இந்த பதிவில் கணித துறையில் பல சாதனைகள் செய்த “கணித மேதை ராமானுஜன் கட்டுரை” பதிவை காணலாம்.
பசியால் வாடினாலும் உணவுக்கு பதில் கணக்குத் தான் இவருடைய சிந்தனையில் இருந்தது.
கணித மேதை ராமானுஜன் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளமைக் காலம்
- கல்வி
- திருமண வாழ்க்கை
- கணிதத்தில் ராமானுஜனின் சாதனைகள்
- முடிவுரை
முன்னுரை
இந்திய நாட்டிற்கும், தமிழர்களுக்கும் உலக அளவில் பெருமை சேர்த்த கணித மேதை சீனிவாச ராமானுஜன் கணிதத் தேற்றங்களில் சிக்கலான 4000க்கும் மேற்பட்ட தேற்றங்களை உலகிற்கு வழங்கியவர் ஆவர்.
தன் வாழ்நாள் முழுவதையும் கணிதத்திற்காகவே செலவிட்டவர். சிறுவயதிலேயே பிறர் உதவியின்றி கணிதத்தின் ஆழ் உண்மைகளைக் கண்டு உணர்ந்த மாமேதை கணித மேதை ராமானுஜன் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமைக் காலம்
கணிதமேதை ராமானுஜன் அவர்கள் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஸ்ரீனிவாச ஐயங்கார், கோமளம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது தந்தை கும்பகோணத்திலுள்ள ஒரு துணிக்கடையில் குமாஸ்தாவாக பணியாற்றினார். இவர் குடும்பத்தில் வறுமை மட்டுமே சொத்தாக இருந்தது. இதனால் பசியோடு பலநாள் வாழ்க்கையைக் கடக்கவேண்டி இருந்தது.
கல்வி
ராமானுஜன் அவர்கள் தனது ஐந்தாவது வயதிலேயே கும்பகோணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்குச் சென்றார். படிப்பில் படு சுட்டியாக அபார நினைவாற்றல் உடையவராகவும் விளங்கினார்.
தனது பத்தாவது வயதில் கும்பகோணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார்.
தனது வீட்டில் குடியிருந்த உயர் வகுப்பு மாணவர்களின் எல். எல். லோனி அவர்களால் எழுதப்பட்ட மேம்பட்ட கோணவியல் புத்தகத்தை வாங்கிப் படித்து தேர்ச்சி பெற்றார். 1904ல் ராமானுஜன் அவர்கள் கணிதத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
திருமண வாழ்க்கை
ராமானுஜன் அவர்கள் 1909 ஜூலை மாதம் 14ஆம் திகதி தனது 22 வயதில் ஜானகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இக்காலத்தில் இவர் தனது படைப்பின் 17 பக்கப் பெர்னோலியின் எண்களை வெளியிட்டார். இது இந்திய கணித சங்கம் எனும் இதழில் 1911 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கணிதத்தில் ராமானுஜனின் சாதனைகள்
பசியால் வாடினாலும் உணவுக்கு பதில் கணக்குத் தான் இவருடைய சிந்தனையில் இருந்தது. அவருடைய பழக்கம் அனைத்திலும் மற்றும் வாழ்க்கை நெடுகிலும் கணக்குச் செய்து கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது.
ராமானுஜன் அவர்கள் ஹெர்டி உடன் இணைந்து பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவ்வகையில் ராமானுஜன் அவர்கள் ப (n) என்ற அணுகுமுறையின் சூத்திரத்தை ( Aszmptotic Formula for p (n) ) கொடுத்தார். இந்தப் ப (n) சரியான மதிப்பை கொடுக்கும் தன்மை கொண்டது.
மேலும் இவரின் ஏழு ஆவணங்களை கொண்ட உயர் கலப்பு எண்களின் (Hightly composite numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவுரை
ராமானுஜன் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி அன்று உலகை விட்டு நீங்கினார். இவரின் பெயரில் கணித விருதுகளும், சங்கங்களும், அருங்காட்சியங்களும் நிறுவப்பட்டுள்ளன.
கும்பகோணத்தில் அவர் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாகவுள்ளது. ராமானுஜனின் பிறந்த நாள் இந்தியாவின் தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இவர் உலகை விட்டுப் பிரிந்தாலும் கணிதத்தில் இவரது பணி என்றென்றும் அழியாப் பொக்கிசமாகவும், புதிய கேட்பாடுகளின் உருவாக்கங்களுக்கு அடிப்படையாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like: |
---|
வியத்தகு விந்தை கணிதம் கட்டுரை |
அறிவியலின் நன்மைகள் கட்டுரை |