உலக பொதுமறை திருக்குறள் கட்டுரை

ulaga pothumarai thirukkural katturai

இந்த பதிவில் “உலக பொதுமறை திருக்குறள் கட்டுரை” பதிவை காணலாம்.

மக்களின் வாழ்வியலோடு இணைந்த வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களை திருக்குறள் கற்றுத் தருகின்றது.

உலக பொதுமறை திருக்குறள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • திருவள்ளுவர்
  • திருக்குறளின் சிறப்புக்கள்
  • திருக்குறளின் உள்ளடக்கம்
  • திருக்குறள் கூறும் நற்கருத்துக்கள்
  • முடிவுரை

முன்னுரை

தமிழிலே இயற்றப்பட்ட நூல்களிலே திருக்குறளிற்கு தனியான இடமுண்டு. திருக்குறளானது இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்படுவதற்கான காரணம் திருக்குறளானது அனைத்து மக்களுக்கும் பொதுவானது மற்றும் இன, மத ரீதியாகவோ எந்த வரையறைகளிற்குள்ளும் உட்படாமல் இருப்பதாகும்.

திருக்குறளில் காணப்படும் நற்பண்புகளை அனைத்து மக்களும் அறிந்திருப்பது மிகவும் பயனுடையதாகும்.

திருவள்ளுவர்

சங்க காலத்திலே வாழ்ந்த பெரும் புலவர்களுள் திருவள்ளுவரும் ஒருவராவார். தமிழில் ஈடு இணையில்லாத பெருமை வாய்ந்த நூலை இயற்றிய இவர் தெய்வப் புலவர், பொய்யாமொழிப் புலவர் என பல்வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.

சுப்பிரமணிய பாரதி அவர்கள் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழ்நாடு பெருமை பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

திருக்குறளின் சிறப்புக்கள்

திருக்குறள் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. உலகப் பொதுமறை மற்றும் திருமறை என சிறப்பாக அழைக்கப்படுகின்றது.

உலகப் பொதுமறை என திருக்குறள் அழைக்கப்பட காரணம் இன, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் பொதுவான நற்கருத்துக்களை மக்களிற்கு வழங்குவதாலாகும்.

மக்களின் வாழ்வியலோடு இணைந்த வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களை திருக்குறள் கற்றுத் தருகின்றது.

தமிழ்மொழியில் மட்டுமல்லாது அரபு, சீனமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஐப்பானிய மொழி, உருது, லத்தீன் போன்ற எண்பத்து இரண்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் உள்ளடக்கம்

திருக்குறளானது மொத்தமாக 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் வீதம் மொத்தமாக 1333 குறள்கள் காணப்படுகின்றன.

ஒவ்வொரு ஈரடிக் குறள்களும் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாற்களுள் அடங்குகின்றன.

அறன் வலிறுத்தல், வாழ்க்கை துணை நலம், அன்புடமை, அடக்கம் உடமை, ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம், வாய்மை போன்றன முக்கியமான அதிகாரங்கள் ஆகும்.

திருக்குறள் கூறும் நற்கருத்துக்கள்

திருக்குறளானது பல்வேறு நற்பண்புகளை எடுத்தியம்புகின்றது. மக்கள் தமது வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் பொருட்டு “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்படும்” என ஒழுக்கத்தை உயிரிற்கு மேலாக மேன்மைப்படுத்துகின்றது.

வாய்மை பேசுவதை உயரிய பண்பாக வலியுறுத்தும் திருக்குறள், “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” அதாவது உண்மை தெரிந்தும் அதனை மறைந்து பொய் கூறும் போது குற்றஉணர்ச்சி மேலிடும் என்று குறிப்பிடுகின்றது.

அனைவரையும் அன்பு செய்தல் உயரிய பண்பாகும். அதனை “அன்பிலார் என்றும் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” எனக் கூறும் திருக்குறள்,

நன்றி மறத்தலை பெருந்தவறாக சுட்டிக் காட்டுகின்றது. இதனை “எய்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” எனக் குறிப்பிடுகின்றது.

முடிவுரை

உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளில் நற்பண்புகள் மிகுந்து காணப்படுவதனால் அனைவரும் அதனைப் படித்தல் அவசியமாகும்.

ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறளை வைத்திருப்பதோடு, சிறுவர்கள் அதனை வாசிக்க அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். திருக்குறளை கருத்துடன் படித்து அறவாழ்வில் இருந்து விலகாமல் உலகத்தின் மாயைகளிற்கு ஆட்படாமல் ஒழுக்கமுடன் வாழ்வோமாக.

You May Also Like :
திருவள்ளுவர் தினம் கட்டுரை
நான் விரும்பும் நூல் திருக்குறள் கட்டுரை