இந்த பதிவில் “நான் உருவாக்க விரும்பும் விசித்திர வீடு கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
நான் உருவாக்க விரும்பும் விசித்திர வீடு கட்டுரை – 1
நாம் அன்றாடம் ஓய்வாக பாதுகாப்பாக தங்கும் இடம் வீடாகும். வீடு மனிதர்களால் அவர்களிற்கு வசதிற்கேற்ப ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாக அமைக்கப்படுகின்றது. ஒருநாள் நான் ஒரு ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் காட்டப்பட்ட விசித்திரமான ஒரு வீடு என்னுடைய கவனத்தையும் ஆர்வத்தையும் கவர்ந்தது. உயர் தொழில்நுட்பத்தையும் நவீன கண்டுபிடிப்புக் கருவிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட வீடு அது.
அன்றிலிருந்து அவ்வாறானதொரு வீட்டை அமைக்க வேண்டும் என்ற ஆவல் உருவானது. இன்றைய உலகானது நவீனமாக மாற்றமடைந்துள்ளது. நம்முடைய வேலைகளை இலகுவாக மாற்றுவதற்கு பல்வேறு சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் கொண்டமைந்ததாக அந்த வீடு காணப்படும்.
இலத்திரனியல் மயமான அந்த வீட்டில் கணனியின் கட்டளைகளைக் கொண்டே அனைத்தும் இயங்குமாறு அதனைக் கட்டமைப்பேன். அதுமட்டுமின்றி எனது வாய்மொழிகளை வைத்து தானியங்கும் அதிஉச்ச நவீன முறைமையை அது கொண்டிருக்கும்.
நான் அமைக்க நினைக்கும் அந்த விசித்திர வீட்டில் சுவர்கள் அனைத்தும் பளிங்கு கண்ணாடியால் அமைக்கப்படுவதோடு, காலநிலை மாற்றத்திற்கேற்ப அவை அவற்றின் வெப்பநிலையை மாற்றிக் கொள்ளும் வகையில் அவற்றை உருவாக்குவேன்.
நான் உருவாக்க நினைக்கும் வீட்டை நினைக்கும் போதெல்லாம் உருவத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் விசித்திரமாக உருவாக்குவேன். அதுமட்டுமின்றி அந்த வீட்டை ஒரு இடத்திலிருந்து இடத்திற்கு மாற்றும் வசதிபடைத்தாக உருவாக்குவேன்.
விசித்திரமான அந்த வீட்டில் மனிதர்களிற்கு பதிலாக ரோபோக்களை நடமாட செய்வேன். கதவுகளில் தொடுதிரைகள் அமைத்து இரகசிய இலக்கங்களை பயன்படுத்தி அவைகளை இயக்குவேன். அனைவரும் பார்த்து வியக்கும் வண்ணம் அந்த விசித்திரமான கனவு வீட்டை உருவாக்கி வாழ்வதே எனது நோக்கமாகும்.
நான் உருவாக்க விரும்பும் விசித்திர வீடு கட்டுரை – 2
ஒவ்வொரு மனிதர்களும் தங்களுடைய ரசனைகளுக்கும், கனவுகளிற்கேற்பவும் வீடுகளை அமைப்பர். வீடுகள் அளவில் சிறியவனவாகவோ, பெரியனவாகவோ வெவ்வேறு வடிவங்களில் காணப்படும்.
அந்த வகையில் நான் உருவாக்க விரும்புவது விசித்திரமான ஒரு வீடாகும். இயற்கையை இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்காகும். இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் காடுகளிற்கு நடுவே வீடொன்றை அமைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு.
உயர்ந்த மரங்களை பயன்படுத்தி அவற்றை இணைத்து வீடு அமைப்பேன். அடர்ந்த வனப்பகுதியில் அசாதாரண அமைதி காணப்படும் இடத்தில் வாழ்வது மிகவும் திகிலான அனுபவத்தை பெற்றுத் தரும்.
கற்களையோ சீமேந்தையோ பயன்படுத்தாமல் வெறுமனே மண் மரப் பலகைகள் கொண்டு அமைப்பேன். பல்வேறு நவீனமயமாக மரவீடுகள் அமைக்கப்படுகின்ற போதும், மரப்பலகை கொண்டு அமைக்கப்படும் மரவீடுகளே எனக்கு மிகவும் பிடித்தமானவை.
உயர்ந்த மரத்தின் இடையில் அமைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு கயிற்றினால் அமைக்கப்பட்ட ஏணியை அமைப்பேன். சிறிய அளவில் அமைக்கப்பட்ட அந்த வீட்டை பூக்கள் மற்றும் களிமண்ணால் அமைக்கப்பட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்வேன்.
எனக்கு மிகவும் பிடித்த வர்ணங்களை சுவற்றிற்கு பூசுவதோடு, பிடித்த ஓவியங்களை சுவற்றில் மாட்டி அழகுபடுத்துவேன். நான் அமைத்த அந்த விசித்திமான மரவீட்டில் அமர்ந்து என்னுடைய பொழுதுகளை ஆனந்தமாக களிப்பேன்.
காடுகளில் சுற்றித் திரியும் விலங்குகளின் உறுமல்களையும் பறவைகளின் கீச்சுக் குரல்களையும் கேட்டு மகிழ்வேன். இதுவே நான் அமைக்க விரும்பும் விசித்திர வீடாகும்.
You May Also Like: |
---|
மின்சாரத்தின் பயன்கள் கட்டுரை |
தன் சுத்தம் பற்றிய கட்டுரை |