அன்னை தெரசா கட்டுரை

Annai Teresa Katturai In Tamil

இந்த பதிவில் உலகையே அன்பினால் அரவணைத்த “அன்னை தெரசா கட்டுரை” பற்றி காணலாம்.

இவர் மறைந்தாலும் இவரது சேவைகளும் பணிகளும் என்றென்றும் போற்றப்படும். மறைந்தும் மறையாது வாழும் புனிதர் வழி நாமும் பிறர் மீது அன்பு கொள்வோம்.

அன்னை தெரசா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. அன்னை தெரேசாவின் இந்தியா வருகை
  4. அன்னை தெரேசாவின் சேவைகள்
  5. இறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

மனிதர்களுள் புனிதராய் வாழ்ந்தவர்கள் ஒருவரே அன்னை தெரேசா அவர்கள் ஆவர். கொல்கத்தா நகர வீதிகளில் தனது பணியைத் தொடங்கிய இவர் உலகம் முழுவதிலும் வாழும் கத்தோலிக்கர்களின் அன்னையாக மாறினார். இவரது சேவைக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.

அன்பு, நேசம், பாசம், கருணை இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் திகழ்ந்தவர் தான் அன்னை தெரேசா. அன்னை தெரேசா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு

அன்னை தெரேசா அவர்கள் அல்போனியா என்ற நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.இவர் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி அன்று நிக்கல் நிகோலா, பொஜாஜியூ திராணி பெர்னாயின் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்சா பெர்ஜனாக்கா என்பதாகும்.

இவர் 26 ஆகஸ்ட் 1910 இல் பிறந்த போதிலும்இ 27 ஆகஸ்ட் அன்று திருமுழுக்குப் பெற்றதால் இத்தினத்தையே தனது பிறந்த நாளாக கருதினார். தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தவர் பின் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.

அன்னை தெரேசாவின் இந்தியா வருகை

அன்னை தெரேசா அவர்கள் தனது பன்னிரண்டாவது வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். இந்தியாவின் மேற்கு வங்கப் பயணம் முடிந்து திரும்பிய அருட் சகோதரிகளின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஏழ்மை நிலையினை பற்றித் தெரிந்து கொண்டார். அதன் பின்னர் மக்களுக்கு உதவிகளை செய்வதற்காக துறவறம் பூண்டார்.

பின்னர் 1929 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்து அங்குள்ள ஏழைகளுக்கு உதவினார்.

அன்னை தெரேசாவின் சேவைகள்

கொல்கத்தாவில் தங்கியிருந்து அங்கு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், தொழிலாளர்களின் நிலை, வேலைவாய்ப்பில்லாத் திண்டாட்டம், பசியுடன் திரிந்த குழந்தைகள், சுகாதாரமற்ற குடியிருப்புகள், வியாதியுடன் கூடிய மக்கள் போன்ற அனைத்து அவலங்களையும் கண்டு வருந்தினார்.

குழந்தைகளுக்கு அன்பு காட்டிப் பாடம் கற்பித்தார். அதுமட்டுமல்லாது குழந்தைகளை குளிப்பாட்டி, உணவு ஊட்டி அன்னை போல் கவனித்துக் கொண்டார்

பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டு பின் மக்களுக்கு சிகிச்சை அளித்தார். மருத்துவமனையை உருவாக்கி இலவச சிகிச்சைகளை வழங்கினார். பசியால் வாடியவர்களுக்கும் வீடு இன்றித் தவித்தவர்களுக்கும் உதவினார்.

இறப்பு

1983ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை ரோம நகரில் சந்தித்த போது மாரடைப்பு ஏற்பட்டது.

பின்னர் 1989ஆம் ஆண்டு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் இதயநோய் கோளாறால் அவதிப்பட்ட அன்னை தெரேசா அவர்கள் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.

இவரது இறப்பைக் கண்டு கலங்காத கண்களும் கலங்கின. இவர் மறைந்தாலும் இவரது சேவைகளும் பணிகளும் என்றென்றும் போற்றப்படும். மறைந்தும் மறையாது வாழும் புனிதர் வழி நாமும் பிறர் மீது அன்பு கொள்வோம்.

முடிவுரை

அன்பிற்கு அன்னை தெரேசா என்று நாம் அடைமொழி கொடுக்கும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவ இவரின் இரக்க குணத்தையும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தையும் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அன்பினால் உலகையே அரவணைத்த அன்னை உலகை விட்டு நீங்கினாலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்றும் மக்களிடத்தில் நிலைத்து நிற்கின்றது.

You May Also Like:

நேர்மை பற்றிய கட்டுரை
அறம் செய்ய விரும்பு பேச்சு போட்டி