சூழல் மாசடைதல் கட்டுரை

sutru suzhal masu paduthal in tamil

இந்த பதிவில் “சூழல் மாசடைதல் கட்டுரை” பதிவை காணலாம்.

சூழலானது பிரதானமாக நீர், நிலம், வளி ஆகிய வழிமுறகளின் கீழ் மாசடைவிற்கு உட்படுகின்றது.

சூழல் மாசடைதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சூழல் மாடையும் வழிகள்
  • மாசடைதலின் விளைவுகள்
  • தடுக்கும் வழிமுறைகள்
  • சூழல் நேய நிறுவனங்கள்
  • முடிவுரை

முன்னுரை

சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்பாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும்.

அபிவிருத்தியை நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. மனிதர்களினுடைய அலட்சியப் போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கின்றது. இக்கட்டுரையில் சூழல் மாசடைதல் பற்றி நோக்கலாம்.

சூழல் மாடையும் வழிகள்

சூழலானது பிரதானமாக நீர், நிலம், வளி ஆகிய வழிமுறகளின் கீழ் மாசடைவிற்கு உட்படுகின்றது.

வேதியற் பொருட்களும் தூசியும் வெளியிடப்படுவதனால் வளி மாசடைகின்றது. வாகனங்களாலும் தொழிற்சாலைகளினாலும் வெளியிடப்படும் கார்பன் மொனோக்சைட் இதில் முக்கியமானதாகும்.

மனித செயற்பாடுகளால் மற்றும் தொழிற்சாலைகளினாலும் விவசாய நிலங்களிலிருந்தும் வெளியிடப்படும் திண்ம திரவ கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதால் நீரானது மாசடைகின்றது.

வேளாண்மையில் பயன்படும் உரங்கள், பூச்சி கிருமி நாசினிகள், களை கொல்லிகளின் பயன்பாட்டால் மண் பெரிதும் பாதிப்படைகின்றது.

மாசடைதலின் விளைவுகள்

மாசடைதலின் காரணமாக சூழல் சமநிலயானது குழப்பப்படுகின்றது. இதன் விளைவாக மனிதனின் உடல் நலம் பாதிப்படைகின்றது.

வளி மாசடைவினால் அதை சுவாசிக்கும் மனிதனுக்கு மூச்சு நோய், இதய நோய், தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி போன்றவை ஏற்படுகின்றன.

மாசடைந்த நீரினை குடிப்பதால் வாந்தி பேதி, கொலரா போன்ற நோய்கள் ஏற்படலாம். மேலும் நீர் மாசடைவானது நாள்தோறும் உலகில் ஏற்படக்கூடிய பல இறப்புகளுக்கு காரணமாக அமைகின்றது.

அத்துடன் இந்த சூழல் மாசடைவானது உலகையே பாதிப்படையச் செய்யும் பூகோள வெப்பமயமாதலுக்கும் பிரதான காரணமாக அமைகின்றன.

தடுக்கும் வழிமுறைகள்

இதற்கு நாம் மாசுக்கட்டுப்பாட்டு வழிமுறையினை பின்பற்ற வேண்டும். இதனை மீண்டும் பயன்படுத்தல், பயன்பாட்டை குறைத்தல், மாசடைதலை தடுத்தல், சேதனப் பசளை பயன்பாடு ஆகிய நான்கு முறைகளில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

அதாவது அழிவடையாத பிளாஸ்ரிக் போன்ற பொருட்களை மீள்பாவனை செய்தல், அல்லது அவற்றினுடைய பாவனையை குறைத்தல், கழிவுகளை வெளியேற்றும் போது சுத்தப்படுத்தி வெளியேற்றல், அசேதன உரங்கள், கிருமி நாசினி போன்றவற்றை தவிர்த்து சேதன பொருட்களை பயன்படுத்தல், தேவையற்ற வாகனப் பயன்பாடுகளை குறைத்தல் என்பவற்றின் மூலம் நாம் சூழல் மாசடைவினை தடுக்க முடியும்.

சூழல் நேய நிறுவனங்கள்

சூழல் மாசடைவதனை தடுக்க சர்வதேச ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொழிற்படுகின்றன.

இவற்றின் பிரதான நோக்கம் விழிப்புணர்வூட்டல் மற்றும் பல நிகழ்வுகள் ஊடாக சூழல் மாசடைதலை தடுப்பதாகும்.

உதாரணமாக ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சி திட்டம், உலக சூழல் வசதி, தெற்காசிய கூட்டுறவு சூழல் நிகழ்ச்சி திட்டம் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேலும் இந்தியாவினுடைய க்ரீன் பீஸ் இந்தியா, சுழல் பாதுகாப்பு நிறுவனம், ஆராண்யக் போன்ற நிறுவனங்களையும் கூறலாம்.

முடிவுரை

சூழல் மாசடைவு என்பதை தடுக்க தனிமனிதர் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். தம்மால் சூழலுக்கு வெளிவிடப்படும் கழிவுகள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலே சுற்றுச் சூழல் மாசடைவினை பாரியளவில் குறைத்துக்கொள்ள கூடியதாக இருக்கும்.

You May Also Like:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை