வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை வரலாறு

vattakudi iranian history in tamil

இந்திய நாட்டின் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தின் தலைவர்களான மகாத்மா காந்தி, நேதாஜி என்பவர்களுக்கு அடுத்தபடியாக காணப்படுகின்றவர் வாட்டாகுடி இரணியன் ஆவர்.

சிறந்த தலைவர்களில் அதிகமானோர் தம் நிழல்போல் என்றும் காணப்படுபவர்களின் துரோகங்களாலே மாண்டுள்ளனர். அந்த வரிசையில் இரணியனும் ஒருவராக காணப்படுகின்றார்.

வறுமையிலும் அடிமைத்தனத்திலும் சிக்கி பாரிய துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்த ஏழை மக்களுக்காக பல போராட்டங்களையும், உதவிகளையும் புரிந்து மரணம் நெருங்கும் போது அதனைக் கண்டு பயம் கொள்ளாது மரணத்தை மார்பிலே அன்புடன் ஏற்றுக்கொண்ட வீரர்களில் ஒருவராகவும் காணப்படுகிறார்.

வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை வரலாறு

பிறப்பு1920 நவம்பர் 15
பிறந்த இடம்வாட்டக்குடி, பட்டுக்கோட்டை
இயற்பெயர்வெங்கடாசலம்
மறுபெயர்இரணியன்
தாய்தையல் நாயகி
தந்தைஇராமலிங்கம்
இறப்பு 1950 மே 05

இளமை வாழ்க்கை

மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த வெங்கடாசலமே, அவரது குடும்பத்தின் முதல் பிள்ளையாக காணப்பட்டமையினால் குடும்ப பொறுப்புகள் பெரிதும் அவரையே சார்ந்தது.

ஆங்கிலேய ஆட்சியின் கொடுமையால் ஏற்பட்ட வறுமையின் காரணமாக, தனது 13வது வயதில் சிங்கப்பூருக்கு ஆங்கிலேயரின் தலைமையில் கங்காணிகளால் வேலைகளுக்காக அழைத்து செல்லப்பட்ட மக்களுடன் பணிபுரிவதற்காக சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து சென்றார்.

சிங்கப்பூருக்கான குடிபெயர்வு

தனது 13 வயதில் பணி புரிவதற்காக சிங்கப்பூருக்கு சென்ற வெங்கடாச்சலம் அங்கு ஆங்கிலேயரின் அடிமைகளாக பணிபுரியும் மக்கள் பல்வேறு துன்பங்களையும், கொடூரங்களையும் அனுபவிப்பதை கண்டு மனம் வருந்தினார்.

கொத்தடிமைகளாக மக்கள் படும் இன்னல்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக உருவாகியது. இவர் தனது 18 வயதில் ஆங்கிலேயருக்கு எதிரான பல போராட்டங்களை செய்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

இந்தியாவிலும் சுதந்திரப் போராட்டங்கள் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டிருந்தன. மகாத்மா காந்தியடிகள் அஹிம்சை வழியிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஆயுதம் தாங்கியும் போராட்டங்களை மேற்கொண்டனர்.

நேதாஜி அவர்கள் தமது போராட்டத்தில் படையணியினர்களை சேர்த்துக் கொள்ளும் முகமாக “இந்திய தேசிய இராணுவம்” எனும் பெயரில் ஒரு படையணியை அமைத்து, அதில் பிரிட்டிஷ் நாடுகளுக்கு எதிரான நாடுகளில் வாழும் இந்திய மக்களை அங்கு சென்று சந்தித்து நேதாஜியின் வீரமான பேச்சுக்களின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடுவதற்காக மக்களை படையணியில் இணைத்தார்.

அவ்வாறு சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட நேதாஜி அவர்களது வீரமான பேச்சினால் கவரப்பட்ட வெங்கடாச்சலம், நேதாஜி உடன் இணைந்து செயற்பட எண்ணினார்.

நேதாஜி அவர்களின் உரையாடல் முடிந்த பின் அவரை தனியாக சந்தித்து “எவ்வாறான முறையில் நாம் ஆங்கிலேயரை வெற்றி ஈட்ட முடியும். போராட்டத்தை எவ்வாறெல்லாம் மேற்கொள்ளலாம்” என சில உத்திகளை தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார்.

இதன் மூலம் கவரப்பட்ட நேதாஜி இவரை இந்தியா படையணியின் தலைவராகவும், மலாயா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் வீரர்களுக்கு பயிற்சியை வழங்கும் தலைவராகவும் நியமித்தார்.

வெங்கடாசலம் போர் வீரர்களுக்கான ஆயுதப் பயிற்சி மற்றும் கொரில்லா போர் பயிற்சி போன்ற பலவகையான பயிற்சிகளை சிறந்த முறையில் பயிற்றுவித்தார். இதனை கண்டு வியந்த நேதாஜியின் இவருக்கு “இரணியன்” என பெயர் சூட்டி போற்றினார்.

பின்னர், இரணியனுக்கு லிங்குவான் யூ என்பவரின் நட்பு கிடைத்தது. ஆங்கிலேயரை வெற்றி கொள்வதற்கு மக்களின் வலுவான ஒற்றுமையே முக்கியம் என்பதை உணர்ந்த இருவரும் சிங்கப்பூரில் (சிங்கப்பூரும் மலேசியாவும் ஒருங்கிணைந்த நாடு) உள்ள அனைத்து அடிமை மக்களையும் ஒன்றிணைத்து தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினார்கள்.

இச்சங்கத்தின் தலைவராக இரணியனும், பொது செயலாளராக லிங்குவான் யூவுமே காணப்பட்டனர். மக்களின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிரான பல போராட்டங்களை மேற்கொண்டனர்.

இவற்றை அறிந்து கொண்ட ஆங்கிலேயர் இவர்களது போராட்டத்தை ஒடுக்கி, லிங்குவான் யூவை கைது செய்தனர். இரணியன் தலைமறைவாக வாழ்ந்தார்.

இந்திய நாட்டில் இவரது பணிகள்

சிங்கப்பூரில் லிங்குவான் யூ கைது செய்யப்பட்ட பின்னர் தலைமறைவாக வாழ்ந்த இரணியன், 1945இல் இந்திய நாட்டிற்கு வந்து தலைமறைவாக இருந்தவாறே, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக செயற்பட்டார்.

இதன் விளைவாக 1947இல் இந்திய நாடு சுதந்திரம் அடைந்தது. இதனை எண்ணி நிம்மதி அடைந்த இரணியனுக்கு இந்திய நாட்டினுள் மற்றுமொரு பாரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதுவே பணம் படைத்த ஜமீன்களதும், நில உரிமையாளர்களிடம் அடக்குமுறைமை ஆகும்.

அதாவது, இந்திய நாட்டினூள் வாழ்ந்த பணம் படைத்த ஜமீன்களும், நில உரிமையாளர்களும் ஏழை மக்களை சாதியின் அடிப்படையில் தாழ்த்தி, தமது அடிமைகளாக நடாத்தி அவர்களை கொண்டு பாரிய வேலைகளை செய்து குறைந்த ஊதியத்தை வழங்கினர்.

இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்திக்கலாயினர். இதனை கண்டு கோபம் கொண்ட இரணியன் ஏழை மக்களை ஒன்று திரட்டி ஜமீன்களுக்கு எதிராக மக்கள் செய்யும் வேலைகளுக்கான தகுந்த ஊதியம் வழங்கும்படி போராட்டம் மேற்கொண்டார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத ஜமீன்கள் மக்களுக்கு அதுவரை காலமும் வழங்கி வந்த உணவுப் பொருட்களை தடைச் செய்தனர். இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடினர். இதனை கண்ட இரணியன் ஜமீன்களிடம் உள்ள தானிய வகைகளையும், பணங்களையும் சூறையாடி ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவினார்.

இரணியனது மரணம்

ஜமீன்களுக்கு எதிராக பல போராட்டங்களையும், அவர்களது உடைமைகளை சூறையாடி மக்களுக்கு கொடுத்தமையினாலும் கோபங்கொண்ட ஜமீன்கள் பொலிஸாரின் உதவியுடன் இவரை கொலை செய்ய எண்ணினர்.

இதன் விளைவாக இரணியனின் நண்பன் மூலம் இவர் தலைமறைவாக இருக்கும் இடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, வடசேரியில் உள்ள சவுக்குத் தோப்பில் வைத்து 1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

You May Also Like :
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
காமராஜர் வாழ்க்கை வரலாறு