சேமிப்பின் பயன்கள் கட்டுரை

semippin payangal katturai in tamil

சிறு சேமிப்பே எதிர்காலத்தை சிறப்பாக வாழ்வதற்கான வழியாகும். சேமிப்பானது நாளை எம் அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஓர் வழிமுறையாகும். அத்தோடு எம் எதிர்கால சந்ததியினருடைய சிறப்பான வாழ்விற்கும் வழியமைத்து தருவனவாகவே சேமிப்பானது காணப்படுகிறது.

சேமிப்பின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சேமிப்பு என்பது
  • சேமிப்பின் முக்கியத்துவம்
  • சேமிப்பின் பயன்கள்
  • எதிர்காலத்தை வளமாக்கும் சேமிப்பு பழக்கம்
  • முடிவுரை

முன்னுரை

“சிறு துளி பெரு வெள்ளம்” என்ற பழமொழியானது சிறுக சிறுக சேமிப்பதன் பயனை எடுத்துக்காட்டுகின்றது.

நாம் இன்று சேமிப்பவையே நாளை நாம் நிம்மதியாக வாழ்வதற்கான வழியாகும். அந்த வகையில் மனிதனானவன் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து செயற்படுதல் வேண்டும். இக்கட்டுரையில் சேமிப்பின் பயன்கள் பற்றி நோக்கலாம்.

சேமிப்பு என்பது

எமது வாழ்வில் சம்பாதித்தவற்றிலிருந்து ஒரு பகுதியை சேமித்து வைத்தலே சேமிப்பாகும். அதாவது நாம் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து வைக்கும் போதே எம்மால் சிறப்பாக வாழ முடியும். சேமிப்பதன் மூலமாக வீணாண செலவை தவிர்ப்பதோடு எமது எதிர்காலத்தை வளமாக்க முடியும்.

சேமிப்பின் முக்கியத்துவம்

நாம் வறுமையில் இருந்து நீங்கிக் கொள்வதற்கான ஒரு வழியாக சேமிப்பு காணப்படுகின்றது. மேலும் சேமிப்பின் மூலமாகவே எம்மால் எதிர்காலத்தில் முன்னேற முடியும்.

அதேபோன்று பிறரை சார்ந்து வாழாது சுயமாக வாழ்வதற்கான ஒரு பாதையை வித்திடுவதாகவும், அச்சமின்றி எமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்தல் என்பவற்றினூடாக முக்கியத்துவம் பெற்று சேமிப்பானது விளங்குகின்றது.

சேமிப்பின் பயன்கள்

நாம் அன்றாடம் சிறிது சிறிதாக சேமித்து வைக்கும் சேமிப்பானது வாழ்வில் எமக்கு ஏற்படும் பல்வேறு வகையான கஷ்டங்களை தீர்த்து வைக்கின்றது. அவசர தேவைகளின் போது எமக்கு துணை நிற்கும் ஒன்றாக சேமிப்பு காணப்படுகின்றது.

மேலும் நாம் விரும்பிய பொருட்களை பிறர் தயவின்றி வாங்கிக் கொள்ள எம் சேமிப்பே உதவுகின்றது. பிறரிடம் கடன் கேட்டு பின்னர் கடன் கொடுக்க முடியாமல் சங்கடப்படும் நிலையை தவிர்ப்பதோடு வீணாண ஆடம்பர செலவுகளையும் தவிர்த்துக் கொள்ள சேமிப்பினாலேயே முடிகின்றது.

சேமிப்பு பழக்கமானது எமக்கு மாத்திரமின்றி பிறருக்கும் உதவக் கூடியதொரு நிலையை ஏற்படுத்துகின்றது. மேலும் மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உதவுகிறது.

எதிர்காலத்தை வளமாக்கும் சேமிப்பு பழக்கம்

நாம் வாழும் சூழலில் எமது எதிர்கால சந்ததியினரும் பயன் பெறும் நோக்கில் வாழ்வதன் மூலமே நாம் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். இன்று பலர் தாம் உழைப்பவற்றை அன்றே வீண் செலவு செய்பவர்களாக காணப்படுகின்றனர்.

ஆனால் இன்னும் சில மனிதர்கள் நாம் உழைப்பவற்றை எதிர்காலத்தின் தேவை கருதி சேமித்து வைக்கின்றனர். அந்த வகையில் நாம் சேமிக்கும் ஒவ்வொன்றும் எமது எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்க வல்லனவாகும்.

நாம் சேமிப்பவை பணமாக மாத்திரமல்லாமல் வளங்கள், உணவுகள் என பல்வேறு வகையில் சேமித்து வைப்பதன் மூலமாக எமது எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.

அத்தோடு சேமிப்பின் அவசியம் பற்றி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பதோடு மட்டுமல்லாது சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு சேமிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

முடிவுரை

ஒரு மனிதனுடைய வாழ்வானது சிறப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் திகழ வேண்டுமாயின் சேமிப்பே அவனுடைய வாழ்வின் அடிப்படையாக காணப்பட வேண்டும். மேலும் பல்வேறு கடினமான சூழலிலும் எமக்கு உதவக்கூடியதான ஒரு முறைமையாக சேமிப்பே திகழ்கின்றது.

You May Also Like:

சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை