ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நேரம் மிகவும் மதிப்பு மிக்க விடயமாகும். நாம் நேரத்தை மதிக்கின்றோம் என்றால் மகிழ்ச்சியான ஆரோக்கியமான மற்றும் செல்வாக்கான வாழ்க்கையை பெற்றுக் கொள்கின்றோம் என்பதே அர்த்தமாகும்.
யாரிடமிருந்தும் திரும்பிப் பெறவோ அல்லது திருடவோ முடியாத விலைமதிப்பற்ற பொக்கிஷமே நேரம் ஆகும்.
நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நேரத்தின் மகிமை
- நேர மேலாண்மை
- காலமும் கடமையும்
- நேரத்தை நிர்வகிப்பதற்கான வழிகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதர்களில் சிலர் கவலையே இல்லாமல் வீணாகச் செலவழிக்கும் ஒன்றுதான் நேரம். நேரம் இருக்கின்றது பார்த்துக் கொள்ளலாம் என்று வீணடிப்பவன் முட்டாள்.
நேரத்தை வீணடிக்கும் போது கடிகாரத்தை பார்த்தால் தெரியும் ஓடுவது முள் அல்ல வாழ்க்கையின் பொன்னான நாட்கள் என்று.
இழந்த இடத்தை நாம் முயற்சியால் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் இழந்த காலத்தை பிடிக்க முடியாது. எனவே நேரம் பொன்னானது என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நேரத்தின் மகிமை
பணத்தை விட நேரம் விலைமதிப்பற்றதாகும். பணம் பயன்படுத்திய பின்பு அதை மீண்டும் சம்பாதிக்கலாம் ஆனால் கடந்த காலம் திரும்பி வராது.
“காலமும் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப காலம் யாருக்காகவும் காத்திருப்பதில் என்பதனை உணர்ந்து, நம் வாழ்நாளில் பொன்னான நாட்களை வீணடிக்காது செயற்பட்டால் வாழ்வில் முன்னேறலாம்.
வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது. பணம் சம்பாதிப்பது தான் நமக்கு தேவையான எல்லாமே என்று மக்கள் நம்புகின்றார்கள். ஆனால் இந்த அவசர வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் மற்றும், பிற மூத்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்ட சிறப்புத் தருணங்களை மறந்து விட்டோம்.
எனவே எமது இலக்குகளை சரியான நேரத்தில் அடைந்து கொள்வதுடன் சிறிய தருணங்களையும் அனுபவிக்கவும் மற்றும், நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
நேர மேலாண்மை
நேர மேலாண்மை என்பது நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். நமது இலக்குகளை அடையவும், மேலும் நிறைவான வாழ்க்கையை வாழவும் உதவும் ஒரு முக்கிய திறமையே நேர மேலாண்மையாகும்.
திறமையான நேர மேலாண்மையானது வரையறுக்கப்பட்ட நேரத்தை சரியாகப் பயன்படுத்தவும், வேலை, ஓய்வு மற்றும் சுய முன்னேற்றத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றது.
நேரத்தை திறம்பட பயன்படுத்துவது நமது மனம் மற்றும், உடல்நலத்தையும், ஒட்டுமொத்த வாழ்க்கையைப் பராமரிப்பதிலும் இன்றியமையாததாகும்.
நேரத்தை நிர்வகிப்பதற்கான வழிகள்
- தினசரி திட்டத்தை பயன்படுத்துதல்.
- தெளிவான மற்றும், அடையக்கூடிய இலக்குகளை அமைத்தல்.
- நேரத்தை வீணடிப்பவைகளைக் கண்டறிந்து நீக்குதல்.
- கவனச் சிதறல்களில் கவனம் செலுத்தி அதனை குறைத்தல்.
காலமும் கடமையும்
காலமும் கடமையும் கண் போன்றது. காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது எனப் பெரியவர்கள் கூறுவர் இதனை “இளமையில் கல்” “பருவத்தே பயிர் செய்” போன்ற பழமொழிகள் உறுதிப்படுத்துகின்றன.
ஒருவனுக்கு இரண்டு முக்கிய கடமைகள் உள்ளன. வீட்டு கடமை, நாட்டு கடமை என்பவையே அவை இரண்டுமாகும்.
இக்கடமைகளைக் காலம் அறிந்து ஆற்ற வேண்டும். காலமும் கடமையும் கண் போன்றவை ஆதலால் அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முடிவுரை
மனிதனானவன் வாழ்கின்ற வாழ்க்கை நேரம் கடந்துவிடும் போது வாழ்க்கையும் நம்மைவிட்டுக் கடந்து விடுகிறது. எனவே நேரம்தான் வாழ்க்கை வாழ்க்கைதான் நேரம் என்றால் அதுமிகையல்ல. வெற்றிகரமான வாழ்க்கையின் அவசியமானது நேரத்தை முக்கியத்துவப்படுத்தி விடுகிறது.
எனவே நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பது என்பதை உணர்ந்து நேரத்தைப் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்வதன் மூலம் வாழ்வை வளமாக்கலாம்.
You May Also Like: