இதில் “எனது எதிர்கால கனவு கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரை பதிவை காணலாம். ஒவ்வொன்றும் 150 சொற்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
எனது எதிர்கால கனவு கட்டுரை – 1
நான் கண்ட கனவு நான் ஒரு விமானத்தில் விமானியாக பறக்கின்ற சந்தர்ப்பம் ஆகும் எல்லோருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் அதுபோல நான் சிறுவயதில் இருந்தே வானத்திலே பறக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாகும்.
சிறுவயதில் மாலை நேரத்தில் நண்பர்களுடன் விளையாடும் போது அந்தி வானத்தில் உயர பறக்கின்ற அழகான பறவைகள் பலவற்றை நான் பார்த்திருக்கின்றேன். அவை உயர உயர இந்த வானத்தை கிழித்து கொண்டு பறக்கும்.
அதனை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய மனதுக்குள் நானும் ஒரு நாள் இந்த வானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. மனிதர்களுக்கு பறவை போல சிறகுகள் இல்லை சிறகுகள் மட்டும் இருந்தால் இந்த உலகமெங்கும் பறந்திருப்போமோ என்னவோ.
ஆனால் பறவைகளை போலவே பறக்க விமானங்கள் உருவாகி விட்டனவே. ஆகவே நான் விமானியாக வர பல உயர் கல்விகளை கற்று ஒரு விமானத்தை இந்த வானிலே ஓட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்.
வானத்திலே பறக்கின்ற விமானத்தை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொன்றாகும். இது ஒன்றும் அத்தனை சுலபமானதல்ல என்று பெரியவர்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ஆனால் என்னால் நிச்சயமாக விமானியாக பறக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நமது இந்தியாவின் கனவுகளின் நாயகன் டாக்டர் அப்துல்கலாமை போல நானும் வானத்தில் பறக்கின்ற நிலையை அடைய நிச்சயமாக முயற்சி செய்வேன். நான் கண்ட கனவை நிறைவேற்ற நான் கடினமாக உழைப்பேன்.
எனது எதிர்கால கனவு கட்டுரை – 2
கனவுகள் என்பது எல்லோருக்கும் மெய்ப்படுவதில்லை கனவுகளை அடைந்தவர்கள் மிகவும் சொற்பமானவர்கள். எனக்கும் ஒரு கனவு இருக்கின்றது அது ஒரு விமானியாகி வானத்தில் பறக்க வேண்டும் என்பதாகும்.
எனது கனவான விமானியாக வேண்டும் என்ற கனவை நான் தினமும் மனதில் ஆழமாக வைத்திருக்கின்றேன்.
என்னை போலவே சாதாரண குடும்பங்களில் இருந்து தமது கனவுகளை வென்று காட்டிய மனிதர்களை பற்றி நான் அதிகமாக தேடி படிப்பதுண்டு. அவற்றில் விமானத்தை கண்டுபிடித்த “ரைட் சகோதரர்களின் கதை” எனக்கு எப்போதும் உத்வேகத்தை தருவதாக இருக்கிறது.
அவர்களது விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான் அவர்களது கனவை நிறைவேற்றியது. அவர்களை போலவே நானும் நான் கண்ட கனவாகிய விமானத்தில் பறக்க வேண்டுமென்பதை நோக்கியே முன்னேறுவேன்.
எனது கனவு நனவாகினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஒரு விமானியாகி எனது நாட்டுக்காக சேவை செய்வேன். எனது பெற்றோர்களை விமானத்தில் ஏற்றிய படி பறந்து செல்வேன் அவர்களையும் பெருமையடைய செய்வேன்.
எமது கனவுகளுக்கு இந்த வானமே எல்லை என்பதனால் நானும் எனது இந்த கனவு மெய்ப்படும் என திடமாக நம்புகின்றேன். இந்த கனவை நான் அடைந்து கொள்ள எதிர்வருகின்ற சவால்களை நான் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கின்றேன்.
நீண்ட நாள் கண்ட கனவு மெய்ப்படுவதனை விடவும் மகிழ்வான நிகழ்வு இந்த உலகத்தில் வேறு என்ன இருந்து விடபோகிறது? என்னை போன்றவர்களின் கனவு நிச்சயம் ஓர் நாள் நனவாகும் என்று நான் நம்புகின்றேன்.
You May Also Like: