நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றானது நாம் ஒவ்வொருவரும் எண்ணும் எண்ணங்கள் எப்போதும் சிறந்தவையாகவே காணப்படல் வேண்டும். அப்போதே எம்மால் இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியும்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- எண்ணம் போல் வாழ்வு
- எண்ணங்களின் வலிமை
- நேர்மறை எண்ணங்களின் பயன்கள்
- விவேகானந்தரின் உயர்ந்த எண்ணங்கள்
- முடிவுரை
முன்னுரை
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற குறலானது நாம் எண்ணும் எண்ணங்கள் என்றும் உயர்ந்தவையாகவே காணப்படல் வேண்டும் நாம் வெற்றியடைவதற்கான சிறந்த வழி எதனையும் உயர்வாக எண்ணுதல் வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது. தோல்வியை கண்டு துவண்டு விடாது அதே உயர்ந்த எண்ணத்திலே இருப்பது எமது முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாகும்.
எண்ணம் போல் வாழ்வு
ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி சிறந்த எண்ணங்களே ஆகும். அதாவது நாம் எதுவாக நினைக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். ஏனெனில் எண்ணங்கள் என்றும் வலிமையானவையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் எண்ணுவது எம்மை உயர்த்த உதவும்.
கெட்ட எண்ணங்கள் எம்மை தவறானவற்றிற்கு இட்டுச் செல்லும் அந்த வகையில் நாம் எப்போதும் நல்ல எண்ணங்களை எண்ணுவது எம்மை உயர்த்த உதவும் கெட்ட எண்ணங்கள் எம்மை தவறானவற்றிற்கு இட்டுச்செல்லும் என்ற வகையில் என்றும் புதிய நல்ல எண்ணங்களே மாற்றத்திற்கு வழியமைக்கும்.
எண்ணங்களின் வலிமை
எண்ணங்களின் வலிமையானது எம்மால் சாதிக்க முடியும் என்பதை நிகழ்த்திக் காட்ட துணைபுரியும்.
அதாவது ஒரு விடயத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது தோன்றுகிறதோ அன்றே அவர் அவ்விடயத்தில் வெற்றி பெற்று விட்டார்.
அந்த வகையில் ஓர் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது ஒருவரது வாழ்வில் முடியாது என்ற எண்ணமும் தோல்வி பயமும் இருக்க கூடாது.
பல தோல்விகள் வந்தபேதிலும் முடியும் என்ற எண்ணமே எமது இலட்சியத்தை அடையும் வழியாகும். நேர் மறையான எண்ணங்களின் சக்தி நம்மை சிறந்தவர்களாக மாற்றுவதற்கு வித்திடும்.
நேர்மறை எண்ணங்களின் பயன்கள்
நாம் நேர்மறை எண்ணங்களை எண்ணுகின்றபோதே எமது நாள் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், சிறந்ததாகவும் காணப்படும். நாம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உந்துதலாக இருப்பது நேர்மறை எண்ணங்களே ஆகும்.
நேர்மறை எண்ணமானது எமக்கு ஏற்படும் போது பல பிரச்சினைக்கு தீர்வாக காணப்படும். மனஅழுத்தம் ஏற்படாது, எதிலும் சிந்தித்து செயற்படும் ஆற்றல், எப்பொழுது எமக்கு நல் விடயங்களே நடத்தல், மகிழ்ச்சியாகக் காணப்பட உதவுதல், அன்பு என பல நல் விடயங்கள் எம்மிடம் வளரும்.
எனவே தான் எதிர்மறையாக சிந்திக்காது நேர்மறையாக சிந்திப்பதே எமது வெற்றிக்கான சிறந்த வழியாகும்.
விவேகானந்தரின் உயர்ந்த எண்ணங்கள்
விவேகானந்தர் எமது எண்ணங்களின் தன்மையை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றார். அதாவது எழுமின், விழுமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் என கூறியுள்ளார்.
அதாவது எமது குறிக்கோளை நாம் அடையும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இதனூடாக எமது குறிக்கோளை எம்மால் அடைந்து கொள்ள முடியும் என விளக்குகிறார்.
மேலும் ஒருவர் என்றும் தனது குறிக்கோளை உயர்வாககே கொண்டவராகவே காணப்பட வேண்டும். இதுவே எமது வாழ்வில் பல சிறந்த மாற்றத்திற்கு வழிவகுக்கும் என உயர்ந்த எண்ணங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
முடிவுரை
நாம் வெற்றியை நேக்கி செல்ல வேண்டுமாயின் அதற்கு உயர்ந்த எண்ணங்களும் அதனுடனான முயற்சியும் அவசியமாகும். எந்த ஒரு மனிதன் சிறந்த எண்ணங்களை வளர்க்கின்றானோ அவனது வாழ்வானது சிறப்பானதாகவே காணப்படும்.
You May Also Like: