தமிழர் திருநாள் கட்டுரை

Thamizhar Thirunaal Katturai

கலாச்சார அடிப்படையில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன அந்த வகையில் முக்கியமான பண்டிகையான தமிழர் திருநாள் கட்டுரை பதிவை இங்கு நோக்கலாம்.

இந்த திருநாள் பல சிறப்புகளை உள்ளடக்கியது. அந்த வகையில் விவசாயம் செழிக்க உறுதுணையாக இருந்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

தமிழர் திருநாள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. போகித் திருநாள்
  3. பொங்கல் திருநாள்
  4. காணும் பொங்கல்
  5. பொங்கல் திருநாளின் சிறப்புக்கள்
  6. முடிவுரை

முன்னுரை

முன்னோர்கள் சமய⸴ கலாச்சார அடிப்படையில் பல பண்டிகைகளைக் மேற்கொண்டு வந்துள்ளனர். “தை பிறந்தால் வழி பிறக்கும்ˮ என்பது முன்னோர் வாக்காகும். இதற்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழ் திருநாள் பொங்கல் திருநாளாகும்.

பழமைகளைப் பக்குவமாய் வழியனுப்பி புது வரவுகளுக்கு வரவேற்பு அளித்திடும் வண்ணத் திருநாள் தான் தமிழர் திருநாள். சிறப்பு மிக்க இந்த திருநாள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போகித் திருநாள்

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவதே போகித் திருநாள் ஆகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் சிறப்பாகும்.

வீடும்⸴ நாடும் தூய்மைபட்டு சுற்றுச்சூழலை போற்றுகின்ற இனிய திருநாளிலே போகி ஆகும். இந்த நாளிற்காக வீட்டை சுத்தம் செய்வது⸴ வண்ணம் பூசுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

பொங்கல் திருநாள்

உலகின் எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் உணவு முக்கியம் வகிக்கின்றது. அவ்வகையில் விவசாயம் இன்றியமையாததாகும். இத்தொழில் மேன்மையை உலகமே நினைவிற் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் திருநாளின் தார்ப்பரியம் ஆகும்.

சங்க காலத்திலிருந்து மருத நிலமும் உழவர்களும்⸴ உழவுத் தொழிலின் பெருமையும் பேசப்பட்டு வருகின்றது. இவ்வுலகிற்கு சூரியசக்தி மிகமிக முக்கியம் வாய்ந்தது. சூரியன் இன்றி பயிர்கள் செழிக்காது⸴ உயிர்களும் வாழ முடியாது⸴ மழையும் பொழியாது. பொதுவாக உலகில் எதுவுமே இயங்காது.

தமிழர் திருநாளில் சூரியனை வணங்கி புதிய பானையில் பொங்கல் செய்து⸴ சூரியனுக்குப் படையல் இடப்படுகின்றது. அதற்கடுத்த நாள் விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ள ஏற்பாடுகளுக்கு பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை நிகழ்வுகள் தமிழர் வாழ்வியலை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.

காணும் பொங்கல்

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் வரும் நிகழ்வே காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார்⸴ உறவினர்கள்⸴ நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். அதுமட்டுமன்றி குடும்பத்துடன் எல்லோரும் விரும்பிய இடங்களுக்குச் சென்று தமது நேரத்தை மகிழ்வாகக் களிப்பார்கள்.

பொங்கல் திருநாளின் சிறப்புக்கள்

தமிழர் திருநாளானது பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகும். உயிர்களை காக்கும் உன்னத தொழிலான விவசாயத்தை போற்றும் பண்டிகையாகும். இதனால் தான் “விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்பார்கள்.

இவ் சிறப்பு மிக்க விவசாயத்திற்காக வருடம் முழுவதும் நல்ல நீரையும் உண்ண உணவும் கிடைக்க வேண்டுமென்றும்⸴ மும்மாரி பொழிய வேண்டுமெனவும் இயற்கையான சூரியனை வழிபடும் அற்புதமான நாள் ஆகும்.

அத்தோடு சகல உயிர்களுக்கும் உணவளிக்கும் தமிழர் பண்பாடு இந்நாளில் உலகிற்கு வெளிப்படுத்தப்படுகின்றமை மற்றுமொரு சிறப்பாகும்.

முடிவுரை

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றி நிற்கும் திருநாளே தமிழர் திருநாள் ஆகும். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்ˮ என்ற திருமூலரின் வாக்கிற்கிணங்க அர்த்தம் தரும் பண்டிகையாகும்.

உழைப்பின் பயனை நினைவுகூர்ந்து மற்றவர்களுக்கும் பகிர்ந்துண்டு இயற்கையை நினைவுகூர்ந்து இயற்கையைப் போற்றி வாழ்வது சிறந்த வாழ்க்கை என்பதை நம் முன்னோர்கள் தமிழ் திருநாளில் நமக்கு உணர்த்தி உள்ளனர். இப் பெருமையை நாமும் உணர்ந்து வாழ்வில் சிறப்போம்.

You May Also Like:

தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்