இந்த பதிவில் “புனித சவேரியார் வாழ்க்கை வரலாறு” பதிவை காணலாம்.
பல நாடுகளில் முக்கியமாக இந்தியாவில் கிறிஸ்தவ மதம் வளர முக்கிய பங்காற்றியவர்களில் இவரே முதன்மையானவர் ஆவார்.
புனித சவேரியார் வாழ்க்கை வரலாறு
பெயர்: | புனித பிரான்சிஸ் சவேரியார் |
பிறந்த திகதி: | ஏப்ரல் 7, 1506 |
பிறந்த இடம்: | சவேரி, நவார் இராச்சியம், (எசுப்பானியா) |
பிறந்த நாடு: | ஸ்பெயின் |
தந்தை: | யுவான் தெயாசு |
தாய்: | டோனா மரியா |
இறப்பு: | டிசம்பர் 3,1552 |
அறிமுகம்
உலகமே போற்றுபவர்தான் புனித சவேரியார் ஆவார். இந்திய நாட்டில் கிறிஸ்தவ மதம் வளர முக்கிய பங்காற்றியவர்களில் இவரே முதன்மையானவர் ஆவார்.
ஒருவர் உலகை தனதாக்கிக் கொண்டாடும் தனது ஆன்மாவை இழந்து விட்டாலும் அவனுக்கு கிடைக்கும் பயன் என்ன? என்ற வார்த்தையால் மனமாற்றம் அடைந்து இறைவனை அடைந்து பின் இறைவனை ஏற்று இறை பணியை மேற்கொண்ட புனிதர் தான் புனித சவேரியார்.
ஆரம்ப வாழ்க்கை
சொர்க்கத்தின் நிழல் படிந்த ஸ்பெயின் நாட்டின் வட எல்லையில் ஒரு பிரம்மாண்டமான மலைப்பகுதி உள்ளது.
அந்த மலை அடிவாரத்தில் அமைந்த மாவட்டம் தான் நவாப் அங்கு புனித பிரான்சிஸ் சவேரியார் 1506 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் புகழ்மிக்க சவேரியர் அரண்மனையில் யுவான் தெயாசு மற்றும் டோனா மரியா என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் ஓர் பிரபுக்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரது தந்தை அந்நாட்டின் அரசவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றி வந்தார். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலேயே வாழ்ந்தார்.
சவேரியர் தனது பள்ளிப் படிப்பை முடித்ததும் உயர் கல்வியைப் படிக்க விரும்பினார். இதன் காரணமாக உலகப் புகழ்பெற்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் இறையியல் கற்றார்.
1530 ஆம் ஆண்டில் மெய்யியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1530 தொடக்கம் 1634 வரை அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் 39 வயது நிரம்பிய இலொயோலா என்ற இஞ்ஞாசியார் என்பவரைச் சந்தித்தார். இஞ்ஞாசியார் குருவாவதற்காக அங்கு பயின்று கொண்டிருந்தவர் ஆவார்.
சவேரியர் ஒரு மிகப்பெரிய பேராசிரியராக மாற வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு இருந்தார்.
இவ்வாறு அவர் உலக காரியங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டதைப் பார்த்த இஞ்ஞாசியார் அடிக்கடி சவேரியாரிடம் “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் வரும் பயன் என்னˮ என்ற இயேசுவினுடைய வார்த்தையைக் கூறி வந்தார்.
இதைக் கேட்ட சவேரியார் மனதில் மாற்றம் நிகழ்ந்தது. தானும் ஒரு குருவாக வேண்டும் இறைமகன் இயேசுவின் பணியை அவரது அன்பு⸴ பாசம்⸴ பெருமை⸴ விட்டுக்கொடுப்பு⸴ இரக்க குணம் போன்றவற்றை உலகம் எல்லாம் அறிவிக்க வேண்டும் என எண்ணினார். இதன்படி இயேசு சபை தொடங்கி இறை பணி செய்ய முடிவு செய்தார்.
குருத்துவமும் இந்திய வருகையும்
இத்தாலியின் வெனிஸ் நகரில் 1537 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் நாள் சவேரியார் அருள் பணியாளராகத் தெரிவு செய்யப்பட்டார். வெனிஸ்ஸில் 30ஆம் நாள் தனது முதலாவது திருப்பலியை நிறைவேற்றினார்.
இவரும் இவருடைய நண்பர்களும் உரோம் நகர் திருத்தந்தை மூன்றாம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தார்கள்.
இவ்வேளையில் போர்த்துகீசிய அரசன் ஆசியாவில் தனது புதிய காலனி நாடுகளில் நற்செய்தியை அறிவிப்பதற்கு அருட் பணியாளர்களைத் தந்துதவுமாறு திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இஞ்ஞாசியார் தனது தோழர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்த போது அவர் நோய்வாய்ப்பட்ட காரணத்தால் அவருக்குப் பதிலாக சவேரியாரை தேர்ந்தெடுத்தார்.
1940 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் சவேரியார் இந்தியாவுக்குச் செல்வதற்காக உரோம் நகரில் இருந்து முதலில் விஸ்பன் நாட்டுக்கு சென்றார். அங்கு ஓர் ஆண்டு வரை பணி செய்தார். பின் இந்தியாவிற்கு கப்பல் பயணத்தை மேற்கொண்டார்.
1542 கோவை வந்தடைந்தவர் முதல் நான்கு மாதங்கள் கோவையிலும் அதனைத் தொடர்ந்து கேரளா⸴ தமிழகத்தின் தூத்துக்குடி⸴ கன்னியாகுமரி⸴ கோட்டையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பணியாற்றினார்.
இயேசு கிறீஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும்⸴ நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். சிறைக் கைதிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
மணப்பாட்டில் சவேரியார் தங்கியிருந்த குகை மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு என்பன இன்றும் அழியாமல் உள்ளன. கடற்கரையில் உள்ள இக்கிணறானது உப்பில்லாமல் குடிநீராக இருப்பது அற்புதமே. இந்தியாவிலிருந்து பின் ஐப்பானுக்குச் சென்று அங்கும் இறைபணியாற்றினார்.
மரணமும் அழியா உடலும்
சவேரியார்க்கு சீனா சென்றும் பணியாற்ற வேண்டுமென்ற ஆசை இருந்தது. அதன்படி 1952ஆம் ஆண்டு சீனாவிற்குப் புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் நோயுற்றார்.
1952ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் நாள் தனது கையில் இருந்த சிலுவையைப் பிடித்தவாறே “ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்” எனக் கூறியபடியே தனது உயிரை இறைவனடி சேர்த்தார்.
இறந்த புனிதரின் உடல் முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது எலும்பையாவது இந்திலா கொண்டுவர வேண்டுமெனத் தோண்டிய போது உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டதோ அவ்வாறே இருந்தது.
துர்நாற்றமோ⸴ மாற்றமோ இல்லாமல் இருந்து அதிசயம் நிகழ்ந்தது. “பாம் இயேசு தேவாலயத்தில்ˮ கேரள அரசின் உதவியுடன் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
புனித சவேரியாரின் ஆலயங்கள் இந்தியாவின் பல இடங்களிலுண்டு. உலகப் போக்கில் வாழ்ந்த யாருமே நற்செய்தி அறிவிக்க முன்வராத சூழலில் தூய சவேரியார் அவர்கள் நற்செய்தி அறிவிக்க முன்வந்ததார்.
அதனால்தான் கடவுள் அவருடைய உடலை இன்று வரைக்கும் அழியாமல் காத்து வருகின்றார் என்றால் அது யாராலும் மறுக்க முடியாத அற்புத நிகழ்வேயாகும்.
You May Also Like: