ஊட்டச்சத்து குறைபாடு கட்டுரை

ஊட்டச்சத்து கட்டுரை

இந்த பதிவில் “ஊட்டச்சத்து குறைபாடு கட்டுரை” பதிவை காணலாம்.

பலருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கிடைக்கமையினால் அவர்களுது ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

ஊட்டச்சத்து குறைபாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காரணங்கள்
  • அரசியல் நிலை
  • விளைவுகள்
  • உலகளாவிய பார்வை
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் உலகமெங்கும் பருவநிலை மாற்றம் காரணமாக உணவு உற்பத்தி என்பது ஒரு பாரிய வீழ்ச்சியினை எதிர்கொள்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பலருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கிடைக்கமையினால் அவர்களுது ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

உலகமெங்கும் இந்த ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு பாரிய பிரச்னையாக மாறிவருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கண்டறிந்துள்ளது இக்கட்டுரையில் அவைபற்றி காணலாம்.

காரணங்கள்

ஊட்டச்சத்து குறைபாடானது ஏற்பட பிரதான காரணமாக வறுமையினை குறிப்பிடலாம்.

பல லட்சம் மக்கள் வறுமையின் பிடியினால் போதுமான உணவே கிடைக்காமல் பசி பட்டினியால் இறந்து போகையில் அவர்களால் எப்படி சத்துள்ள உணவுகளை பெற்றுக்கொள்ள முடியும்?

உலகில் பல வறுமை நாடுகள் மற்றும் வளர்முகநாடுகளில் நிலவுகின்ற அசாதாரண அரசியல் நிலைகள் மற்றும் உள்நாட்டு யுத்தம் போன்ற காரணங்களால் அந்த நாடுகள் எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அங்கே வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதனால் அவர்கள் பாரிய உணவு பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர்.

அரசியல் நிலை

உலகத்தில் பல நாடுகளில் உணவு பற்றாக்குறை மற்றும் பஞ்சம் ஏற்பட காரணமாக இருப்பது அந்த நாட்டு அரசாங்கம் மற்றும் அங்கே வாழ்கின்ற மக்களின் மனநிலை தான் வறிய நாடுகளாக கருதப்படும்.

ஆபிரிக்காவின் சில நாடுகள் வறுமையை எதிர்கொள்ள அந்த நாடுகளின் அரசாங்கம் செய்கின்ற ஊழல் மற்றும் மோசடிகளும் உள்நாட்டு போர்களும் தீவிரவாத செய்ல்களுமே காரணம் என்று கூறலாம்.

இந்தியாவிலும் பல மக்கள் ஊட்டசத்து குறைபாடுகளை எதிர் கொள்கின்றனர் காரணம் ஊழல் நிறைந்த அரசியலும் கலப்படம் நிறைந்த உணவு சந்தை போன்றவற்றை கூற முடியும்.

விளைவுகள்

மனித உடலின் ஆரோக்கியத்துக்கும் நலவாழ்வுக்கும் மிகவும் அவசியமானது ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆகும். இது கிடைக்காமையினால் பலவகையான பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பிறக்கின்ற குழந்தைகள் குறைபாடுகளுடைய குழந்தைகளாக பிறக்கின்றன. அவை எதிர்காலத்தில் பல நோய்களுக்கு ஆளாகி மோசமான எதிர்காலத்தை சந்திக்க நேரிடும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய்கள் நிறைந்த ஆரோக்கியமற்ற குழந்தைகள் பிறக்கின்ற சமுதாயத்தின் எதிர்காலம் பலமானதாக அமையாது. இதுவே இன்றளவும் சில நாடுகள் வறிய நாடுகளாகவே நீடிக்க காரணமாய் அமைந்துள்ளது.

முடிவுரை

இந்த உலகிலே பிறந்த அனைவருக்கும் சரியான முறையில் அனைத்து வளங்களும் கிடைக்கவேண்டும் என்பது அவசியம் ஆனால் பெரும் தொகையான மக்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் இறந்து போவது வேதனைக்குரிய ஒன்றாகும்.

உலக மக்களும் அரசாங்கமும் சமத்துவ சிந்தனையோடு சிந்தித்தால் இங்குள்ள அனைவருக்கும் உணவளித்து ஊட்டசத்து குறைபாட்டினை தீர்த்து கொள்ளலாம். இதுவே இந்த உலகத்தின் வளமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்.

You May Also Like :
ஊட்டச்சத்து முக்கியத்துவம் கட்டுரை
ஊழல் பற்றிய கட்டுரை