சைவமும் தமிழும் கட்டுரை

saivamum tamilum katturai in tamil

நாம் வாழக்கூடிய உலகில் மக்கள் பல்வேறு சமயங்களை பின்பற்றக் கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்த வகையில் இந்து சமயம், இஸ்லாம் சமயம், பௌத்த சமயம், கிறிஸ்தவ சமயம், சைவ சமயம், சமண சமயம் என பல்வேறு சமயங்கள் உலகெங்கிலும் பரவிக் கிடப்பதனை காண முடியும்.

இவ்வாறான சமயங்கள் அனைத்துக்கும் அடித்தளமாக காணப்படுவது கடவுள் மீது காணப்படக்கூடிய இறை பக்தி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சைவமும் தமிழும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சைவ சமயத்தின் தொன்மை
  • தமிழ் மொழியின் தொன்மை
  • சைவ சமயத்தில் தமிழ் மொழியின் பங்கு
  • முடிவுரை

முன்னுரை

உலகில் வாழக்கூடிய மனித சமூகத்தை அறநெறிப்படுத்தி, நல்வழி ஊட்டுவதற்காகவே சமயங்கள் உருவாக்கப்பட்டன என்ற நம்பிக்கை இன்று பல்வேறு அறிஞர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இதன்படி ஒவ்வொரு சமயத்தினதும் நம்பிக்கையாக இறைபக்தி காணப்படுவது போல, சைவ சமயத்தின் தாரக மந்திரமாக “அன்பே சிவம்” என்பது காணப்படுகின்றது.

ஒவ்வொரு சமயமும் தங்களுடைய சிந்தனைகளையும், கருத்துக்களையும், அறநெறிகளையும் மனிதர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான கருவியாக மொழியை பயன்படுத்தின. இதன் அடிப்படையிலேயே சைவமும் தமிழும் எவ்வாறு காணப்பட்டது என்பதனை இக்கட்டுரையில் நோக்கலாம்.

சைவ சமயத்தின் தொன்மை

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உலகில் தோன்றி நிலைபெற்றுக் கொண்டிருக்க கூடிய சமயங்களில் இந்து சமயமும் முதன்மையான ஒன்றாகும். இதன் அடிப்படையில் இந்து சமயமானது பிரதானமாக இரு பிரிவுகளின் அடிப்படையில் செயல்படுகின்றது.

அதன்படி சிவனை வழிபடும் பிரிவு சைவம் எனவும், திருமாலை வழிபடும் பிரிவு வைணவம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவற்றுள் காலத்தால் முந்தியதாக சைவ சமயமே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் சைவ சமயத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுவதாக சங்ககால பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பவற்றில் சிவன் பற்றிய செய்திகள் அதிகமாக காணப்படுவதனை குறிப்பிடலாம்.

எடுத்துக்காட்டாக புறநானூற்றில் “பால்புரை பிறநுதல் பொழிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன்…” என ஔவையார் சிவபெருமான் பற்றி குறிப்பிட்டிருப்பதனை காணலாம்.

அதேபோன்று “பித்தா பிறைசூடி பெருமானே…” என திருநாவுக்கரசரும் சிவபெருமானின் சிறப்புகளை குறிப்பிடுவதும் இந்த சைவ சமயத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.

தமிழ் மொழியின் தொன்மை

சைவ சமயம் எவ்வாறு தொன்மையானதோ, அது போலவே தமிழ் மொழியும் தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும்.

மனிதன் தன்னுடைய சிந்தனைகளையும், கருத்துக்களையும் பிற மனிதனுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஓர் ஊடகமாக மொழி காணப்படுகின்றது.

இந்த வகையில் மனிதனால் பேசப்படுகின்ற மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் இவ்வாறான ஆய்வுகளுக்கு எடுத்துக்காட்டாக ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகளின் போது தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சுமார் ஐயாயிரம் வருடங்கள் பழமையான ஓர் மொழியாக தமிழ் மொழி காணப்படுகின்றமையும் அதன் தொன்மையையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

சைவ சமயத்தில் தமிழ் மொழியின் பங்கு

தொடர்பாடல் பரிமாற்ற கருவியாக காணப்பட்ட மொழியானது, சமயத்தின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் மக்களுக்கு பரப்புவதில் பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது.

இந்த வகையிலேயே சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு தமிழ் மொழியும் பெரும் பங்காற்றியுள்ளது என்பதனை டாக்டர் வா.செ. குழந்தைசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சைவ சமயத்தின் வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் அரும்பாடுபட்ட சுந்தரர், அப்பர், திருநாவுக்கரசர், சம்பந்தர், திருமூலர், சேக்கிழார் போன்றோர் சிவபெருமான் பற்றிய கருத்துக்களை தமிழ் மொழியில் பாடி உள்ளனர்.

எடுத்துக்காட்டாக “இறைவன் தமிழை ஒத்தவன்…” என சுந்தரரும், “பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்..” என திருநாவுக்கரசரும் பாடி இருப்பதனைக் காண முடியும்.

இவ்வாறாக நோக்குகையில் சைவ சமயத்தின் இறைவன் பற்றிய செய்திகளை தமிழ் மொழியில் எடுத்துக் கூறியுள்ளமையானது அம்மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவே அமைந்துள்ளது.

முடிவுரை

சைவ சமயத்தை வளர்த்த சான்றோர்கள் கூடவே தமிழையும் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டியுள்ளனர். அதாவது சைவத்தையும், தமிழையும் இரு விழிகளாக போற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் அடிப்படையில் இந்து மதத்தின் உயிர் நாடியாக சைவம் காணப்படுவது போல சைவத்தின் உயிர்நாடியாக தமிழ் மொழி காணப்படுகின்றது.

ஆகவே சைவம் – தமிழ் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த தொடர்பு கொண்டவை என்றே குறிப்பிட முடியும்.

You May Also Like:

அறம் பற்றிய கட்டுரை

தைப்பூசம் பற்றிய கட்டுரை