இந்த பதிவில் தமிழர்களின் தனித்துவமான விளையாட்டுக்களில் ஒன்றான “ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு தற்காலத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றது.
ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாறு
- பெயர்க்காரணம்
- விஞ்ஞானிகளின் வியப்பு
- ஜல்லிக்கட்டின் சிறப்புகள்
- முடிவுரை
முன்னுரை
தமிழர்கள் வீர விளையாட்டுக்களின் மூலம் தங்களது வீரத்தினை வெளிப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக ஜல்லிக்கட்டு காணப்படுகின்றது.
ஜல்லிக்கட்டானது ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகின்றது. தமிழகத்தின் பல இடங்களிலும் இவ்விளையாட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
இளம் காளையர்கள் நிஜக் காளைகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்துவர். ஜல்லிக்கட்டின் வரலாறு⸴ அதன் சிறப்பம்சங்கள் போன்ற பலவற்றையும் இக்கட்டுரையில் காண்போம்.
வரலாறு
ஜல்லிக்கட்டு பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் நிகழ்ந்ததாக சான்றுகள் உள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களில் ஏறுதழுவுதல் என்ற சொல் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராக பயன்படுத்தப்பட்டுள்ளன.
கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவல் என்று சிறப்பித்துக் கூறப்படுவதையும் காணலாம். கிபி 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவுதல் வழக்கத்தில் இருந்தது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக புதுடெல்லியில் உள்ள தேசிய கண்காட்சியில் சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
பெயர் காரணம்
ஜல்லிக்கட்டு என்பது தற்காலத்தில் வந்த பெயர் ஆகும். அந்த வகையில் சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தை குறிக்கின்றது. புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் இப்போதும் வழக்கத்தில் உள்ளது.
மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சல்லிக்காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடப்படும் வழக்கம் இருந்தது. இதனால் தான் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது. பின்னர் அதுவே பேச்சுவழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்டது.
விஞ்ஞானிகளின் வியப்பு
இந்திய நாட்டின் ஜல்லிக்கட்டு விளையாட்டானது பெரிதும் வியந்து பார்க்கப்படுகின்றது. உலகளவில் இந்திய நாட்டின் பசுக்களின் பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
அதிலும் புளியங்குளம் இளம் பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளினால் நிரூபனம் செய்யப்பட்டுள்ளமை மேலும் சிறப்பிற்குரியதாக உள்ளது.
ஜல்லிக்கட்டின் சிறப்புகள்
ஜல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றி இன்று பலரும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டில் வென்றவர் பணத்தைப் பரிசாகப் பெறுவதுண்டு.
தமிழர்களின் சிறப்பு பண்டிகைகளில் ஒன்றான தைத் திருநாளின் மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று ஐல்லிக்கட்டு நடத்தப்பட்டு பெரும் விழாவாக கொண்டாடப்படுகின்றது.
விளையாட்டானது கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கின்றமை சிறப்புக்குரியதாகும்.
மேலும் அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும் மழையில்லா வரட்சி காலங்களிலும் மற்றும் பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகின்றோம் என வேண்டுதல்கள் செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவுரை
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு தற்காலத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றது.
தமிழரின் அன்பின் அடையாளம் விருந்தோம்பல் என்றால் தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு ஆகும். பாரம்பரியத்தைப் பேணிக்காப்போம் வீரத்தைப் பறைசாற்றுவோம்.
You May Also Like: |
---|
திருவள்ளுவர் பற்றிய கட்டுரை |
அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு |