இந்த பதிவில் “எனது முன்னேற்றத்தில் எனது ஆசிரியர்கள் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.
எனக்கு மட்டுமல்லாது சமுகத்தில் உள்ள அனைவரினதும் முன்னேற்றத்தில் ஆசிரியர்களினுடைய பங்களிப்பு உள்ளது.
எனது முன்னேற்றத்தில் எனது ஆசிரியர்கள் கட்டுரை – 1
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்பது எமது மூதாதையர்களின் கருத்து ஆகும். இதற்கு ஏற்றாற் போல் தான் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான செயல் உள்ளது. வெறும் மண்ணாக உள்ள மாணவனை சிலையாக வடிவமைத்து தருபவர்கள் ஆசிரியர்களே.
ஒவ்வொரு மனிதனுடைய அறிவார்ந்த வளர்ச்சியிலும் ஆசிரியர்களினுடைய அர்ப்பணிப்பானது இலைமறை காயாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பாலர் பாடசாலை தொடக்கம் இன்று வரை எனது முன்னேற்றத்தில் எனது ஆசிரியர்களின் பங்களிப்பானது அளப்பரியதாகும். பாலர் பாடசாலை செல்லும் போது நான் மிகவும் சிறு பிள்ளையாகவும் எனது தயாரிடமிருந்நு பெற்றுக் கொண்ட மிக சொற்ப அறிவையும் மாத்திரமே கொண்டிருந்தேன்.
ஆனால் இன்று தமிழ், ஆங்கிலம்ஆகிய மொழிகளை வாசிக்கவும் எழுதவும் என்னை வளப்படுத்தியவர்கள் எனது ஆசிரியர்களே ஆவர்.
அது மட்டுமல்ல காலையில் உதிக்கும் சூரியன் இரவினுள் ஒளிரும் நிலவு ஆகியவை தொடர்பாக நான் கதை வழியாக கேட்ட விடயங்களை எல்லாம் விஞ்ஞான ரீதியான விளக்கங்களுடன் புரிய வைத்து அறிவுச்சுடர் ஏற்றியவர்கள் ஆசிரியர்களே.
கல்வியில் மட்டுமல்லாது ஆன்மீகம், ஒழுக்கம் போன்ற ஏனைய விடயங்களில் நான் முன்னேற்றமடைவதற்கும் ஆசிரியர்களே அடிப்படை காரணங்களாக உள்ளனர். அத்துடன் சமுகத்தில் ஒரு நல்ல பிரஜையாக நான் வாழ்வதற்கு என்னை வழிப்படுத்தியவர்கள் எனது ஆசிரியர்கள் தான்.
எனவே தான் நான் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றி படிகளை கடக்கின்ற போதும் அதற்காக என் ஆசிரியர்கள் செய்த ஊக்குவிப்புக்களையும் வழிப்படுத்தல்களையும் நினைவு கூற விரும்புகின்றேன்.
எனது முன்னேற்றத்தில் எனது ஆசிரியர்கள் கட்டுரை – 2
ஆசிரியர்கள் எங்களை ஒழுக்கமுள்ளவரகளாகவும் புத்தி ஜீவிகளாகவும் உருவாக்குவதற்கு சில வேளைகளில் கடுமையாக நடத்தியிருக்க கூடும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆசிரியருடன் நாம் கசப்பான அனுபவத்தை கொண்டிருக்க கூடும்.
இவை அனைத்தையும் கடந்து வாழ்க்கையில் முன்னேறியவுடன் ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் நாம் ஏறி வந்த ஒவ்வொரு வெற்றிப் படிகளும் ஆசிரியர்களுடைய வழிகாட்டலினாலும் அறிவுறுத்தலினாலும் உருவாக்கப்பட்டவை என்பது உறுதியான விடயமாகும்.
பாடசாலைக்கு சென்ற காலம் தொட்டு இன்று வரை என் பெற்றோர் என்னை பற்றி அறியாத விடயங்களை கூட அறிந்து வைத்திருப்பவர்கள் ஆசிரியர்களே. எனக்கு பிடித்த பாடம் எது? என்னிடம் உள்ள திறமைகள் எவை? அவற்றை வளப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை கூட அறிந்து வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் என்னுடைய எதிர்கால இலட்சியத்தை தேர்ந்தெடுப்பற்கு கூட ஆசிரியர்களே மூல காரணமாக உள்ளனர். வீட்டில் என்னை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்வதை போல பாடசாலை சூழலில் என்னை அரவணைத்து காப்பவர்கள் ஆசிரியர்களே.
தான் தவறு செய்கின்ற போது கண்டித்தும் நல்லவற்றை செய்யும் போது என்னை பாராட்டி ஊக்குவிப்பவர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
எனவே தான் என்னுடைய முன்னேற்றப் பாதையில் வரக்கூடியவற்றை நல்லனவற்றையும் தீயனவற்றையும் பிரித்தறிந்து பயணிக்க கூடியதாக உள்ளது.
எனக்கு மட்டுமல்லாது சமுகத்தில் உள்ள அனைவரினதும் முன்னேற்றத்தில் ஆசிரியர்களினுடைய பங்களிப்பு உள்ளது. ஆசிரியர்கள் கடமைகளை சரியாக செய்யும் பொழுது தான் தனி மனித மற்றும் சமூக முன்னேற்றம் என்பவை ஏற்படுகின்றன.
You May Also Like: |
---|
அறம் பற்றிய கட்டுரை |
அறிவியலின் நன்மைகள் கட்டுரை |