200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடானது அந்நிய நாட்டவர்களின் ஆட்சிக்குள் சிக்கியிருந்தது. அவ்வேளையில் அவர்களின் பிடியில் இருந்து நாட்டை மீட்க பல தலைவர்கள் தமது மகத்தான பல பங்களிப்புகளை வழங்கி உடனிருப்பவர்களின் துரோகத்தால் வீழ்ந்தனர்.
அந்தவகையில் பிரித்தானியர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரராக காணப்படுபவர்களுள் யூசுப் கான் எனும் மருதநாயகம் குறிப்பிடத்தக்க ஒருவராக காணப்படுகின்றார்.
பிறந்த ஆண்டு | கி.பி 1725 |
பிறந்த இடம் | இராமநாதபுரம் பனையூர் |
இயற்பெயர் | மருதநாயகம் |
மறுபெயர் | முஹம்மத் யூசப்கான் |
பட்டம் | கமாண்டோ கான் சாஹிப் |
இறப்பு | 1964 அக்டோபர் 15 |
ஆரம்ப வாழ்க்கை
மருதநாயகம் அவர்களின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் இந்து வேளாளர் குலத்தை சேர்ந்தவர்களாகவே காணப்பட்டனர். பின்னர் இஸ்லாமிய மதத்தை தழுவினர்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த மருதநாயத்தை அவரது ஊரைச் சேர்ந்த முகம்மது கமல் என்கின்ற இராணுவ வைத்தியரே வளர்த்தார். அதுவரை காலமும் மருதநாயகம் என்ற அழைக்கப்பட்டவருக்கு முகம்மது கமலே, முஹம்மத் யூசுப்கான் என பெயர் மாற்றம் செய்தார்.
மருதநாயகம் சிறுவயது முதல் யோகா, வர்மக்கலை ஆகிய துறைகளில் ஆழமான பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். முறைசார் கல்வியின் மீது ஆர்வங்காட்டாமையினால் மருதநாயகம் சொந்த ஊரான பனையூரை விட்டு வெளியேறினார்.
பணி
தஞ்சாவூரில் இராணுவ சிப்பாயாக பணியாற்றினார். அக்காலத்தில் மருதநாயகத்திற்கு பிரித்தானிய கட்டளைத் தளபதியான கெப்டன் பிரண்டன் அவர்களின் தொடர்ப்பு கிடைத்தது.
இவர் தனது ஆர்வத்தால் பிரெஞ்சு, போர்த்துகீஷ், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கப்டன் பிரன்டன் இடமிருந்து கற்றுக்கொண்டார்.
மருதநாயகம் மொழித்திறனை விருத்தி செய்ததன் பின்னர் தஞ்சாவூரில் இருந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள நெல்லூருக்கு மாற்றப்பட்டார்.
பிரித்தானிய பிரான்சிய போரில் மருதநாயகம்
1692ம்ஆம் ஆண்டில் முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசஷீப் அவர்களினால் நவாப்கள் என்பவர்கள் கர்நாடகா உட்பட பல தென்னிந்திய பகுதிகளில் வரி வசூலிப்பதற்காக நியமிக்கட்டார்கள்.
ஆரம்பத்தில் மன்னர் அவுரங்கஷீப் அவர்களினால், நவாப் சுல்பிக்கார் அலி என்பவரே நவாப்பாக வரி வசூலிக்க நியமிக்கப்பட்டார். இவர் மராட்டி மற்றும் விஜயநகரப் பேரரசுகளை முறியடித்து வெற்றி பெற்றவராவார்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள “ஆர்காட்” என்ற நகரமே ஆற்காடு நவாபுகளின் தலைநகராக காணப்பட்டது.
ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் ராஸா சாஹிப் தலைமையில் 10,000 படை வீரர்களை அனுப்பி வைத்தார். இவர்களுக்கு ஆதரவாக, நெல்லூரின் தலைமை வரி சேகரிப்பாளராக மருதநாயகம் செயற்பட்டார்.
யுத்தத்தில் பிரான்ஸியரின் ஆதரவுடன் செயற்பட்டட சந்தா சாஹிப்பின் படை தோல்வி கண்டது. பிரித்தானியர்கள் முகமது அலி வாலாஜாவை 1749ம் ஆண்டு நவாப்பாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரையிலும் நெல்லூரில், வரி சேகரிக்கும் உரிமையை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினர்.
நவாப் முகமது அலி வாலாஜா இதேவேளை யுத்தக்களத்தில் மருதநாயகம் திறமையைக் கண்டு வியந்த பிரித்தானிய படைத்தளபதி ரொபர்ட் கிளைவ், தனது படையுடன் மருதநாயகத்தை இணைத்தார். அத்துடன் மேஜர் ஸ்ரிங் லோரன்ஸ் யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார்.
பொதுப்பணி
மருதநாயகம விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக மகத்தான பங்களிப்புக்களை புரிந்தார். இந்துக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் அவருக்கு அதிகம் கரிசனை இருந்தது.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் சென்னையில் காணப்பட்டது. அவை கொள்ளைக் கூட்டத்தவர்களான மகாதேவன்களால் சூறையாடப்பட்டது.
அவற்றை மருதநாயகம் கடும்போர் புரிந்து மகாதேவர்களிடம் இருந்து மீட்டுக் கொடுத்தார். அப்பொருட்கள் பல பொருட்கள் இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வைக்கப்பட்டுள்ளன.
சமூகப் பணி
மருதநாயகம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சிறந்த முறையில் கடைபிடித்த சிறந்த தலைவராவார். ஆரம்பத்தில் இந்துவாக இருந்து பின்னர், முஸ்லிமாக மாறிய போதிலும் இந்துக்களின் உரிமைகளை பேணிப்பாதுகாத்தார்.
மருதநாயகம் மதுரை நகரத்தின் ஆளுனராகத் தெரிவுசெய்யப்பட முன்னர் மதுரை அழகர்கோயிலை ஆங்கிலேயர் கைப்பற்றியிருந்தார்.
ஆளுனர் பதவியை மருதநாயகம் ஏற்றுக்கொண்டதன் பின்னர், மதுரை அழகர் கோயிலை இந்து மக்களிடம் ஒப்படைத்தார்.
சுதந்திரப் போராட்டம்
ஆங்கிலேயர்க்கு சார்பாக பணி புரிந்துக் கொண்டிருந்த மருதநாயகம், ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்த பல சிற்றரசர்களை கொன்று குவித்தார்.
அந்தவகையில் கட்டாலங்குளத்து மன்னனும், எட்டயபுர படைத்தளபதியுமான அழகுமுத்துக்கோன் என்பவர் கப்பம் கட்ட மறுத்தான். அழகுமுத்துக்கோன் சிறந்த வீரமிக்க போர் வீரனாக காணப்பட்டான்.
அவனை நேர்மையாக போர் செய்து வீழ்த்துவது கடினம் என்பதை அறிந்த மருதநாயகம் சூக்சகமாக சிந்தித்து அழகுமுத்துக்கோனையும் அவனது படையினரையினரையும் கைப்பற்றினார்.
அழகுமுத்துக்கோனுக்கு பல இன்னல்கள் ஏற்படுத்தியும் அவன் கப்பம் செலுத்த ஒத்துக் கொள்ளவில்லை. அவன் இறக்கும் தருவாயிலும் கப்பம் செலுத்த மறுத்ததும், தாய் நாடு பற்றிய எண்ணமும் வீரமான பேச்சும் மருதநாயகத்தை ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய தூண்டியது.
ஆங்கிலேயரின் நிர்வாகம், போர் திறன் யாவற்றையும் அறிந்த மருதநாயகம் ஆங்கிலேய படையினரை பல இடங்களில் இலகுவாக தோற்கடித்தார். ஆங்கிலேய படையினருக்கு எதிராக பாரிய படையை திரட்டி போர் புரிந்தார்.
இறப்பு
1764 அக்டோபர் மாதம் 13ம் தேதி மருதநாயகம் தொழுகையில் ஈடுபட்டபோது, அவரின் குடும்ப உறவினர்களால் கைதுசெய்யப்பட்டு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டார். 1764ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி மருதநாயகம் தூக்கிலிடப்பட்டார்.
ஆனால் மூன்று தடவைகள் தூக்கிலிடப்பட்டும் அவர் மரணிக்கவில்லை. இறுதியாக வர்மக்கலை வல்லுனர்கள் மருதநாயகத்தின் நரம்புகளை செயலிழக்கச் செய்து மரதநாயகம் கொலைசெய்யப்பட்டார்.
You May Also Like: |
---|
மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு |
குயிலி வரலாறு |