற பல்வேறு காரணிகளின் மூலம் இந்த பூமி மாசடைந்து பாதிப்புக்கு உள்ளாகுவதோடு இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் பூகம்பம், சுனாமி, மண் சரிவு, வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பூமி அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகுவதனை காணமுடியும்.

பூமியை பாதுகாக்கும் வழிமுறைகள்

மனிதன் பூமிக்கு சொந்தமானவன் என்ற வகையில் அந்த பூமியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் நாம் வாழக்கூடிய பூமிக்கு நாம் ஏற்படுத்திய தீய விளைவுகளை சரி செய்யும் வகையில் கைகோர்த்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.

வனங்களையும் வன விலங்குகளையும் பாதுகாப்பதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மீழ் சுழற்சிக்கு பொருட்களை உட்படுத்துதல், சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுதல் மற்றும் பண்பாட்டு கலாச்சார முக்கியத்துவத்தை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு கடத்துதல் போன்றவாரான எமது செயற்பாடுகளின் மூலம் நாம் வாழக்கூடிய பூமியின் தூய்மையை பாதுகாக்க முடியும்.

பூமிக்கும் மனிதனுக்குமான பிணைப்பு

இன்று மனிதன் தன்னுடைய ஆய்வுகளின் பலனாக பல்வேறு கிரகங்களுக்கு சென்று வருகின்றான். ஆனால் எந்த கிரகத்திலும் நிரந்தரமாக சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் காணப்படாமலேயே உள்ளன.

மனிதன் ஏதோ ஒரு வகையில் இந்த பூவுலகில் பிறந்து, இங்கேயே வாழ்ந்து, இங்கேயே இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளான். ஆகவே பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு இங்கு பின்னிப்பிணைந்துள்ளதாகவே காணப்படுகின்றது.

முடிவுரை

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியானது பல்வேறு இயற்கையான அருட்கொடைகளையும், பல்வேறு ஜீவராசிகளையும் கொண்டு காணப்படுகின்றது. இங்கு காணப்படக்கூடிய பல்வேறு உயிர்களுள் நாமும் ஓர் உயிரி வர்க்கமாகவே காணப்படுகின்றோம்.

இந்த பூமி எமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்த பூமிக்கு தான் நாம் சொந்தமானவர்கள் என்பதனை முதலில் நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதோடு இந்த பூவுலகின் தூய்மையை பாதுகாக்கும் வகையிலும் செயல்படுவது எமது கடமையாகும்.

You May Also Like:

இயற்கையை நேசிப்போம் கட்டுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை