கார்த்திகை தீபம் கட்டுரை

karthigai deepam katturai in tamil

தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் ஒன்றே கார்த்திகை தீபமாகும். ஒளி தரும் சிறப்பு மிக்கதொரு நாளகவே கார்த்திகை தீபத் திருநாள் திகழ்கின்றது. இந்நாளில் அனைவரும் மகிழ்ச்சியுடனே காணப்படுவர் என்பது இந்நாளின் சிறப்பாகும்.

கார்த்திகை தீபம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கார்த்திகை தீபம் என்பது
  • கார்த்திகை தீபத்தின் முக்கியத்துவம்
  • கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
  • கார்த்திகை தீப வழிபாடு
  • முடிவுரை

முன்னுரை

ஓர் சிறப்புமிக்க பெருநாளாக தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருவதே கார்த்திகை தீபமாகும். அதாவது கடவுள்களான சிவனுக்கும், முருகனுக்கும், பெருமாலுக்கு உகந்ததொரு மாதமாகவே காரத்திகை மாதம் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த மாதத்தில் சிறப்பு பெற்ற ஒரு நன்நாளே கார்த்திகை தீப நாளாகும்.

கார்த்திகை தீபம் என்பது

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருகார்த்திகை நன்நாளில் தமிழர்கள் தங்களது வீடுகளிலும் கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடுவதாகும்.

அதாவது மாலை வேலையில் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது வீட்டு முற்றத்திலோ விளக்கேற்றி கார்த்திகை தீப திருநாளை கொண்டாடி வருவர். இங்கு ஏற்றப்படும் தீபமானது ஒளி தரும் மங்களப் பொருநாளாக முன்னோர்களால் கருதப்படுகிறது.

மேலும் இல்லங்களை விளக்குகளால் அலங்கரிப்பதோடு இல்லங்களை ஒளிரச் செய்து வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

கார்த்திகை தீபத்தின் முக்கியத்துவம்

கார்த்திகை தீபம் அன்று ஏற்றப்படும் தீபமானது எமது கஷ்டங்களை நீக்கி எமது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு வித்திடக்கூடியதொரு நன்நாளாகும். மேலும் சிவபொருமான் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதானது கார்த்திகை தீப திருநாளின் முக்கியத்துவத்தினையே எடுத்துக்காட்டுகின்றது.

இத்திருநாளின் முக்கியத்துவங்களில் ஒன்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் 27 தீபங்களை ஏற்றி சிறப்பாக கொண்டாடுவதாகும்.

கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

தீப வழிபாடானது சூரியனை பலப்படுத்தும் ஓர் சிறந்த பரிகாரமாகும். மேலும் ஆத்ம பலத்தை அதிகரிக்கின்றதோர் வழிபாடாகும். அந்த வகையிலே கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடி வழிபடுகின்றனர்.

இந்த தீப வழிபாடானது ஆரேக்கியம், நன்மை, நல்லபுத்தி என்பவற்றை அனைவருக்கும் தந்தருளக்கூடியதொரு நாளாக திகழ்கின்றது.

கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கான மற்றுமொரு காரணங்களுள் ஒன்றாக திருவண்ணாமலை திருத்தலத்தில் ஜோதியாக திகழ்ந்த சிவபெருமானின் அடிமுடியை காணும் நோக்கில் பிரம்ம தோவனானவர் அன்னப்பறவை வடிவில் பறந்து சென்றார்.

ஆனால் அவரால் அடிமுடியை காணமுடியவில்லை இதன் காரணமாக இறைவன் தொடக்கம் முடிவு இல்லாதவன், மனிதனின் ஞானம் ஜோதி வடிவானது என்றடிப்படையில் ஞானத்தையுடையவர்கள் இருளை போக்கி ஞான ஜோதியாவதை எடுத்தியம்பக்கூடியதாகவே கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீப வழிபாடு

கார்த்திகை தீபநாளில் கிழக்கு வாசல் நோக்கி வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து சொக்கப்பனைக்கு அக்கினியிட்டு ஜோதியாக காட்சியளிக்க செய்து சிவபெருமானை சோதி பிழம்பாக தோன்றிய காட்சியை எண்ணி வழிபாட்டில் ஈடுபடுவர்.

இல்லங்களை தீபங்களால் ஒளியேற்றுவதோடு குமாராலயம், சர்வாலயதீபம், விட்டுணுவாலய தீபம் போன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவர். மேலும் நைவேத்தியம், அவல், கடலை போன்றவற்றை இறைவனுக்கு படைத்தும் வழிபாடுகளை மேற்கொள்வர்.

முடிவுரை

கார்த்திகை தீபநாளில் அனைவரும் ஒற்றுமையாகவும் மகிழச்சியாகவும் திகழ்வதோடு பல நன்மைகளை பெற்று அந்த நன்நாளில் தீப வழிபாடுகளில் ஈடுபடுவர். இந்நாளானது தமிழ் மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு மிக்கதொரு திருநாளகும்.

You May Also Like:

ஆடி கிருத்திகை வரலாறு

சித்திரை புத்தாண்டு வரலாறு