இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ள மூன்றாவது திட்டமாக சந்திரயான்-3 திகழ்கின்றது. இது இந்திய மண்ணிண் பெருமையை எடுத்தியம்புகின்றதொரு திட்டமாகவே காணப்படுகின்றது.
சந்திரயான் 3 பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சந்திரயான்-3 என்பது
- சந்திரயான்-3ன் நோக்கம்
- நிலாவின் தென்துருவப்பகுதியும் சந்திரயான்-3ம்
- சந்திரயான்-3ன் சிறப்பு
- முடிவுரை
முன்னுரை
சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலமாக சந்திரயான்-3 காணப்படுவது சிறப்பிற்குரியதாகும். இது இந்திய விண்வெளி திட்டத்திற்கான சிறந்ததொரு திட்டமாக திகழ்வதோடு நின்றுவிடாமல் தனது செயற்திட்டதில் வெற்றியீட்டிய ஒரு ஆராய்ச்சி பயணமாகும்.
சந்திரயான்-3 என்பது
சந்திரயான்-3 என்பது யாதெனில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் சந்திரனுக்கு செல்வதற்காக திட்டமிடப்பட்ட 3வது ஆராய்ச்சி பயணமாகும்.
இந்த விண்கலமானது கடந்த ஜூலை 14, 2023 அன்று சதீஸ் தவான் என்ற விண்வெளி மையத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணியளவில் நிலாவின் தென்துருவத்தில் தரையிறங்கி வெற்றிகரமாக செயற்பட்டமை சிறப்பிற்குரியதாகும்.
சந்திரயான்-3ன் நோக்கம்
சந்திரயான்-3ன் நோக்கமாக சிலவற்றை குறிப்பிட முடியும். அதாவது, நிலாவின் இயற்கை மற்றும் இரசாயண கூறுகள் அதன் மண், நீர் பற்றிய அறிவியல் ஆய்வுகளை நடத்துவதை நோக்கமாக கொண்டதாகும்.
மேலும் தரையிறங்கியை பாதுகாப்பாக நிலாவில் இறக்குதல், நிலாவில் தரையூர்தி உலாவும் விதத்தை நோக்குதல், சூரியனில் வீசும் அயனிக் காற்றானது நிலவின் தரையில் மோதுவதால் ஏற்படும் மாற்றங்களை அறிதல், நிலாத் தரையில் கிடைக்கும் வேதி கனிமங்களின் மீது களத்திலேயே அறிவியல் செய்முறைகளை செய்து அதனை பதிவு செய்தல் போன்றவற்றை நோக்காக கொண்டே செயற்பட்டது.
நிலாவின் தென்துருவ பகுதியும் சந்திரயான்-3ம்
சந்திரயான்-3 ஆனது சென்றடைந்த தென்துருவ பகுதி மிகவும் மர்மம் நிறைந்ததொரு பகுதியாக காணப்பட்டது எனலாம். ஏனெனில் அப்பகுதியிலேயேதான் மலைகளும், குழிகளும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக அப்பகுதியானது ஓர் ஆழமான பகுதியாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் சூரிய ஒளியானது சென்றடையாது காணப்படும் இருள் சூழ்ந்த மர்ம பகுதியாகவும் விளங்குகின்றது.
சந்திரயான்-3ன் சிறப்பு
விண்வெளித்துறையில் இந்திய நாட்டின் சிறப்பு மிக்க சாதனை படைத்த திட்டமாக சந்திரயான்-3 திகழ்கின்றது. இது இந்திய விஞ்ஞானிகளின் வெற்றியாகவே காணப்பட்டது.
மேலும் சந்திரயான்-3 ஆனது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பநிலை, நிலநடுக்கங்கள், அங்கு காணப்பட்ட மண்ணிண் தன்மை, பாறைகளின் இயல்பு போன்றவற்றை பற்றி அறிந்துகொள்வதற்கு துணைசெய்தது.
இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் இந்திய ஆராய்ச்சியில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த உதவியது. அந்தவகையில் இந்தியாவை வலுப்படுத்திய ஒரு திட்டமாக சந்திரயான்-3 காணப்பட்டமை சிறப்பிற்குரியதாகும்.
முடிவுரை
இந்தியாவின் விண்வெளி ஆய்வு திட்டத்திற்கான முக்கியமான வளர்ச்சி சந்திரயான்-3 ஆகும். அந்தவகையில் சந்திரயான் 3ன் வெற்றியானது அறிவியல் முன்னேற்றங்களுக்கு அப்பால் தேசத்தின் சமூக, பொருளாதார அமைப்பிற்கான நன்மைகளை உள்ளடக்கியதாகும்.
மேலும் இத் திட்டமானது அடுத்த தலைமுறையினர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்ட துணைபுரியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
You May Also Like:
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை