பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை

pandaya tamil samugam katturai in tamil

பண்டய தமிழ் சமூகமானது பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டு திகழ்கின்றது. கலை, இலக்கியம், கலாச்சாரம், வீரம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய ஒரு சமூகமாகும்.

பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பண்டய தமிழ் சமூகத்தின் விருந்தோம்பலும் உணவு முறையும்
  • தொழில் முறைமை
  • கோத்திரங்கள் அல்லது குலங்கள்
  • கலையும் இலக்கியமும்
  • முடிவுரை

முன்னுரை

இன்றய தமிழ் சமூகமானது இலக்கியம், பொருளாதாரம் என பல்வேறு வகையில் சிறந்து விளங்க காரணம் பண்டைய சமூகமே ஆகும்.

அதாவது இன்று காணப்படும் சிறப்பு மிக்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடத்தைகள், கலாச்சாரங்கள், விழாக்கள் போன்றன தமிழ் சமூக மக்களின் வாழ்வியலேயே வெளிப்படுத்தி அமைந்துள்ளன.

பண்டைய தமிழ் சமூகத்தின் விருந்தோம்பலும் உணவு முறையும்

பண்டைய தமிழ் சமூகத்தில் விருந்தோம்பல் என்பது அறியாதவர்களை அழைத்து உணவழித்து உபசரிப்பதாகும். இவ்வாறாக பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தமிழர்களின் அறமாக காணப்படுகிறது.

அதாவது தான் மட்டும் உண்ணாது பகிர்ந்து உண்ண வேண்டும் என சிறுபாணற்படை எனும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது பண்டைய தமிழ் சமூகத்தின் விருந்தோம்பலினை எடுத்து காட்டுகிறது.

அதே போன்று திருவள்ளுவர் விருந்தோம்பல் பற்றி கூறுகையில் விருந்தினர்கள் அழைத்து வெளியில் அமரச்செய்து விட்டு தான் உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என கூறியுள்ளார்.

இவற்றிலிருந்து பண்டைய தமிழ் சமூகத்தில் விருந்தோம்பலானது பகிர்ந்து உண்ணுகின்ற முறைமையாகவே காணப்பட்டுள்ளது.

உணவு முறைமை

பண்டைய தமிழ் சமூகத்தினரின் சிறப்பு மிக்க உணவாக சோறு காணப்பட்டதோடு பாலப்பழம், வழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களை உண்ணக்கூடியவர்களாகவும் காணப்பட்டார்கள்.

மேலும் அக்கால சமூகத்தினரிடையே ஆடு, மாடு, முயல், கோழி என ஊண் உண்ணும் பழக்கமும் காணப்பட்டது.

தொழில் முறைமை

பண்டைய காலத்தில் சிறப்பு மிக்க தொழில் முறைமையாக விவசாயமே காணப்பட்டது. மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதோடு மட்பாண்ட கைத்தொழில், நெசவுத்தொழில், உள்நாட்டு வாணிபம், தோல்வேலை என பல்வேறு தொழில்கள் சிறப்புற்று விளங்கிய சமூகமாகவே திகழ்ந்தார்கள்.

கோத்திரங்கள் அல்லது குலங்கள்

பண்டைய கால தமிழ் சமூக மக்கள் தாம் செய்து வந்த தொழிலுக்கு ஏற்ப பல கோத்திரங்களாக காணப்பட்டனர். அதாவது இடையர், உழவர், கொல்லர், தச்சர், வணிகர், என பலவாறாக காணப்பட்டனர்.

இவ்வாறான கோத்திரங்களானவை இன்றும் கூட தமிழகத்தில் பண்டைய கால தமிழ் சமூகத்தை ஒட்டியே பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கலையும் இலக்கியமும்

பண்டைய காலத்தில் இயல், இசை, நாடகம், போன்ற முத்தமிழ்கள் வளர்க்கப்பட்டதோடு மாத்திரமல்லாது அக்காலப்பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களானவர்கள் கூத்துக்கலிலும் இசையிலும் பல்வேறு திறன் படைத்தவர்களாகவே காணப்பட்டனர்.

அது மாத்திரமல்லாது பல்வேறு கலையாற்றலை கொண்டு மன்னர்களிடம் பல்வேறு பரிசில்களை பெற்று வந்த பெருமை பண்டைய தமிழ் சமூகத்தினரையே சாரும். இவர்கள் இலக்கியத்திலும் திறன் பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

அதாவது சங்ககாலம் மற்றும் சங்கமகருவிய காலப்பகுதிகளில் தோற்றம் பெற்ற திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் போன்ற நூல்களானவை இலக்கியங்களில் சிறப்புற்று விளங்கியமைக்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

முடிவுரை

பண்டைய கால சமூகத்தினருடைய வாழ்வியல் அம்சங்களை பண்டைய இலக்கியங்கள் வாயிலாகவே அறிய முடிவதோடு மட்டுமல்லாது இன்றும் சில விடயங்கள் பண்டைய சமூகத்தை அடியொட்டியே இடம் பெறுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை

தமிழ் மொழி வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு கட்டுரை