தொழிற்சாலை பாதுகாப்பு கட்டுரை

tholirsalai pathukappu katturai in tamil

இந்த பதிவில் “தொழிற்சாலை பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

குறைவான முதலீட்டில் அதிக இலாபம் சம்பாதிக்க குறைவான தொழிற்சாலை பாதுகாப்புடன் மக்கள் வேலை செய்யும் ஆபத்தான போக்கினை அவதானிக்க முடிக்கின்றது.

தொழிற்சாலை பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வேலைசெய்யும் சூழல்
  3. பாதுகாப்பு அணிகலன்கள்
  4. சுயவிழிப்புணர்வு
  5. ஆபத்துக்களை குறைத்தல்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய உலகில் உற்பத்தி துறையானது மிகவேகமான வளர்ச்சியடைந்து வருவதனால் உலகெங்கிலும் அதிகளவான தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. அவற்றில் பல லட்ச கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த தொழிற்சாலைகள் வாயிலாக அதிகளவான வருவாய் ஈட்டப்படுகின்றது. இருப்பினும் அங்கே வேலை பார்க்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இக்கட்டுரையில் தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாக நோக்குவோம்.

வேலைசெய்யும் சூழல்

கைத்தொழிற்சாலைகள் அதிகம் இலாபம் ஈட்டுவதை முதன்மையாக கொண்டவை. வர்த்தக ரீதியிலான உற்பத்திகளை மேற்கொள்வதனால் அதி நவீன இயந்திரங்களினை உள்ளடக்கியதாகவே வேலைத்தளங்கள் அமைந்திருக்கின்றன.

ஆகவே இவற்றின் இராட்சத இயந்திரங்கள் மனதளவிலும் உடலளவிலும் தொழிலாளர்களுக்கு ஆபத்து நிறைந்தவையாக காணப்படுகின்றன. மன உளைச்சல் மற்றும் உடல் உபாதைகள், உயிராபத்துக்கள் என்பனவும் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளன.

பாதுகாப்பு அணிகலன்கள்

தொழிற்சாலைகளின் விதி முறையின் படி ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் தம்மை பாதுகாத்து கொள்கின்ற பாதுகாப்பு அணிகலன்களை அணிந்து வேலை செய்ய வேண்டும்.

அதாவது தலைக்கவசம், கண்ணாடிகள், காதுகவசங்கள், பாதுகாப்பான ஆடைகள், கையுறைகள், முகக்கவசங்கள் பாதுகாப்பான காலணிகள் போன்றவற்றை அணிவதன் மூலமாக உடல் அங்கங்களை பாதுகாத்து கொள்ள முடிகின்றது.

சுயவிழிப்புணர்வு

பல பாதுகாப்பு வழிமுறைகள் தொழிற்சாலைகளில் காணப்படுகின்றன. மற்றும் நிறுவனங்களினால் வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகள் பயிற்சி நெறிகள் மூலமாக ஒரு தொழிலாளர் எவ்வாறு தன்னை பாதுகாத்து கொண்டு சிறப்பாக பணியாற்ற முடியும் என்பதனை தெளிவுறுத்துகின்றன.

இவற்றை தாண்டி ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது விபத்துக்களை தவிர்ப்பதாக அமையும்.

ஆபத்துக்களை குறைத்தல்

பொதுவாக தொழிற்சாலைகளில் வாயுக்கசிவுகள், மின்கசிவுகள், தீ பரவுகை, வெடிப்பு சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று பல உயிர்கள் பறிபோவது அடிக்கடி இடம்பெறுகின்றது.

இவற்றை குறைக்க பாதுகாப்பு முன்னாயத்தங்களை மேற்கொள்ளல் மிகுந்த அவதானத்துடன் தொழிற்சாலைகளில் பணியாற்றுதல் போன்றவற்றின் மூலம் ஆபத்துக்களை குறைத்து கொள்ள முடியும்.

மற்றும் அனர்த்த தணிப்பு குழுக்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

முடிவுரை

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை மற்றும் உழைக்கும் வர்க்கம் அதிகம் உள்ள நாடுகளில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் பல தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன.

இதன் வாயிலாக குறைவான முதலீட்டில் அதிக இலாபம் சம்பாதிக்க குறைவான தொழிற்சாலை பாதுகாப்புடன் மக்கள் வேலை செய்வதனை அவதானிக்கலாம்.

இவற்றை தவிர்த்து வேலைத்தளங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்த பட வேண்டும் என்பது தொழிலாளர்களது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

You May Also Like:
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை
மண் வளம் காப்போம் கட்டுரை