இந்த பதிவில் “மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.
அரசாங்கத்தின் மீதும் சட்டத்தை காப்பாற்றும் நீதி துறையினர் மீதும் மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் மரியாதையும் உருவாக வேண்டும்.
மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காவல்துறையின் கடமைகள்
- குற்ற தடுப்பு
- சிறந்த சமூகம்
- இன்றையநிலை
- முடிவுரை
முன்னுரை
இந்தியா எனப்படும் நாடு பல்வேறான இனங்கள், மொழிகள் பேசக்கூடிய பலவகையான மக்கள் வாழக்கூடிய நாடு என்பதனால் தான் மாநில ஆட்சியானது இங்கு காணப்படுகின்றது.
இந்தியாவில் 28 மாநிலங்கள் காணப்படுகின்றன இந்த ஒவ்வொரு மாநிலங்களுடைய வளர்ச்சியில் பாதுகாப்பு துறையின் பங்களிப்பானது மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.
பாரிய ஆட்சி பிரிவுகளில் வாழ்கின்ற ஏராளமான மக்களின் சட்டம் ஒழுங்குகளை கவனிக்கவே காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கட்டுரையில் காவல்துறையின் பங்களிப்பு பற்றி நோக்கலாம்.
காவல்துறையின் கடமைகள்
மாநிலம் ஒன்றில் வாழக்கூடிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது காவல்துறையினரின் கடமையாகும்.
இதன் மூலமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும் தமது பணிகளை சரியாக செய்யவும் முடியும் சட்டத்துக்கு விரோதமாக செயற்படுகின்ற நபர்களை கைதுசெய்வதும் தண்டனைகளை வழங்குவதன் மூலமாக சமூக நலன் பாதுகாக்கப்படும்.
இத்தகைய பாதுகாப்பான சூழல்களே கல்வி கற்கின்ற வளமான சூழலை உருவாக்கி வருங்கால தலைமுறையனரை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும்.
குற்ற தடுப்பு
இந்தியாவின் பல பகுதிகளில் தினம் தினம் ஏராளமான குற்ற செயல்கள் பதிவாகி கொண்டுதான் இருக்கின்றது.
கொலைகள், திருட்டுக்கள், மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள், இயற்கை வளங்கள் திருட்டு போன்ற பலவகையான குற்ற செயல்கள் இடம்பெறுகின்றன. இது மக்களை அச்சுறுத்தி கொண்டே இருக்கின்றன.
இந்த குற்றங்களை செய்பவர்களை கைது செய்து தண்டிப்பதை விடவும் இந்த குற்றசெயல்கள் இடம்பெறாமல் தடுப்பதுவே சிறந்ததாக அமையும்.
சிறந்த சமூகம்
சமூக மட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதனால் ஒரு சிறந்த சமுதாயமானது உருவாக வாய்ப்புகள் உருவாகின்றன. மக்கள் மத்தியில் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
அவ்வாறே அரசாங்கத்தின் மீதும் சட்டத்தை காப்பாற்றும் நீதி துறையினர் மீதும் மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் மரியாதையும் உருவாகும்.
இவ்வாறான நிலை மனிதர்களை குற்றங்கள் செய்ய முடியாத நல்வழிக்கு இட்டு செல்லும் என நம்ப முடியும். இதுவே மக்களுடைய நலவாழ்வுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது.
இன்றையநிலை
இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் பிரதேசங்களில் காவல்துறையின் நிலையினை எடுத்து பார்த்தால் அது வேதனைக்குரியதாகும்.
நீதி துறையில் இருப்பவர்களே பக்கசார்பாகவும் ஊழல் நடவடிக்ககைகளிலும் அதிகம் ஈடுபடுவதனை அவதானிக்க முடியும்.
இதனால் நிரபராதிகள் பலர் பாதிக்கப்பட குற்றம் செய்கின்ற அரசியல் மற்றும் பணபலம் உடையவர்கள் தப்பிப்பது இந்த நாட்டின் எதிர்காலத்தை மிகவும் மேசாமான நிலையினை நோக்கி எடுத்து செல்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவுரை
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டத்துறை மற்றும் நீதித்துறை என்பன மிகவும் அத்தியாவசியமானவை ஆகும்.
இவை நேர்மையாக செயற்படாவிடின் அந்த நாடும் மாநிலமும் அதாளபாதளத்தை நோக்கி நகரும் என்பதில் ஐயமில்லை.
எனவே மக்களும் அவர்கள் பாதுகாவலர்களான காவல்துறையினரும் தமது கடமைகளை சரியாக செய்து தமது நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்ற உழைக்க வேண்டும்.
Read more: ஊழல் பற்றிய கட்டுரை