மாசு கட்டுப்பாடு கட்டுரை

masu kattupadu katturai in tamil

இந்த பதிவில் “மாசு கட்டுப்பாடு கட்டுரை” பதிவை காணலாம்.

நாளுக்கு நாள் புவியின் வெப்பம் உயர்கிறது. காலநிலை தன்மைகள் மாறிவருகின்றது. இயற்கையின் சீற்றம் அனர்த்தங்களாக வெளிப்படுகின்றன.

மாசு கட்டுப்பாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சூழலும் பூமியின் இயக்கமும்
  • சூழலின் முக்கியத்துவம்
  • சூழல் மாசடைதலும் அதனால் உருவாகும் பிரச்சனைகளும்
  • சூழலை பாதுகாக்கும் ஏற்பாடுகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதர்களுடைய வாழ்க்கை அவர்கள் வாழ்கின்ற சூழலை பொறுத்து தான் தீர்மானிக்கப்படுகின்றது. நல்ல சூழல் ஒரு மனிதனை ஆரோக்கியமாக வாழ வைக்கும் அதே சமயம் மாசடைந்த சூழல் மனிதனை நோயாளியாகவும் மன அழுத்தம் மிக்கவனாகவும் மாற்றுகிறது.

மனிதன் தான் வாழும் சூழலை பாதுகாத்து வாழும் போது அச்சூழல் அழகாவதோடு அவனுடைய வாழ்வும் அழகானதாக மாறும்.

இயற்கையின் படைப்பு அவ்வளவு அழகானது அவற்றை பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும் இக்கட்டுரையில் இது பற்றி நோக்குவோம்.

சூழலும் பூமியின் இயக்கமும்

நாம் வாழும் பூமி இன்றைக்கு 400 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவானது. பால்வெளியில் ஏற்பட்ட பெருவெடிப்பினால் தான் பூமி போன்ற பல கோள்கள் உருவாகியுள்ளன.

நீர், காற்று, ஆகாயம், நிலம், தீ போன்ற பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது இந்த பூமியாகும். இங்கு காடுகள், பாலைவனங்கள், சதுப்பு நிலங்கள், மலைகள், சமுத்திரங்கள் என பலவகையான சூழல்கள் காணப்படுகின்றன.

தரைச்சூழல் மனிதர்கள் வாழவும், தாவரங்கள் வளரவும் ஆதாரமாய் உள்ளது. காட்டுச்சூழல் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடமாய் உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு சூழல் தொகுதியும் ஒன்றொடு ஒன்று தொடர்புபட்டு பல முக்கியமான பணிகளை ஆற்றுகின்றன.

சூழலின் முக்கியத்துவம்

இந்த சூழல் பல அசாதாரண சக்திகளில் இருந்து மனிதனை பாதுகாக்கின்றன. சூரியனின் வெப்ப கதிர்களை வளிமண்டலத்தின் ஓசோன் படலம் தடுக்கிறது.

அவ்வாறே இயற்கை நிகழ்வுகளான மழை வீழ்ச்சி, பருவகாற்றுக்கள் முறையாக இடம்பெறுகின்றன. இவற்றினால் தான் மனிதன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடிகின்றது.

மனிதனுக்கு தேவையான உணவை இயற்கையே தருகிறது. குடிக்க நீரும் சுவாசிக்க காற்றும் தங்க வாழ்விடமும் இந்த இயற்கை சூழலில் இருந்தே மனிதனுக்கு கிடைக்கின்றது. இதன் மூலம் இயற்கை சூழலின் அவசியம் நமக்கு புரியும்.

சூழல் மாசடைதலும் அதனால் உருவாகும் பிரச்சனைகளும்

இன்றைய காலகட்டத்தில் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் கைத்தொழில்களின் வளர்ச்சி மற்றும் நகரங்களின் விரிவாக்கம் என்பவற்றினால் சூழல் மாசடைவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

காற்று மாசடைதலினால் மனிதர்கள் பல சுவாச பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அதுபோல நீர் மாசடைதலினால் சுத்தமான குடிநீர் இன்றி பலர் சிரமப்படுகின்றார்கள் நீர் சார்ந்த நோய்களுக்கும் இலக்காகின்றனர். இது ஒரு பாரிய அனர்த்தமாக இன்று உருவெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள்

இன்றைக்கு உலக நாடுகள் இயற்கை சூழல் அழிவதனால் உள்ள பிரச்சனைகளின் தீவிரத்தை உணர துவங்கியுள்ளன.

இயற்கையை மனிதன் பாதுகாக்காமல் போனால் மனித குலம் அழியும் நிலையானது உருவாகிவிடும் என ஜக்கியநாடுகள் சபை எச்சரித்து வருகின்றது. சூழலை பாதுகாக்கும் நோக்கில் உச்சி மாநாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

உலகின் சமநிலையை பேணி உலகை வாழ வைக்கும் சூழலை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன்-5 சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகின்றது.

முடிவுரை

நாளுக்கு நாள் புவியின் வெப்பம் உயர்கிறது. காலநிலை தன்மைகள் மாறிவருகின்றது. இயற்கையின் சீற்றம் அனர்த்தங்களாக வெளிப்படுகின்றன. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. பூமியில் வாழ்வது சவால் நிறைந்ததாக மாறிவருகின்றது.

எமது முட்டாள் தனமான சூழலுக்கு எதிரான செயற்பாடுகள் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது போல மாறி வருகின்றது. எனவே நாம் இன்றே விழித்து கொள்ள வேண்டும் சூழல் மாசுபாடுகளை தடுத்து நமது பூமியை பாதுகாக்க வேண்டும்.

You May Also Like :
சூழல் மாசடைதல் கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை