இந்த பதிவில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை” பதிவை காணலாம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களின் பலனையே நாங்கள் அனுபவிக்கின்றோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மனிதம்
- கடன்வாங்கி சிரிக்கும்நிலை
- வாழ்தல் போராட்டம்
- மாற்றத்துக்கான வழி
- முடிவுரை
முன்னுரை
தமிழிலக்கிய வரலாற்றின் முதற்காலமாக சங்ககாலமானது காணப்படுகின்றது. அக்காலத்தில் வாழந்த புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் அவர்கள் இந்த உலக மக்களுக்காக “யாதுமூரே யாவருங்கேளீர்” என்ற ஒரு மகத்தான வசனத்தை சொல்லி சென்றிருக்கிறார்.
இந்த வாசகம் உலகமெங்கம் உள்ள மனிதர்களை ஒன்றிணைக்கும் சமத்துவம் நிறைந்த வரிகளாக இருக்கின்றது. இவை பற்றி நாம் இந்த கட்டுரையில் நோக்கலாம்.
மனிதம்
மனிதன் என்பவன் சிந்திக்க தெரிந்த விலங்காவான் மனிதனுக்குள் பல நல்லெண்ணங்களும் தீய எண்ணங்களும் காணப்படுகின்றன. அவற்றில் மகத்தானது மனிதம் எனும் உயரிய பண்பாகும்.
அதாவது மனிதனிடத்தில் காணப்படுகின்ற அன்பு எல்லையற்றது அதுவே பிற மனிதர்களையும் உயிரினங்களையும் ஏதோ ஒரு இடத்தில் காப்பாற்றி அடைக்கலம் தந்து பாதுகாத்துவருகின்றது எனவே தான் “அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்கிறார்கள்.
கடன்வாங்கி சிரிக்கும் நிலை
முன்பொரு நாளில் மனிதனிடத்து வறுமை இருந்தது, கடினங்கள் இருந்தது ஆனால் மனம் நிறைய மகிழ்ச்சி இருந்தது.
ஆனால் இன்று அது தொலைந்து போனது வசதிகள் வந்து விட்டது, தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டது ஆனால் மனிதம் தொலைந்து விட்டது.
இதனால் மனிதனின் மனமானது சஞ்சலத்திலும் பதட்டத்திலும் இருக்கிறது இதனால் இயல்பாகவே மகிழ்ச்சியை தொலைத்தவர்களாக இன்று நாம் இந்த உலகத்தில் உலவிக்கொண்டிருக்கின்றோம்.
வாழ்தல் போராட்டம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களின் பலனையே நாங்கள் அனுபவிக்கின்றோம்.
தம்மை போலவே பிற மனிதர்களையும் மதித்து அன்பு செய்வதனால் மனிதர்களிடம் இருந்து அன்பையும் அரவணைப்பையும் பெறுவதோடு ஒருவருக்கொருவர் உதவியாக வாழ முடிந்தது.
அந்த நிலை மாறி இன்று பிரிவினைகளும் புரிதல்கள் அற்ற இந்த உலகத்தில் மனிதன் தனித்து விடப்பட்டவனாகி வாழ்தல் போராட்டங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது.
மாற்றத்துக்கான வழி
இவ்வகையான பிரச்சனைகளுக்கான வழி சமத்துவம் மற்றும் சமாதானம் நிறைந்த மனிதனுடைய வாழ்க்கை முறையாக தான் இருக்கும்.
இந்த உலகத்தில் எந்த நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களும் நமது சக மனிதர்களே என்ற உயர்ந்த எண்ணமும் பக்குவமும் வருகின்ற போது தான் நம்முடைய வாழ்க்கை நலமுடையதாக அமையும்.
முடிவுரை
இன்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அறிவுரையினை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி சென்றிருக்கிறார்கள்.
இருப்பினும் நமது தவறான புரிதலும் தவறான வழிநடாத்தலும் நம்மை இவாறான உயர்வு தாழ்வுகள் பாகுபாடுகள் ஆகிய விடயங்களை எம்முள் ஒரு நோய் போல ஊடுருவியுள்ளது.
இந்த நிலையானது மாறி யாவரும் நம் தோழர்கள் என்ற மனநிலையில் வாழ்வாங்கு வாழ்வோமாக.
You May Also Like: