வலிமை வாழ்வில் அளவில்லா வலிமையை தரும் இந்த பதிவில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை” பதிவை காணலாம்.
ஒவ்வொருவரும் துணிந்து வலிமையுடன் செயற்பட்டு முடியாது என்ற வார்த்தையை மனதளவிலும் நினைக்காமல்சாதிக்க வேண்டும்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வலிமை வேண்டும்
- மன வலிமை
- வலிமையின் சிறப்பு
- வலிமை பற்றி வள்ளுவரின் கருத்துக்கள்
- முடிவுரை
முன்னுரை
வாழ்வில் எப்போதும் வலிமை தேவைப்பாடான ஒன்றாகும். வலிமை உள்ளவர்கள் வாழ்வில் எந்த துன்பங்களையும் கடந்து வெற்றியில் பயணிக்க முடியும்.
வலிமையானவன் தனக்குத் தேவையான ஆயுதத்தை எதிரிகளிடமிருந்து பெற்று அவர்களை தோற்கடிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பான்.
பல சவால்களை எதிர்நோக்கினாலும் வலிமை இருந்தால் போதும் அதை வெற்றி பெற்றுவிடலாம். இக்கட்டுரையில் வலிமை பற்றி நோக்கலாம்.
வலிமை வேண்டும்
நாம் எப்போதும் எதற்காகவும் தயங்கி பின் நிற்றல் கூடாது. வாழ்வில் வலிமை வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடும்போது வாழ்க்கை கடினமாகிவிடும். தோல்வியில் இருந்து மீண்டு எழ வல்லமை நிச்சயம் வேண்டும்.
இன்றைய இளைய சமுதாயத்தினர் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டுமெனில் வலிமை வேண்டும். சிறுவயதில் இருந்தே வலிமை உள்ளவர்களாக வளர்க்க வேண்டிய கடமை அனைத்து பெற்றோருக்கும் உண்டு.
குழந்தைகள் ஒழுக்கம்⸴ கல்வி என்பவற்றோடு வலிமையுடன் எதையும் செய்து வெற்றி காண கூடியவர்களாக வளர்க்கப்படவேண்டும்.
மன வலிமை
மன வலிமை உள்ளவன் வாழ்வில் வரும் துன்பங்கள்⸴ சோதனைகள்⸴ இழப்புக்கள்⸴ போராட்டங்கள்⸴ கொடுமைகள் அனைத்தையும் எளிதில் சமாளிப்பான்.
ஒரு மனிதன் வெற்றியாளனாகவும் இன்னொருவன் தோல்வியுற்றவனாகவும்⸴ ஒருவன் மகிழ்ச்சி உள்ளவனாகவும்⸴ இன்னொருவன் துன்பப்படுவானாகவும்⸴ ஒருவன் சாதனையாளனாகவும்⸴ இன்னொருவன் சாதாரணமானவனாகவும் இருப்பது அவரவர் மனதை பயன்படுத்தும் முறையில் தான் உள்ளது.
மனவலிமை உடையவர்களாக இருந்தால் நினைத்த எல்லாவற்றையும் எண்ணியபடியே அடைய முடியும். எனவே மனித வாழ்க்கையில் உயர்வடைய மனவலிமை இன்றியமையாததாகும்.
வலிமையின் சிறப்பு
வாழ்வில் உயர்வை தரவல்லது வல்லமையே. வலிமையே வெற்றியின் ரகசியம் ஆகும். வலிமையுள்ளவன் ஏனையவர்களை விட தனித்துவமானவனாகவும்⸴ சிறப்பானவனாகவும் தென்படுவான்.
தலைமைத்துவ அங்கீகாரமும்⸴ வெற்றியும் கிடைக்கப்பெறும். ஏனெனில் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வலிமை நமக்களிக்கும்.
வலிமையுடையவர்களிடம் சிறு துரும்பை கொடுத்தாலே அதிலிருந்து சாதனை படைக்கும் திறன் கொண்டவர்கள். பலவீனங்களை பலமாக மாற்றும் ஆற்றலை ஏற்படுத்தக்கூடியது.
வலிமை பற்றி வள்ளுவரின் கருத்துக்கள்
திருக்குறளில் நாற்பத்தெட்டாம் அதிகாரமாக இடம் பெற்றிருக்கும் “வலியறிதல்’, ஒவ்வொருவரும் தத்தம் வலிமையின் அளவு இன்னதென உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்ற முக்கியமான கருத்தை முன்வைக்கிறது.
ஒருவரின் ஒட்டுமொத்த வலிமையில், அவரது ஆற்றலின் வலிமை, அவரது பொருளாதார வலிமை, அவரின் நண்பர்களின் வலிமை எனப் பலவகை வலிமைகள் உள்ளடங்கியுள்ளன.
இவை அனைத்தின் தன்மையையும் கணக்கிட்டு அதற்கேற்ப வாழ்வில் செயல்படுதல் வேண்டும். எனவே, எல்லாவகை வலிமையும் சேர்ந்தே ஒருவரது வலிமை கணக்கிடப்படுகிறது. இந்த அத்தனை வலிமைகள் பற்றியும் திருக்குறளில் கூறுகின்றார் வள்ளுவர்.
முடிவுரை
வலிமையானவர்களுக்கு சிறிய துரும்பைக் கொடுத்தாலும் அதை வைத்து அவர்கள் பெரிதளவில் சாதித்து விடுவார்கள். ஏனெனில் வெற்றியின் ஆயுதமே வல்லமை ஆகும்.
இயலாமை எண்ணம் நம்முள் குடிகொண்டு விட்டால் வாழ்வில் தோற்று விடுவோம். உலகமே நம்மை ஏளனமாக பார்க்கும். எனவே துணிந்து வலிமையுடன் செயற்பட்டு முடியாது என்ற வார்த்தையை மனதளவிலும் நினைக்காமல் சாதிப்போம்.
You May Also Like: |
---|
அறிவியலின் நன்மைகள் கட்டுரை |
சுத்தம் சுகம் தரும் கட்டுரை |