அரசியல் வரலாற்றில் தலை சிறந்த ஆளுமை மிக்கவராகவும் கலைஞர் என்றும் போற்றப்பட்ட கருணாநிதி அவர்கள் மகளிருக்கான சொத்துரிமை மற்றும் சமூக புரட்சியை ஏற்படுத்தி பெண்களுக்கு பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தவராவார்.
மகளிருக்கு சொத்துரிமை கலைஞரின் சமூக புரட்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மகளிருக்கான சொத்துரிமை
- சமூக புரட்சிக்கு வித்திட்ட கலைஞர்
- சமூக நலத்திட்டங்களும் கலைஞரும்
- பெண்களின் வாழ்வாதாரத்தில் கலைஞர் ஏற்படுத்திய மாற்றம்
- முடிவுரை
முன்னுரை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்றிருந்த காலத்தில் ஆண்களை போன்று பெண்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மகளிருக்கான சொத்துரிமையை தமிழ் நாட்டில் ஏற்படுத்தியவர் கலைஞர் ஆவார்.
மகளிருக்கான சொத்துரிமை
கலைஞருடைய ஆட்சிக் காலப்பகுதியில் செங்கல்பட்டில் இடம்பெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு காணப்பட வேண்டும் என்று கூறியதோடு மாத்திரமின்றி 1987ம் ஆண்டு இதற்கென தனியானதொரு சட்டத்தினையும் கொண்டு வந்து மகளிருக்கான சொத்துரிமையையும் வழங்கினார்.
இவ்வாறாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்ட பின்னர் பெண்கள் சமூகத்திற்கு மத்தியில் மதிக்கப்படக்கூடியவர்களாகவும் காணப்பட்டார்கள்.
மேலும் கணவனை இழந்த பெண்கள், ஏழை பெண்கள் போன்றோர் தனது சுயமுயற்சியின் காரணமாக வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு காரணமாக கலைஞரே திகழ்ந்தார்.
அந்தவகையில் மகளிருக்காக எண்ணற்ற உரிமைகளை கொண்டு வந்த பெருமை கலைஞரையே சாரும்.
சமூக புரட்சிக்கு வித்திட்ட கலைஞர்
தமிழ் நாட்டில் சிறந்த ஆட்சியை நிறுவி சமூக புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞரே. அந்த வகையில் தமிழ் நாட்டில் சமூக நீதியின் அடிப்படையில் செயற்பட்டு பல சமூக புரட்சிகளை ஏற்படுத்தினார்.
அதாவது தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஏழைகள் என சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்து அவர்கள் முன்னேறுவதற்கு வழிவகுத்தார்.
சாதி, சமயம் என்ற வேறுபாட்டை ஒழித்து மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்காக தந்தை பெரியாரை முன்னிட்டு பெரியார் சமத்துவபுரம் என்ற திட்டத்தை 1997ம் ஆண்டு கொண்டு வந்து சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஆவார்.
சமூக நலத்திட்டங்களும் கலைஞரும்
சமூக நலத்திட்டங்களை கொண்டு வந்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் கலைஞரின் பங்கு அளப்பரியதாகும்.
அந்த வகையில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுதிட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரச மருத்துவமனைகள் திட்டம், அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற பல்வேறு சமூக நலத்திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் நீர்ப்பாசனம், வேளாண்மை, தொழிலாளர் நலன் என பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு தமிழ் நாட்டில் சிறந்த ஆட்சிக்கு வித்திட்டவர் கலைஞரே ஆவார்.
பெண்களின் வாழ்வாதாரத்தில் கலைஞர் ஏற்படுத்திய மாற்றம்
தனது குடும்பதிற்காக உழைக்கும் பெண்களுக்கு முறையாக அவர்களுடைய உழைப்பை அங்கீகரிப்பதற்காக மகளிர் உரிமை தொகை திட்டங்களை கொண்டு வந்து சமூக புரட்சியை ஏற்படுத்தினார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வேண்டி அவர்களுக்கு பொருளாதார ரீதியல் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தார்.
மேலும் சமூகத்தில் சரிபாதியாக நிறைந்திருப்பவர்கள் மகளிரே என்ற அடிப்படையில் மகளிர்களுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை கலைஞரையே சாரும்.
முடிவுரை
எனவேதான் கலைஞர் அவர்கள் மகளிருக்காக சொத்துரிமை மட்டுமல்லாது பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வந்தவராவார். இன்றுவரை கலைஞரின் திட்டங்கள் தமிழ் நாட்டில் பேணப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
You May Also Like: