பகுத்தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர் கட்டுரை

pagutharivu seerthirutha semmal kalaignar

கலைஞர் எனும் சிறப்பு பெயர் கொண்ட கருணாநிதி அவர்கள் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், சினிமா போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவராவார்.

மேலும் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த ஒருவரே இந்த பகுத்தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர் ஆவார்.

இந்தியா அளவில் மிகப்பெரியதொரு அரசியல் ஆளுமை படைத்தவராக கருணாநிதி அவர்கள் காணப்பட்டார்.

பகுத்தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அரசியல் வாழ்க்கை
  • பெண்கள் நலன் சார் திட்டங்கள்
  • கை ரிக்ஷா ஒழிப்பு
  • புதிய சென்னை
  • முடிவுரை

முன்னுரை

இந்திய அரசியல் வாதிகளில் மிகவும் முக்கியமான ஒருவராக விளங்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி அவர்களே பகுத்தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர் என சிறப்பித்து கூறப்படுகின்றார்.

இவர் சிறு வயது முதலே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் செயல்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கலைஞர் அவர்கள் தன்னுடைய பகுத்தறிவின் அடிப்படையில் பல்வேறு சீர்திருத்தங்களை நம் நாட்டில் மேற்கொண்டுள்ளார்.

அவ்வாறு கலைஞர் அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பற்றியும், கலைஞர் பற்றியும் இக்கட்டுரையில் நோக்கலாம்.

அரசியல் வாழ்க்கை

கலைஞர் அவர்களின் அரசியல் வாழ்க்கை பற்றி நோக்கும் போது அவர் குறிப்பாக 14 வயதில் இருந்தே அரசியலில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அரசியல் சார் செயல்பாடுகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கண்ட ஒருவராகவே இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இந்த வகையில் 1969 தொடக்கம் 2018 வரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக கலைஞர் விளங்கியுள்ளார். அத்தோடு 1969, 1971, 1986, 1996, 2006 போன்ற ஆண்டுகளில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகவும் தன்னுடைய கடமையை சிறப்பாக நடத்தியுள்ளார்.

இவ்வாறாக நோக்குகையில் கலைஞருடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இறப்பு வரைக்கும் அரசியல் சார் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வருகின்றது.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் சமூக நலன் சார் திட்டங்களையும் இவர் நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்கள் நலன் சார் திட்டங்கள்

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக விளங்கிய காலங்களில் பெண்கள் நலன் சார் பல்வேறு திட்டங்களை முன் வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் 1989ஆம் ஆண்டில் பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் வண்ணம் மகளிர் சுய உதவி குழு திட்டத்தினை கொண்டு வந்தார்.

அத்தோடு ஏழைப் பெண்களுக்கான திருமண நிகழ்வு உதவி திட்டம், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான 30% இட ஒதுக்க திட்டம் போன்றனவும் கலைஞர் உருவாக்கிய புதிய சீர் திருத்த திட்டங்களாகவே காணப்பட்டன.

மேலும் கலைஞர் அவர்களின் பகுத்தறிவு சீர்திருத்தத்தை எடுத்துக்காட்டும் வகையில் பெண்களுக்கான சொத்துரிமை எனும் சட்டமும் அவருடைய ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான பல்வேறு பெண் நலன் சார் திட்டங்கள் கலைஞர் அவர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கை ரிக்ஷா ஒழிப்பு

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக கடுமையாற்றிய காலப்பகுதிகளிலே அதிகமான கை ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது மாட்டு வண்டில்களில் மனிதர்களை வைத்து மாட்டு வண்டி இழப்பது போல, கை ரிக்ஷாக்கள் மனிதர்களை வைத்து மனிதர்களே இழுக்கும் வகையில் காணப்பட்டது.

இதனை பகுத்தறிவு ரீதியில் சிந்தித்த கலைஞர் அவர்கள், மாடு போல் மனிதனை வைத்து எழுத்துச் செல்வது ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கானது. என்பதனை உணர்ந்து, இவ்வாறான கை ரிக்ஷாக்களை ஒழித்தார். இவ்வாறான கை ரிக்ஷாக்களுக்கு பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார்.

புதிய சென்னை

1996 ஆம் ஆண்டு நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள் புதியதொரு புரட்சிகரமான சீர்திருத்தத்தை கொண்டு வந்தார்.

அதுவே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகரை சென்னை என்று பெயருக்கு மாற்றி அமைத்தமை ஆகும். அதாவது ஆங்கில மொழியினாலும் இனிய பிற மொழிகளிலும் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகரை ஏனைய அனைத்து மொழிகளிலும் சென்னை என்று தான் அழைக்க வேண்டும் என பெயர் மாற்றம் செய்தார்.

முடிவுரை

இந்திய வரலாற்றில் ஓர் தலைசிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்த முத்துவேல் கருணாநிதி அவர்களின் சீர்திருத்தங்களும் சாதனைகளும் என்றும் மறக்க முடியாதவை ஆகும்.

இந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் தன்னுடைய வயோதிபம் மற்றும் உடல்நலமின்மை ஆகிய காரணங்களினால் இறை அடி சேர்ந்த கலைஞர் அவர்கள் இன்றும் பகுத்தறிவு சீர்திருத்த செம்மலாகவே போற்றப்படுகின்றார்.

You May Also Like:

தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் கட்டுரை

மகளிருக்கு சொத்துரிமை கலைஞரின் சமூக புரட்சி