இந்த பதிவில் “விரைவான தொழில்நுட்ப மாற்றம் கட்டுரை” பதிவை காணலாம்.
இன்றைய உலகம் விரிவான தொழில்நுட்ப வளர்ச்சியினால் சுருங்கி தொழில்நுட்ப உலகமாகக் காணப்படுகின்றது.
விரைவான தொழில்நுட்ப மாற்றம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலகம் அன்றும் இன்றும்
- கல்வியில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி
- தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள்
- விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்க்கையில் உணவு, உடை, உறையுள் என்பவற்றுடன் தொழில்நுட்பமும் முக்கியம் பெற்றுவிட்டது. பண்டைய கால உலகத்திற்கும் இன்றைய கால உலகத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
இன்றைய உலகம் விரிவான தொழில்நுட்ப வளர்ச்சியினால் சுருங்கி தொழில்நுட்ப உலகமாகக் காணப்படுகின்றது. இன்றைய உலகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு தொழில்நுட்பமே துணைபுரிகிறது.
அதேவேளை விரிவான தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்துவதில் இருந்தும் தவறவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். விரைவான தொழில்நுட்ப மாற்றம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உலகம் அன்றும் இன்றும்
பண்டைய காலங்களில் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டே போக்குவரத்தை மேற்கொண்டிருந்தனர். போக்குவரத்திற்காக மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவற்றை பயன்படுத்தினர்.
ஆனால் இன்று உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது முச்சக்கர வண்டி முதல் சொகுசு வாகனங்கள் வரை தொழில்நுட்பமாகவே காணப்படுகின்றது. இவற்றின் மூலம் போக்குவரத்து மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது.
குறுகிய நேரத்தில் பல மைல் தூரங்களை கடந்து செல்வதற்கு விரிவான தொழில்நுட்ப வளர்ச்சியே காரணமாகின்றது.
ஆரம்பத்தில் குரு மற்றும் சீடர்களை அடிப்படையாகக் கொண்ட குருகுல கல்வியே காணப்பட்டது. ஆனால் இன்று தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது.
பண்டைய காலத்தில் தொடர்பாடலுக்காக கடிதம் மற்றும் தூது முறைகள் காணப்பட்டன. இத் தொடர்பாடலுக்கு பல நாட்கள் எடுத்தன. எனினும் தற்போது நொடிக்கு நொடி கையடக்க தொலைபேசியின் ஊடாக தொடர்பாடலை மேற்கொள்ள முடிகின்றது.
கல்வியில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி
இன்று கல்வியில் தொழில்நுட்பமானது ஆழமாக வேரூன்றியுள்ளது. இன்றைய வகுப்புகளில் பயிற்சிக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒரு கருவியாக தொழில்நுட்பம் பயன்படுகிறது.
கணினி வழிக் கற்கை இணைய வழிக் கற்கை என்பன கல்வித் துறையின் நவீன வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள்
ஆரம்ப காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த மனிதர்கள் நாகரீகத்தின் காரணமாக நல்ல வாழ்க்கையை மேற்கொள்வதற்கும் தொழில்நுட்பமே காரணமாக அமைந்தது.
தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவம் அறிவியல், கல்வி, போக்குவரத்து, விஞ்ஞானத்துறை, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகள் நன்மையடைகின்றன.
இன்று உலகளாவிய ரீதியில் கையடக்கத்தொலைபேசி என்பது உச்ச தொழில்நுட்பம் கொண்ட ஒரு தொடர்பாடல் கருவியாக காணப்படுகின்றது
உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்களை செய்திகளை அறிந்து கொள்வதற்கும் பல்வேறு தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுகின்றன.
மனித உயிர்காக்கும் மருத்துவத்துறையில் தொழிநுட்பத்தின் பங்களிப்பு அளப்பரியது. புதிய வகையான நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் தொழில்நுட்பக் கருவிகள் உறுதுணையாக உள்ளன.
விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகள்
விரைவான தொழிநுட்ப வளர்ச்சியினால் மனித குலத்துக்கு தீங்குகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. மக்களுக்கு இன்றைய காலத்தில் பெரும் தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கும் நவீன சாதனங்களில் ஒன்றாக ‘ஸ்மாட் போன்’ மாறியிருக்கின்றது.
இதனால் பள்ளி மாணவர்கள் கல்வியில் நாட்டம் இல்லாது தவறான வழிகளில் செல்வதற்கு காரணமாகின்றது. இணையத்தளம், சமூகவயைத்தளங்கள் போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆபத்தான ஆயுதங்களை தயாரித்து அழிவை ஏற்படுத்தி தங்கள் நாட்டின் பலத்தை வெளிப்படுத்த பல நாடுகள் முனைப்பு காட்டுகின்றன.
முடிவுரை
பல்வேறு நன்மைகளை தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பெற்றுக் கொண்டாலும் சில தீமைகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றது.
எனினும் விரிவான தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளையும் பெற்று கொடுத்த அதேவேளை மனித வாழ்வில் இன்றியமையாததாகத் தொழில்நுட்ப வளர்ச்சி பார்க்கப்படுகின்றது.
எனவே தீமைகளைக் களைந்து நன்மைகளை பெற்று நலமாக வாழ்வோமாக!
You May Also Like : |
---|
உலகமயமாதல் கட்டுரை |
அறிவியல் வளர்ச்சி கட்டுரை |