நெகிழி மறுசுழற்சி கட்டுரை

நெகிழி மறுசுழற்சி

இந்த பதிவில் “நெகிழி மறுசுழற்சி கட்டுரை” பதிவை காணலாம்.

நெகிழி மறுசுழற்சி நடவடிக்கையானது திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை எளிமையாக்க உதவும் நடவடிக்கையாக உள்ளளது.

நெகிழி மறுசுழற்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நெகிழி
  • நெகிழியின் தீமைகள்
  • மறு சுழற்சி
  • நெகிழி மறுசுழற்சி பயன்பாடுகள்
  • முடிவுரை

முன்னுரை

தற்காலத்தில் உலக நாடுகள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கழிவு மேலாண்மை காணப்படுகின்றது. ஏனெனில் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக மக்களால் வெளியேற்றப்படும் குப்பைகளின் அளவும் அதிகரித்து காணப்படுகின்றது.

கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத தன்மை அடிப்படையில் பிரித்தபின் மக்காத குப்பை வகையினுள் உள்ளடக்கப்படும் பிரதான கழிவான நெகிழியின் மறுசுழற்சி தொடர்பாக விளக்குவதாக இக்கட்டுரை உள்ளது.

நெகிழி

1862 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது தான் இந்த நெகிழி எனப்படும் பிளாஸ்டிக். பொதுவாக நெகிழியின் இளகும் தன்மைக்கேற்ப பாலிஎத்திலின், பாலிபுரொப்பிலின், பாலிஸ்ரின், மற்றும் பாலிவினைல் குளோரைடு போன்றவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் பாலி எத்திலின் வகையானது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதோடு மருத்துவம், வணிகம், அறிவியல், என அனைத்து துறைகளிலிலும் பயன்படுத்தப்படுகின்றது. எடை குறைவாகவும் எடுத்து செல்ல இலகுவாகவும் இருக்கின்றமை நெகிழியின் அதிகளவான பயன்பாட்டிற்கு காரணமாகும்.

நெகிழியின் தீமைகள்

இந்த நெகிழியை தயாரிக்கும் போது வெளிவிடப்படும் இரசாயன கழிவுகள் நீர் நிலைகளில் கலக்கின்றது. இதனால் நீர் நிலைகள் மாசடைவதோடு நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

நெகிழியானது ஒரு மக்காத குப்பை ஆகும். இதனால் இவை எளிதில் மக்காத பொருளாக இருப்பதனால் மண்வளத்தை சிதைப்பதோடு நிலத்தடி நீர் மட்டம் உயர்வதையும் தடுக்கின்றது.

உணவுசார் உற்பத்திகளை நெகிழியினை கொண்டு பொதியிடுதல் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்குவதையும் தற்காலத்தில் பரவலாக அவதானிக்க கூடியதாக உள்ளது.

மறுசுழற்சி

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றமையினால் அவற்றை முறையாக சேகரித்து மறுசுழற்சி மூலம் விஞ்ஞான ரீதியில் மறு உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

நெகிழி மறுசுழற்சி நடவடிக்கையானது திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை எளிமையாக்க உதவும் நடவடிக்கையாக உள்ளளது.

இதன் மூலம் மலை போல் தேங்கி கிடக்கும் நெகிழிக் குப்பைகளை மீள பயன்படுத்தக் கூடியவாறு மாற்றியமைப்பதுடன் நெகிழியினுடைய உற்பத்தியையும் குறைத்துக் கொள்ளலாம்.

நெகிழி மறுசுழற்சி பயன்பாடுகள்

வெறுமனே தீமை விளைவிக்கும் மக்காத குப்பையாக சூழலில் காணப்படும் நெகிழியானது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்ற போது அது பல பயன்களை தருகின்றது.

மறுசுழற்றி செய்யப்பட்ட நெகிழிகளை கொண்டு பயனுள்ள பல வீட்டு பாவனை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சாலைகள் அமைக்கவும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிறந்த எரிதிறன் கொண்டுள்ளமையால் மின்சாரம் தயாரிக்கவும் அத்துடன் சீமெந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இணை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

முடிவுரை

நெகிழி மறுசுழற்சியானது நெகிழிகளை சேகரிப்போர் அவற்றை கொள்வனவு செய்வோர் என ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதோடு வணிக நடவடிக்கையாகவும் தற்காலத்தில் உருவாகி வருகின்றமையினை அவதானிக்கலாம்.

தற்போது நடைமுறையிலுள்ள நெகிழி மறுசுழற்சியினை திறம்பட செயல்படுத்துவதன் ஊடாக பிளாஸ்ரிக் உற்பத்தி சமன்படுத்தப்படுகின்றது.

மத்திய அரசினால் செயற்படுத்தப்படும் தூய்மை இந்தியா என்ற குறிக்கோளை அடைய உதவியாகவும் உள்ளமை நெகிழி மறுசுழற்சியினுடைய பயன்பாட்டினையும் அவசியத்தினையும் எமக்கு உணர்த்துகின்றது.

You May Also Like :
நெகிழி பற்றிய கட்டுரை
நீர் பாதுகாப்பு கட்டுரை