எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை

enathu parvaiyil suthanthira india katturai in tamil

இந்த பதிவில் “எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.

தமது விடாமுயற்சியனாலும் புத்தாக்க சிந்தனைகளாலும் தமது நாட்டை முன்னேற்றி செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும்.

எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சுதந்திரத்துக்கான போராட்டம்
  • போதைப்பொருள் கலாச்சாரம்
  • நாகரீக அடிமைகள்
  • இணையவலையில் இளைஞர்கள்
  • முடிவுரை

முன்னுரை

நமது முன்னோர்களது நேரிய கடும் போராட்டத்தின் விளைவாக தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல இன்னல்களை எதிர்கொண்டு போராடியதனால் தான் இன்றைய தலைமுறையினர் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இன்றைய சுதந்திர இந்தியாவில் இந்த சமூகத்தினர் அந்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாகும். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலை பற்றி காண்போம்.

சுதந்திரத்துக்கான போராட்டம்

ஆங்கிலேயர்களது ஆட்சியில் இந்திய மக்கள் எண்ணு கணக்கில்லாத பல கொடுமைகளை அனுபவித்தனர். ஒரு அடிமைகள் போல சொந்த நாட்டிலேயே வாழ வேண்டிய நிலையானது ஏற்பட்டது.

தமக்கான உரிமைகளை இழந்தனர், கல்வி பொருளாதாரம் அரசியல் என்பனவற்றில் பின் தங்கியிருந்தனர்.

இவற்றினை கண்டு பொறுத்து கொள்ள முடியாமல் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் கடுமையாக போராடி 1947 இல் முழு சுதந்திர நாடாக இந்தியாவை மாற்றினர்.

போதைப்பொருள் கலாச்சாரம்

இந்த வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் மறந்து விட்ட இன்றைய காலத்து இளம் சமுதாயத்தினர் ஆங்கிலேயர்களது தரம் கெட்ட கலாச்சாரங்களுக்கு அடிமையாகி விட்டனர்.

உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மதுபானம் மற்று புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி இந்த சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் விரோதிகளாக மாறி வருகின்றனர்.

பல விதமான குற்ற செயல்களுக்கு காரணமாக இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

நாகரீக அடிமைகள்

தொன்று தொட்ட இந்தியர்களின் தனித்துவமான கலாச்சாரங்களை மறந்து விட்டு இன்று மேற்கத்தைய கலாச்சார மோகத்துக்கு அவர்கள் அடிமையாகி விட்டனர்.

ஒழுக்கமான பழக்க வழக்கங்கள், ஆடை அணிகலன்கள் ஆகியவற்றை மறந்து இளம் சமுதாயத்தினர் நாகரீகம் எனும் போர்வையில் ஒழுக்கமற்று இருப்பதனை நாம் காணலாம்.

இது அவர்களை தவறான பாதையில் கொண்டு செல்வதுடன் பல விதமான சமூக பிரச்னைகளையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறான செயல்கள் தமது நாட்டுக்கும் தமது முன்னோர்களுக்கும் செய்யும் பாரிய துரோகமாக இருக்கும்.

இணையவலையில் இளைஞர்கள்

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் அனைவருடைய கைகளிலும் அலைபேசி வந்து விட்டது.

இதனால் இன்றைய காலத்து இளைஞர்கள் தமது கல்வி மற்றும் பொறுப்புக்களை மறந்து சமூக வலைத்தளங்களில் அதிகளவான நேரத்தை விரயம் செய்கின்றனர்.

கல்வியிலும் விளையாட்டிலும் கவனம் இல்லாது தேவையற்ற விடையங்களில் அதிக நாட்டம் காட்டுகின்றனர். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

“இனி வரும் காலம் இளைஞர்கள் காலம்” என்ற டாக்கடர் அப்துலகலாம் உடைய கனவுக்கு செயல் கொடுக்கும் படியாக இன்றைய சுதந்திர இந்தியாவின் இளைஞர்கள் இருக்க வேண்டும்.

தமது விடாமுயற்சியனாலும் புத்தாக்க சிந்தனைகளாலும் தமது நாட்டை முன்னேற்றி செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும். இதுவே இந்தியாவின் சுதந்திரத்துக்கு கிடைத்த பாரிய வெற்றியாக இருக்கும்.

You May Also Like :
விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை