இந்த பதிவில் “தூய்மை இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.
அழகிய இயற்கை நிறைந்த இந்திய நாடு அதனை களங்கப்படுத்தும் வகையில் தூய்மையற்றுக் காணப்படுகின்றது
தூய்மை இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மாசடையும் சூழல்
- தூய்மையின்மைக்கான காரணங்கள்
- தூய்மைப் பாரத இயக்கம்
- தூய்மை இந்தியாவின் மாணவர்களின் பங்களிப்பு
- முடிவுரை
முன்னுரை
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி “சுதந்திரத்தை விட சுத்தம் என்பது நமக்கு முக்கியம்ˮ என்றார். நம் பாரத நாடானது இன்று உலகம் போற்றும் நாடாக வளர்ச்சி கண்டுள்ளது.
ஒரு நாடானது அனைத்து வளங்களைப் பெற்றாலும் அந்நாடு தூய்மையானதாகவும் ஊழலற்ற வகையிலும் காணப்படுமாயின் அதுவே சிறப்பாகும். இந்திய நாடானது சுற்றுச்சூழல் மாசடைதல் இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளது.
அழகிய இயற்கை நிறைந்த இந்திய நாட்டில் அதனை களங்கப்படுத்தும் வகையில் தூய்மையற்றுக் காணப்படுகின்றது. இதற்கு காரணம் அனைத்து இந்திய பிரஜைகளும் தான். தூய்மை இந்தியா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மாசடையும் சூழல்
இந்தியாவில் பல மாநிலங்கள் உட்பட பல கிராமங்களில் சூழல் மாசடைவதை சந்தித்துள்ளன. தலைநகர் புதுடெல்லி உட்பட மும்பை⸴ தமிழகம் என பல இடங்களும் சூழல் மாசடைவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்திய நாட்டின் சனத்தொகைப் பெருக்கமானது சூழல் மாசடைவில் முக்கிய பாதிப்பினைச் செலுத்துகின்றது. வாகன பெருக்கம் போன்றனவும் வளிமண்டலம் மாசடைதலில் தாக்கம் செலுத்துகின்றது.
உலகளாவிய வளிமண்டலத்தில் அதிக காபனீரொட்சைட் வெளியிடும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தினை வகிக்கின்றது.
இந்திய நாட்டின் சுற்றுலா தளங்கள் உட்பட பல இடங்கள் மாசுபட்டு வருகின்றன. கங்கை மற்றும் யமுனை நதிகள் அதிகளவு மாசடைவினை எதிர்நோக்குகின்றன.
தூய்மையின்மைக்கான காரணங்கள்
மக்களது தூய்மையற்ற பல நடவடிக்கைகள் தான் இந்தியாவிற்கு பெரிதும் காரணமாக உள்ளது.
குறிப்பாகப் பொது இடங்களில் குப்பை கொட்டுதல்⸴ கழிவுகளை உரிய முறையில் அகற்றாமல் வீதியோரங்களில் வீசுதல்⸴ மலசலம் கழித்தல்⸴ எச்சில் துப்புதல் போன்ற பல காரணங்களைக் கூறலாம். மேலும் வாகனப் புகைகள் மற்றுமோர் காரணமாக அமைகின்றது.
பொது இடங்களில் புகைப் பிடித்தல்⸴ வீட்டுக் கழிவுகளை வீதியில் போடுதல் காரணமாகவும் சுற்றுச்சூழல் அசுத்தமடைகின்றது.
தூய்மைப் பாரத இயக்கம்
தூய்மை பாரத இயக்கம் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. சுகாதார வசதிகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து முயற்சிகளும் துரிதப்படுத்தப்பட்டது.
தற்போது பகுதி-2 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒட்டுமொத்த தூய்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் நோக்கம் திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழித்து தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்,
சுகாதாரக் கல்வி மற்றும் விழிப்புணர்வு அறிவியல் பூர்வமான திட மற்றும் திண்மக் கழிவு மேலாண்மை முறைகளைச் சமூகத்தால் நிர்வகிக்கப்படும் வகையில் ஏற்படுத்தல் போன்ற பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியாவின் மாணவர்களின் பங்களிப்பு
பள்ளியில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறியக் கூடாது. இதனால் வகுப்பு மற்றும் பாடசாலை மாசடைகின்றது. எனவே மாணவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளியை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும்.
கல்வியில் தூய்மையை ஓர் பாடமாக்க வேண்டும். சுத்தமாக இருப்பது ஒரு ஒழுக்க பண்பாகும். அவர்கள் கற்கும் பாடம் ஒரு தூய்மையான வளமான இந்தியாவை உருவாக்கும்.
பள்ளிக்கு செல்லும் வழியில் காணப்படும் குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் போட வேண்டும். வாரம் ஒருமுறை மாணவர்கள் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த வேண்டும். இவ்வாறான செயல்பாடுகள் தூய்மையான எதிர்கால சமூகத்தை உருவாக்கும்.
முடிவுரை
நாம் தூய்மை இந்தியாவில் பங்கேற்றுச் செயற்பட்டால் தூய்மையான பாரதத்தை உருவாக்கிட முடியும். நம்மால் முடிந்த அளவு நம் தேசத்தில் பங்கெடுப்பது தலையாய கடமையாகும்.
ஒரு மாபெரும் தேசத் தூய்மையை மேற்கொண்டு தூய்மை இந்தியாவை உருவாக்கி காப்போம். வாழ்க பாரதம்! வளர்க தூய்மை!
You May Also Like: |
---|
சுத்தம் சுகாதாரம் கட்டுரை |
சுத்தம் சுகம் தரும் கட்டுரை |