இந்த பதிவில் “அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.
ஆரம்ப காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த மனிதர்கள் நாகரீகத்தின் காரணமாக நல்ல வாழ்க்கையை மேற்கொள்வதற்கும் தொழில்நுட்பமே காரணமாக இருக்கிறது.
அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலகம் அன்றும் இன்றும்
- அறிவு வளர்ச்சி
- தொழில்நுட்பத்தின் பயன்கள்
- அறிவியல் தொழில்நுட்பத்தின் பாதகங்கள்
- முடிவுரை
முன்னுரை
இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நவீன வளர்ச்சியின் காரணமாக இன்றைய உலகமே சுருங்கிக் காணப்படுகின்றது.
இவ்வுலகம் சுருங்கி காணப்படுவதற்கு நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று சுருக்கமாகக் கூறலாம். ஆதி காலத்தில் இருந்த உலகத்தை விட இன்றைய உலகம் பல மாறுதல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இன்றைய உலகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் தொழில்நுட்பமே துணைபுரிகிறது.
ஒரு மனிதன் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒவ்வொரு செயற்பாட்டிலும் தொழில்நுட்பமே காணப்படுகின்றது. அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உலகம் அன்றும் இன்றும்
பண்டைய காலத்தில் காணப்பட்ட முறைக்கும் தற்போது காணப்படும் முறைக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. ஆரம்ப காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த மனிதர்கள் நாகரீகத்தின் காரணமாக நல்ல வாழ்க்கையை மேற்கொள்வதற்கும் தொழில்நுட்பமே காரணமாக அமைந்தது.
முற்காலத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற விலங்குகளை அடிப்படையாகக் கொண்டே போக்குவரத்து வசதிகள் காணப்பட்டன.
ஆனால் இன்று முச்சக்கர வண்டி முதல் சொகுசு வாகனங்கள் வரை போக்குவரத்துக்கு உதவுகின்றது என்றால் தொழில்நுட்பமாகவே காரணமாகும்.
அறிவு வளர்ச்சி
இன்று நம் அறிவை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் செய்தித் தாள்கள், புத்தகங்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றன அனைத்தும் அறிவியலின் கண்டுபிடிப்புகளே ஆகும்.
நவீன கற்பித்தல் யுத்திகளான கணினி வழிக்கற்பித்தல் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. அறிவின் பகுதியை தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்குத் தருகின்றன.
தொழில்நுட்பத்தின் பயன்கள்
ஆரம்ப காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த மனிதர்கள் நாகரீகத்தின் காரணமாக நல்ல வாழ்க்கையை மேற்கொள்வதற்கும் தொழில்நுட்பமே காரணமாக அமைந்தது.
தொழிநுட்பம் ஊடாக உலகமக்கள் அன்றாடம் தனது வேலைகளை இலகுப்படுத்தி கொள்கிறார்கள். மின் அடுப்பு, துணி துவைக்கும் இயந்திரம் போன்ற பலவற்றை உதாரணமாக கூறலாம்.
மிக விரைவாக பயணங்களை மேற்கொள்வதற்கு பல போக்குவரத்து தொழில்நுட்ப சாதனங்கள் மனிதனுக்கு பெரிதும் உதவுகின்றன, சிறப்பான பொழுதுபோக்கு ஒன்றையும் உருவாக்கி கொள்ள தொலைபேசி, தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்றவை உதவுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பத்தின் பாதகங்கள்
மக்களுக்கு இன்றைய காலத்தில் பெரும் தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கும் நவீன சாதனங்களில் ஒன்றாக ‘ஸ்மாட் போன்’ மாறியிருக்கின்றது.
பல போக்குவரத்து சாதனங்களும் சூழலைப் பெரிதும் பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன. யுத்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் அழிக்கப்பட்டு வருவதுடன், ஊனமுற்றவர்களாக உருவாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கவையாகும்.
முடிவுரை
வாழ்க்கையில் குறைந்த நேரத்தில் கூடிய நலன்களைப் பெற்றுக் கொள்ளவும், விரைவான தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் உதவுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பமானது மனிதனுக்கு பயன்படுவது மட்டுமில்லாமல் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அறிவியல் தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமாக மட்டும் பயன்படுத்தும் போது மனிதகுலம் மென்மேலும் பல நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.
You May Also Like : |
---|
உடல் ஆரோக்கியம் கட்டுரை |
அறிவியல் வளர்ச்சி கட்டுரை |