வியத்தகு விந்தை கணிதம் கட்டுரை

Viyathagu Vinthai Kanitham

ஆரம்ப காலங்களில் கடவுளின் மொழியென வர்ணிக்கப்பட்ட கணிதத்தை பற்றி இந்த “வியத்தகு விந்தை கணிதம் கட்டுரை” தொகுப்பில் நோக்கலாம்.

கணிதத்தை வளர்த்தவர்கள் அனைவரும் கணிதம் படித்தவர்கள் அல்ல. கணிதம் என்பது வாழ்வியலோடு ஒன்றாக கலந்தது ஆகும்.

கணிதம் எப்போது தோன்றியது என்று அறிய முடியவில்லை. ஆனாலும் ஆதிமனிதன் காட்டில் வேட்டையாடி வாழ்ந்த காலத்திலே கணிதம் தோன்றிவிட்டது என்பதே உண்மை. உலகில் உள்ள அத்தனை மொழிகளும் வரிவடிவம் பெறுவதற்கு முன்னரே கணிதம் வரிவடிவம் பெற்று விட்டது.

இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எண் எழுத்துக்கள் ஐரோப்பிய எழுத்துக்கள் ஆகும். இதை விட பல எண் எழுத்துக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

வியத்தகு விந்தை கணிதம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கணிதத்தின் ஆரம்பம்
  3. கணிதத்தின் அவசியம்
  4. கணிதத்தின் உபயோகங்கள்
  5. வியப்பான விடைகள்
  6. முடிவுரை

முன்னுரை

கிரேக்க சொல்லான “mathamatica” என்ற சொல்லிற்கு கற்க முடிந்தது என்று பொருள் ஆகும். அன்றாடம் நாம் உபயோகம் செய்கின்ற பற்தூரிகையில் இருந்து விண்ணுக்கு ஏவப்படுகின்ற விண்வெளி ஓடங்கள் வரை கணிதம் இன்றி எதுவும் சாத்தியமில்லை.

கணிதம் என்ற இந்த அடிப்படையானது கிரேக்கம், ஐரோப்பா, இந்தியா, அரேபியா என பல தேசங்களின் வரலாறுகளோடு ஆரம்பம் ஆகின்றது.

கணிதம் என்பது வெறுமனே கல்வி அன்று இது வாழ்வோடு இணைந்த பல பிரயோகங்களை கொண்டிருப்பதனால் இதன் அவசியமும் வளர்ச்சியும் அபரிமிதமானதாகும். அன்றாட வாழ்வோடு இணைந்த இந்த கணிதம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கணிதத்தின் ஆரம்பம்

கணிதத்தினுடைய ஆரம்பமானது பல ஆண்டுகால வரலாற்று காலங்களோடு தொடர்புடையது கூட்டல் குறியானது இத்தாலியர்களால் கண்டறியப்பட்டது. பெருக்கல் குறியை லிப்னீஸ் என்ற ஜேர்மானியர் கண்டுபிடித்தார்.

கூழாங்கற்களை எண்ணுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டதே எண் சட்டங்களாக வளர்ச்சி கண்டது. தசம முறை எண் கணிதத்தை கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள் ஆவர். மெசப்பதோமியா மற்றும் கிரேக்கம் போன்ற நாடுகளில் இருந்தும் கணிதம் வளர்ச்சி கண்டது.

கணிதத்தின் அவசியம்

சாதாரணமாக அன்றாடம் நாம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் அனைத்திலும் கணிதத்தின் உபயோகம் உள்ளது. வியாபாரம், வீட்டு செலவுகள், வருமானம், செலவு என துவங்கி நாம் கணிதத்தை வைத்தே அனைத்தையும் துல்லியமாக கணக்கிடுகின்றோம்.

கட்டட நிர்மாணம், பணபரிமாற்றம், புதிய புதிய கண்டுபிடிப்புக்கள், நேரம் மற்றும் காலம் என அனைத்தும் எண் கணிதத்தின் மூலமாகவே கணிப்பிடப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

கணிதத்தின் உபயோகம்

கல்வி துறையில் கணித பாடமானது மிகவும் முக்கியமான பாட துறையாக உள்ளது. இதனால் தான் எம் முன்னோர் “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்று கூறியுள்ளனர்.

கணித பாடத்தில் சிறந்து விளங்கினால் அனைத்து துறைகளிலும் சிறப்பான அடைவு மட்டங்களை அடைந்து கொள்ள முடியும். வாழ்வில் எல்லா விடயங்களையும் சரியாக கணிப்பிட்டு துல்லியமாக கணிக்க கணித அறிவு மிகவும் அவசியமாகும்.

பொருளாதார துறைகள், அபிவருத்தி துறைகள், விஞ்ஞான கண்டு பிடிப்புகள் என அனைத்திலும் கணிதம் உபயோகமாகின்றது.

முடிவுரை

கணிதம் என்ற ஒற்றை சொல்லின் விந்தையினால் தான் இந்த உலகில் பல அசாதாரணமான கண்டுபிடிப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் மாற்றம் மற்றும் வளர்ச்சி கணிதவியலினால் பல வழிகளிலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

கல்வி துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்த இந்த கணிதம் என்கின்ற நுட்பம் மிகவும் அடிப்படையான அம்சம் என்றால் மறுப்பதற்கில்லை.

You May Also Like:

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை