உலக காடுகள் தினம்

ulaga kaadugal thinam

உலக காடுகள் தினம் எப்போது

உலக காடுகள் தினம்மார்ச் 21
International Day of ForestsMarch 21

காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நோக்கம்

காடுகள் மற்றும் அவற்றைச் சார்ந்த வனப்பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துணர்த்தும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

அத்துடன் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுவதையடுத்து காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971 இலிருந்து மார்ச்21 உலக காடுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

மனித வாழ்க்கையில் மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவங்கள்

காடுகள் மற்றும் மரங்கள் தட்பவெப்ப நிலையைத் தணிக்கும் தன்மை கொண்டவை. நகரங்களில் இருக்கும் மரங்கள் காற்று மாசுபடுவதைத் தணிக்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு காடுகளின் பங்கு முக்கியமாகும். உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் காடுகள் வழங்குகின்றன.

மனிதன் மற்றும் அனைத்து உயிர்களும் பூமியில் வாழ்வதற்கு காடுகள் பெரும் பங்களிப்பு செய்கின்றன.

காடுகள் அழிக்கப்பட்டால் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மாற்றமடைந்து மனிதனும் பிற உயிரினங்களும் இந்த உலகில் வாழ்வதே கேள்வி குறியாக மாறிவிடும்.

காடுகள் அழிக்கப்படும் வழிகள்

மனிதர்கள் தமது அதிகரித்து வரும் தேவைகளுக்காக நகரமயமாக்குதல், நிலம் ஆக்கிரமித்தல், வியாபார நோக்கிற்காக மரங்கள் வெட்டப்படுதல் என மனிதர்களின் தேவைக்காக பெருமளவு காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்

காடுகள் அழிக்கப்படுவதால் மழையின்மை, அரிய வகை விலங்குகள் அழிவடைதல், வசிப்பிடம் தேடி விலங்குகள் காட்டை விட்டு ஊருக்குள் புகுந்து உயிர் ஆபத்துகளை ஏற்படுத்துதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஆண்டுதோறும் பூமியில் பல மில்லியன் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதால் பூமியில் இருந்து பல வகை உயிரினங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போகலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காடுகளின் பயன்கள்

வெப்பத்தையும் குளிரையும் கட்டுப்படுத்தல், பருவ மழை அளவை அதிகரித்தல், மண் வளம் காத்தல், மண் அரிப்பு, நிலச்சரிவு, வெள்ள ஆபத்துக்களை தடுத்தல் மற்றும் இயற்கை சமநிலையை பேணுதல் என காடுகளால் ஏராளமான நன்மைகள் உள்ளன.

காட்டின் வளம் காப்போம்

வருங்கால தலைமுறைக்காக இயற்கையின் வளங்களை சேமிக்க வேண்டும். எனவே உலக காடுகள் தினத்தன்று நாட்டின் வளம் காக்க நாட்டின் வளம் காப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் எடுக்க வேண்டும்.

You May Also Like :
காடுகளின் பயன்கள் கட்டுரை
உலக பூமி தினம்