உலக அகதிகள் தினம் | ஜூன் 20 |
World Refugee Day | June 20 |
உலகில் பஞ்சம், பட்டினி, வறட்சி, போர், வன்முறைகள், இயற்கை சீற்றங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்.
உலக அகதி நாள் கொண்டாடப்படும் நாள்
சர்வதேச ரீதியில் யூன் 20 உலக அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலக அகதிகள் தினம் உருவான வரலாறு
யூன் 20 முதலில் ஆபிரிக்க அகதிகள் தினமாக கொண்டாடப்பட்டது. பின்னர் 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தீர்மானத்தின் படி ஆபிரிக்க அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யூன் 20 உலக அகதிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உலக அகதிகள் தினம் நோக்கம்
எங்கு போவதென்று தெரியாமல் பிறந்த மண்ணை விட்டு பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து பல துன்பங்களுக்கு ஆளாகி வாழ்ந்து வரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுதும் கொண்டு செல்லும் நோக்கில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
அகதிகளுக்காக ஐ.நா உயர் நாயகத்தின் பங்களிப்பு
2ம் உலகப் போரின் போது ஏராளமானோர் வெளியேறினர். அப்போதே அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான வேலைகளை செய்வதில் ஐக்கிய நாடுகள் சபை முக்கிய பங்காற்றுகின்றது.
ஐ. நா உயர் ஆணையகம் அகதிகளை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் அரசின் அழைப்பினாலோ அல்லது ஐ. நாவின் அழைப்பினால் அகதிகளை மீட்பதற்கோ அல்லது மீள் குடியமர்வதற்கோ உதவுவதை கருப்பொருளாக கொண்டுள்ளது.
அகதிகள் புள்ளி விபரவியல் ஆய்வு
2009 ம் ஆண்டு யூன் மாதம் சட்டத்திற்கு புறம்பான துன்புறுத்தல்கள், கலவரங்கள் காரணமாக உலகில் 42 மில்லியன் மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக BBC அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ. நா வெளியிட்ட புள்ளி விபரத்தின் படி உலகம் முழுதும் 2 கோடி 50 லட்சம் அகதிகள் உள்ளனர். அவர்களில் 68% அகதிகள் 5 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
38 லட்சம் அகதிகளுக்கு துருக்கி அடைக்கலம் கொடுத்துள்ளது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 4 வருடங்களாக துருக்கி முதலிடத்தில் உள்ளது.
அகதிகளுக்காக நாம் செய்ய வேண்டியவை
ஒரு மனிதன் தான் பிறந்த மண்ணை விட்டு வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவது என்பது மிகவும் வேதனைக்குள்ளானது.
துன்பமான சூழ்நிலையில் வரும் அகதிகளின் தேவை, அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கென முறையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத சூழலில் அவர்களுக்கென அரசு அங்கீகாரம் கொடுத்து அவர்களையும் தமது நாட்டு மக்கள் போல் ஆதரித்து அவர்களின் வாழ்க்கையில் ஒரு விடிவு காலம் வர பாதையமைக்க வேண்டும்.
You May Also Like : |
---|
உலக இசை தினம் |
உலக பூமி தினம் |