இந்த பதிவில் “நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை – 1
மகிழ்ச்சி நிறந்த இந்த உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலை தங்கள் இலட்சியமாக கொண்டிருக்கின்றனர். அவர்களின் கனவு நனவாகவே அவர்கள் பாடுபடுகின்றனர்.
நானும் ஒரு கனவு காண்கிறேன். என் கனவு ஒரு வைத்தியராவது ஆகும். நான் ஒரு மருத்துவர் ஆனால், முதலில் ஒரு அரசாங்க மருத்துமனையில் பணிபுரிவேன்.
பல்வேறு நோயாளிகளுடன் இரக்கத்துடனும் மனிதாபிமானத்துடனும் பழகி அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினை காண முயற்சி செய்வேன். வருகின்ற நோயாளிகளை அன்பாக விசாரித்து அவர்களுடைய நோய்களுக்கு உகந்த மருந்தினை கொடுப்பேன்.
சிறந்த வைத்தியர் என அனைவரும் போற்றும் வகையில் எனது கடமைகளை சரிவர செய்வேன்.
எனது மிகப்பெரிய கனவு சொந்தமாக ஒரு மருத்துவமனை திறப்பது தான். நான் திறக்கும் மருத்துவமனை ஒரு நிபுணத்துவ மையமாக இருக்கும். அங்கு பலவிதமான நோய்களுக்கும் நிபுணர்கள் இருப்பார்கள். ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவ வசதிகள் கிடைக்க வழி செய்வேன்.
பாடசாலைகளுக்கு மாதந்தோரும் இலவச மருத்துவ பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வேன். கண், பல், தோல் என பல்வேறு பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு இலவச மருத்துவ வசதிகள் செய்து தருவேன்.
அத்துடன் வைத்தியசாலைக்குள் மாத்திரம் எனது சேவைகளை நிறுத்திவிடாமல் பருவ கால ரீதியாக பரவக்கூடிய தொற்று நோய்கள் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டங்களை நடாத்துவேன்.
முதியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவேன். நாட்டு மக்களுக்காக காலம் பாராது கடமை செய்ய தயராக இருப்பேன்.
நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை – 2
உயிரினை காக்கும் தொழிலாக வைத்திய தொழில் காணப்படுகிறது. எனவே தான் வைத்தியர்களை கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பலரும் கூறுகின்றனர். வைத்தியர்களுக்கு நமது சமூகத்தில் கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அதிகமானதாகும்.
இதனால் தான் நான் சிறந்த முறையில் கல்வி கற்று ஒரு வைத்தியராக விரும்புகின்றேன். அவ்வாறு நான் வைத்தியராகிய உடன் எனது சொந்த ஊரிலேயே கடமையாற்ற விரும்புகின்றேன்.
இன, மத வேறுபாடுகள் எதுவும் பராமால் நேயாளிகளாக வருகின்ற அனைவரையும் சமமாக நடத்தி அவர்களது நோய்களுக்கான மருத்துவத்தை கடமை உணர்வுடனும் கரிசனையுடனும் வழங்குவேன்.
என்னைச் சார்ந்த உறவினர்களுக்கும் மருத்துவ உதவிகளை செய்வேன். நான் வைத்தியரானால் எனது கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வேன்.
அத்துடன் இருந்து விடாது மருத்துவ துறையில் மேற் படிப்புகள் பலவற்றை படித்து பட்டங்களையும் பெற்று மிக சிறந்த மருத்துவ நிபுணராக என் பெயரை நிலை நிறுத்திக் கொள்வேன்.
நான் வைத்தியரானால் என்னைப் போன்ற வைத்தியர்களை ஒன்றிணைத்து அவர்களின் உதவியுடன் அறக்கட்டளை ஒன்றினை ஆரம்பிப்பேன். அதன் மூலம் பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றிற்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.
மேற்படிப்பை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு எமது அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி வழங்குவேன். அவர்களும் என்னைப் போல மருத்துவர்களாகி அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்திட உதவி செய்வேன்.
வைத்திய தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில் என் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வேன். சமூகத்தில் நற்பெயரை பெற்றுக் கொள்ளவும் முயற்சி செய்வேன்.
You May Also Like: |
---|
நான் கண்ட கனவு கட்டுரை |
நான் ஒரு கரிக்கோல் கட்டுரை |