குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

kulanthai tholilalar olippu katturai in tamil

இந்த பதிவில் “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த நாட்டில் என்று குழந்தை தொழிலாளர் முறைமை ஒழிக்கப்படுகின்றதோ, அன்றைய நாள் மிகவும் கொண்டாடப்படுகின்ற பொன்நாளாகும்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குழந்தை தொழிலாளர் அறிமுகம்
  • குழந்தைத் தொழிலாளர் உருவாகக் காரணங்கள்
  • குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்
  • இந்திய குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள்
  • முடிவுரை

முன்னுரை

குழந்தைப் பாதுகாப்பு என்பது தற்போது பரவலான பேசுபொருளாக மாறிவருகின்றது. குழந்தைகளிற்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் அவர்களிற்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் போன்றன அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது.

மேலும் குழந்தைகளை தொழிலாளர்களாக வேலைக்கமர்த்தி அவர்களின் வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைத்து அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் செயற்பாடுகளும் பரவலாக இடம் பெறுகின்றன.

குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குவதும் வேலைக்கு அமர்த்துவதும் தடுக்கப்பட வேண்டிய பாரிய குற்றமாகும். இக்கட்டுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி நோக்கலாம்.

குழந்தைத் தொழிலாளர் அறிமுகம்

குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவதற்கான ஆற்றலை சிறுவயது முதலே உருவாக்க வேண்டும்.

பொதுவாக குழந்தைகள் எனப்படுகின்றவர்கள் ஒரு வயது தொடக்கம் பதினான்கு வயதிற்குட்பட்ட பிரிவினரே. இந்த வரைமுறையானது நாடுகளிற்கு நாடு வேறுபடுகின்றது.

குழந்தைகள் என அடையாளப்படுத்தப்படுகின்றவர்களை சட்ட விரோதமாக வேலைக்கு வைத்திருத்தல் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகும்.

குழந்தைத் தொழிலாளர் உருவாகக் காரணங்கள்

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோர்களின் அசமந்தப் போக்கு, அறியாமை, வறுமை, கலாசரா காரணிகள், பாலின வேறுபாடு, போதியளவு கல்வியின்மை, முதலாளிகளின் மனிதநேயமின்மை, மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி போதிய அறிவின்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பொதுவாக பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணம் சமூகத்தில் காணப்படும் பொருளாதார பின்னடைவே.

வீடுகளில் நிலவும் வறுமை காரணமாக குழந்தைகள் கல்வி கற்பதனை விடுத்து தம்முடைய பசியைப் போக்குவதற்காக வேலைக்குச் செல்கின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகுவது ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்களாக கருதப்படுகின்றனர்.

குழந்தைகளின் கல்வி மற்றும் பிற உரிமைகள் மறுக்கப்படும் போது ஒரு நாடு அதன் அறிவார்ந்த சமூகத்தை இழக்கின்றது. எனவே குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது மிகவும் அவசியமாகின்றது.

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீது கடுமையான சட்டதிட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

மேலும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக பல்வேறு இயக்கங்கள் காணப்படுகின்றன. அவ்வியக்கங்களினூடாக குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள குழந்தைகள் மீட்கப்படுகின்றார்கள்.

சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அம்முறையை ஒழிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

இந்திய குழந்தைத் தொழிலாளர்கள் சட்டங்கள்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக பல்வேறு சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தத்தப்பட்டுள்ளன.

1952ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டமானது பதினான்கு வயதிற்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்குட்படுத்துவதை தடைசெய்கின்றது.

2000ம் ஆண்டு குழந்தைகள் இளம் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டமானது அடிமைகளாக குழந்தைகளை அபாயகரமாக வேலை செய்விப்பதை தடை செய்கின்றது.

முடிவுரை

ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ம் திகதி தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆனால் இந்த நாட்டில் என்று குழந்தை தொழிலாளர் முறைமை ஒழிக்கப்படுகின்றதோ, அன்றைய நாள் மிகவும் கொண்டாடப்படுகின்ற பொன்நாளாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உலகில் மகிழ்சியான வாழ்க்கையை உருவாக்கித்தர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

You May Also Like :
தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை
காலம் பொன் போன்றது கட்டுரை