உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று கட்டுரை

உலகை அச்சுறுத்தும் கொரோனா கட்டுரை

இந்த பதிவில் “உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதர்களின் நாகரிகம் அதிகரித்து மற்ற நாடுகளுடன் தொடர்புகள் அதிகரித்தபோது தொற்றுநோய்கள் வேகமாக பரவத் தொடங்கியது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கொரோனா வைரஸ் தோற்றம்
  3. தொற்றுநோய் கற்றுத் தருகின்ற பாடங்கள்
  4. கொரோனாத் தொற்றின் அறிகுறிகள்
  5. கொரோனாத் தொற்றைத்தை தடுக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மனித குலம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பல தொற்று நோய்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. மனிதர்களின் நாகரிகம் அதிகரித்து மற்ற நாடுகளுடன் தொடர்புகள் அதிகரித்தபோது தொற்றுநோய்கள் வேகமாக பரவத் தொடங்கியது.

இதுவரை பல தொற்றுநோய்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது, ஆனால் சர்வதேச பரவல் (Pandemic) என்னும் நிலையை சில தொற்றுநோய்கள் மட்டும்தான் அடைந்துள்ளது.

அந்த வரிசையில் உலகை ஆட்டிப்படைக்கும் தொற்று நோய்களுள் கொரோனா தொற்று நோயும் ஒன்றாக உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கொரோனா வைரஸ் தோற்றம்

அண்மைக் காலம் முதல் இன்று வரை உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி வரும் வைரஸாக கொரோனவைரஸ் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் புகார் நகரில் முதன் முதலில் கொரோன வைரஸ் கண்டறியப்பட்டது.

அவ்வகையில் சீனாவே கொரோனா வைரஸின் பிறப்பிடமாகும். SARS-CoV-2 எனும் வைரஸ்ஸினால் உருவாக்கப்பட்டமையால் COVID-19 என அழைக்கப்படுகின்றது.

தொற்று நோய் கற்றுத் தருகின்ற பாடங்கள்

பாட்டி வைத்தியத்தை அனைவரும் மீண்டும் நினைவில் கொள்ள அனைவருக்கும் ஒரு வாய்ப்பை கொரோனா வழங்கியுள்ளது.

இன்று துரித உணவிற்குப் பழக்கப்பட்ட நாம் இயற்கை பழங்கள், காய்கறிகள், ஸ்பைசஸ் எனப்படும் மிளகு, கிராம்பு, ஏலம் போன்ற வாசனை திரவியம், மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை பெரிதும் மறந்துவிட்டோம்.

எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல், சுய நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவைப்படும் இந்த மசாலா பொருட்களின் பயன்களை மீண்டும் அறிய வைத்துள்ளது.

கொரோனாத் தொற்றின் அறிகுறிகள்

காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஆகியவை இருக்கும். சிலருக்கு டயேரியா பாதிப்புக்கள் கூட இருக்கலாம். மூக்கில் இருந்து நீர் ஒழுகுதல், தலைவலி, இருமல், மேல் சுவாசக் கோளாறு, தொண்டை கரகரப்பு, உடல் சோர்வாக இருத்தல் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் காணப்படும்.

கொரோனாத் தொற்றைத்தை தடுக்கும் வழிமுறைகள்

அடிக்கடி கைகளை நன்கு சவர்க்காரம் இட்டு கழுவுதல் வேண்டும். இருமும் போதோ அல்லது தும்மும் போதோ கைகுட்டை கொண்டு இருமுவது நல்லது. தொடர் சளி, இருமல், சுவாசிப்பதற்கு சிரமம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது சிறந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உயர் ரக சுவாச முகமூடியை வாங்கி அணிந்து கொள்வது சிறந்தது.

முடிவுரை

கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிய போதிலும் அதன் தாக்கம் முற்றுமுழுதாக குறையவில்லை. பலகோடி மக்களை காவு கொண்ட இவ் வைரஸானது உலக நாடுகளில் இன்றும் தனது கொடூர முகத்தை காட்டி வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இக் கொடிய வைரஸ் பாதிப்பால் உலகம் பல மாதக்கணக்கில் முடங்கிக் கிடந்துள்ளது. இந்த உலகில் செல்வந்தர்கள், பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி பலரது உயிர்களையும் காவு கொண்டுள்ளது.

இத்தகைய கொடூர நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதுடன் முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். சிந்தித்து செயலாற்றுவோம். தொற்றிலிருந்து முழுமையாக மீள்வோம்.

You May Also Like :
சுற்றுப்புற தூய்மை கட்டுரை
மனிதனை குடிக்கும் மது கட்டுரை