சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை

siruvar thuspirayokam katturai in tamil

இந்த பதிவில் “சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை” பதிவை காணலாம்.

சிறுவர்கள் மீதான உடல், உள, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், இன்று மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நாட்டின் நற்பெயருக்கும் பெரும் சவாலாக இருக்கின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன
  3. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்
  4. சிறுவர் பாதுகாப்பின் அவசியம்
  5. சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வு
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய சிறுவர்கள் நாளைய நாட்டை வழி நடத்தி ஆட்சி செய்பவர்கள். அதனால் தான் ஒவ்வொரு குழந்தையையும் நல்ல நிலையில் வளர்த்தெடுத்து நாட்டிற்கும் உலகிற்கும் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தவிர்க்க முடியாத பொறுப்பாகின்றது.

ஆனால் இன்றைய சிறுவர்கள் பல்வேறு வகையில் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் சிறுவர் துஷ்பிரயோகம் உலகம் முழுவதிலுமே காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாக உள்ளது.

சிறுவர்கள் மீதான வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் இன்று, நேற்று தோன்றியவையல்ல, அவை நீண்ட காலமாகவும், சில திட்டமிட்ட வகையிலும் சிறுவர்கள் நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன

சிறுவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குபவர்களின் நடவடிக்கைகள் அவர்களின் அசட்டையான செயற்பாடுகளினால் சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் விருத்தி போன்றவற்றினை நேரடியாக அல்லது மறைமுகமாக பாதித்தலும் சிறுவர்கள் தேவையற்ற துன்பங்களுக்கும் உள்ளாகுதல் சிறுவர் துஷ்பிரயோகம் எனலாம்.

மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது பணிபுரியும் உத்தியோகஸ்தர்கள் போன்ற ஏதாவது ஓர் விடயம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுவர்களுக்கு தீங்கினை ஏற்படுத்துமாயின் அல்லது சிறுவர்களின் பாதுகாப்பு ஆரோக்கிய அபிவிருத்தி என்பவற்றை பாதிப்படைய செய்யுமாயின் அது சிறுவர் துஷ்பிரயோகம் எனலாம்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்

“இந்தியாவின் நாளைய எதிர்காலம் சிறுவர்களே” என டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் கூறியுள்ளார். அந்த வகையில் பல சிறுவர்கள் மேதைகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்கப்பட்டு நாட்டை ஆளும் திறமையுள்ளவர்களாகவும் எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெமுப்பும் தலைவர்களாகவும் திகழப்போகின்றவர்களாவர்.

சிறுவர்கள் சார்பாக இன்று உலகலாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தேசத்தை கட்டியெழுப்பும் தூண்கள் ஆவர்.

நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் சிறப்பான சூழ்நிலை உருவாகவும் வேண்டுமானால் சிறுவர்களை சரியான தடத்தில் வழி நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

சிறுவர் பாதுகாப்பின் அவசியம்

இன்றைய காலத்தில் சிறுவர் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடல், உள ரீதியில் ஊனமுற்ற சிறுவர்கள்,பெற்றோரை இழந்த சிறுவர்கள், பெற்றோரை விட்டுப் பிரிந்த சிறுவர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் துஷ்பிரயோகத்திற்கு இலக்காவதை தடுப்பதும் முக்கியமானதாகும்.

எதிர்கால உலகின் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய நற்பண்பும், அறிவும் நிறைந்த பலமிக்க பிள்ளையை நாட்டுக்கு வழங்குவதற்காகவும் சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தின் மத்தியில் மிகவும் அவசியமானதாகும்.

சிறுவர்கள் என்போர் யார்? அவர்களது உரிமைகள் என்ன? அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? போன்ற அனைத்தையும் பற்றியும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமானதாகும்.

அப்போதுதான் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற துஷ்பிரயோகங்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான உரிமைகள் பல உள்ளது என்பதனை பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.

முடிவுரை

வன்செயல் மூலம் பிள்ளையொன்றுக்கு தீங்கிழைக்கப்படும் போது சிறுவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் அவர்களுடைய சமூகங்களைச் சேர்ந்த அனைவருமே பாதிக்கப்படுகின்றன.

சிறுவர்கள் மீதான உடல், உள, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், இன்று மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நாட்டின் நற்பெயருக்கும் பெரும் சவாலாக இருக்கின்றது.

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் அவர்களை பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகளை சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் சமூகப் பணியாக உணர்ந்து செயலாற்றும்போது அப்பாவிச் சிறுவர்களை பாதுகாக்க முடியும்.

You May Also Like :
தீண்டாமை ஒழிப்பு கட்டுரை
உலக மகளிர் தினம் கட்டுரை