ஆரோக்கியமான உணவு கட்டுரை

arokiyamana unavu in tamil katturai

மனிதனின் அடிப்படை தோவைகளுள் பிரதானமானதொன்றாக உணவே காணப்படுகிறது. எனவேதான் உணவுத் தோவையானது அனைத்து உயிர்களுக்கும் இன்றியாமையாத தேவையாகும் என்ற அடிப்படையில் ஆரோக்கியமான உணவே சிறந்த உணவாகும். நாம் உண்ணும் உணவுகளானவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாக காணப்படுகின்ற போது அது எமது உடலை பாதுகாக்க உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரோக்கியமான உணவு என்பது
  • ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம்
  • ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு பழக்கவழக்கம்
  • இன்றைய உணவு முறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
  • முடிவுரை

முன்னுரை

உடல் ஆரோக்கியத்தில் பிரதானமான பங்கினை உணவே வகிக்கிறது. அதாவது நீண்ட நாட்கள் நோய்கள் இல்லாது சிறப்பாக வாழ ஆரோக்கிய உணவே அவசியமாகும். நாம் உண்ணும் உணவுகளே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. அதேபோன்று ஊட்டமிக்க உணவுமுறையே நோய்களில்லாத வாழ்விற்கான வழியாகும்.

ஆரேக்கியமான உணவுகள் என்பது

ஆரோக்கியமான உணவுகள் என்பது யாதெனில் நாம் உண்ணும் உணவானது இயற்கையான நிறம், மணம், மற்றும் சுவையை இழக்காமலும் விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கியுள்ளதுமான உணவே ஆரோக்கியமான உணவாகும்.

ஆரோக்கியமான உணவுகளாக பச்சை காய்கறிகள், பழங்கள், பால், முட்டை என பல்வேறு உணவுகள் காணப்படுகின்றன. ஆரோக்கியம் தரும் உணவே உடலிற்கு மருந்தாக அமைகின்றது.

ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம்

இன்று பல்வேறு உணவு வகைகள் காணப்பட்டுள்ள போதிலும் உடலில் சக்தி வலுப்பெறவும் உடலில் உள்ள செல்கள் வளர்ச்சியடையவும் ஆரோக்கியமான உணவே அவசியமாகும்.

அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகள் உடலிற்கு ஆரோக்கியமானதா என்பதனை அறிந்து சாப்பிடுவது சிறந்தாகும். எமது உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கானதொரு சிறந்த வழியாக ஆரோக்கியமான உணவு முறையே காணப்படுகிறது.

நாம் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் அன்றாட வேலைகளை மேற்கொள்ள ஆரோக்கியமான உணவே அவசியமானதாகும்.

ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு பழக்கவழக்கம்

இன்று நாம் உண்ணும் உணவுகளின் தரத்தினை அறிந்து கொள்ளாது பல வகையான துரித உணவுகளை உட்கொள்கின்றோம். இதனூடாக பல்வேறுபட்ட நோய்கள் எம்மை ஆட்கொள்கின்றன.

அதாவது புற்று நோய், உடல் எடை அதிகரித்தல், நீரிழிவு, குடல் சார்ந்த நோய்கள் என பல்வேறு நோய்கள் உருவாகி எம்மை அழிவுக்குட்படுத்துகின்றது.

உடல் ஆரோக்கியத்தை பாதிப்படையும் உணவை உட்கொள்ளாது ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் உணவுகளையே உண்ணுதல் வேண்டும்.

இன்றைய உணவு முறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்

இன்றைய நவீன உலகில் நாம் இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் உண்ணும் உணவுகளானவை பல மாற்றத்திற்கு உட்பட்டே எம்மை வந்தடைகின்றது. அதாவது ஆரோக்கியமிக்க உணவில் நிறம், மணம், சுவை மாறுபடாது.

ஆனால் இன்று உணவில் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்கின்றனர். இதன் காரணமாக இன்றைய உணவினூடாக நோய்களே எம்மை வந்தடைகின்றது.

மேலும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வெகுவிரைவாக விளைவிக்க செயற்கையான வழிமுறைகளையே இன்று பின்பற்றி வருகின்றனர். இவ்வாறாக செயற்கையான முறையிலேயே இன்றைய உணவுமுறை மாறிவருகின்றது.

இத்தகைய மாற்றத்தை இல்லாமல் செய்வதனூடாக மட்டுமே எம்மால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழமுடியும்.

முடிவுரை

உடல் என்பது எமக்குக் கிடைக்கப்பெற்ற பொக்கிஷம் அதனை சிறந்த முறையில் ஆரோக்கியமாக வைத்திருப்பது அனைவரினதும் கடமையாகும்.

அந்த வகையில் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் பக்க விளைவுகளை உணர்ந்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண அனைவரும் முன்வர வேண்டும்.

You May Also Like:

மருந்தாகும் உணவுகள் கட்டுரை

இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும்