இந்த பதிவில் “தியாகி சங்கரலிங்கனார் உயிர் தியாகம் கட்டுரை” பதிவை காணலாம்.
ஒரு மனிதனுடைய பிறப்பு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.
தியாகி சங்கரலிங்கனார் உயிர் தியாகம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளமை பருவம்
- சுதந்திர போராட்டம்
- சங்கரலிங்கனார் கோரிக்கைகள்
- சாதனைகள்
- முடிவுரை
முன்னுரை
ஆட்சி பலத்தாலும் அதிகார பலத்தாலும் மேல் வர்க்கத்தில் இருப்பவர்கள் அடித்தட்டு மக்களின் உரிமைகளை தர மறுப்பதும் அவர்களை இழிவாக நடாத்துவதும் இயல்பு அத்தகைய நிலையில் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து தமது வாழ்வினையே தியாகம் செய்த தலைவர்கள் போற்றுதலுக்குரியர்களாவர்.
அந்தவகையில் தியாகி சங்கரலிங்கனாருடைய வரலாறு தமிழ் நாட்டில் ஒரு அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை அவை பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.
இளமைப் பருவம்
இவர் தென் பாண்டியின் வணிக களமான விருதுநகரில் 1985ம் ஆண்டு பெரியகருப்பசாமி வள்ளியம்மை ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
இவர் 1900ல் திருமால்நாடார் ஓலைப்பள்ளியிலும் 1901ல் சுவீடிஸ் மிசன் ஞானமாணிக்கம் உபதேசியார் பள்ளியிலும் 1902ல் சத்திரிய வித்தியாசாலையிலும் பயின்றார்.
இவர் இளமை முதலே தேச விடுதலை பற்றி நாட்டமும் ஈடுபாடும் உடையவராக விளங்கியிருந்தார்.
சுதந்திர போராட்டம்
இந்தியாவினை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் இந்தியர்கள் அவர்களுக்கெதிராக போராடிய கால கட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சி வசமான உரையினால் ஈர்க்கப்பட்டு 1908 முதல் தன்னை சுதந்திர போராட்டத்தில் இணைத்து கொண்டார்.
இவ்வாறு தனது அரசியல் மற்றும் சமூக பற்றினை தனது பணிகள் மூலமாக வெளிப்படுத்தினார். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் அவரை போலவே நூல் நூற்றல், கதர் உடை அணிதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
சங்கரலிங்கனார் கோரிக்கைகள்
இவர் தாய் தமிழகத்துக்கு மதராஸ் என்ற பெயர் இருக்க கூடாது. தமிழ்நாடு என்று அது மாற்றப்பட வேண்டும் என 1956 இல் உயிர் பெரிதன்று மானம் பெரிது என்ற பல அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
மொழிவழி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் மற்றும் பல்வேறான ஆரோக்கியமான பல திட்டங்களை வலியுறுத்தி அகிம்சை வழியில் போராடினார். அன்றைய காலகட்டத்தில் இது ஒரு சிறந்த போராட்டமாக பார்க்கப்பட்டது.
சாதனைகள்
இவர் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும் வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் இந்தியை போலவே பிற மொழிகளும் அரச மொழியாக அங்கீகரிக்க பட வேண்டும் என்பதனை அன்றே அவர் வலியுறுத்தினார்.
இவற்றின் படி இன்று தமிழ்நாடு என மாநிலம் பெயர் பெற்றது. இவரது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்த பட வேண்டும் என இறுதி வரை போராடி தனது இன்னுயிரையும் இந்த மக்களுக்காக தியாகம் செய்தவர் ஆவார்.
முடிவுரை
ஒரு மனிதனுடைய பிறப்பு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.
தியாகி சங்கரலிங்கனார் என்று மக்களால் போற்றப்படும் அளவுக்கு இவரது போராட்டம் அமைந்தது என்பது யாராலும் மறுக்க முடியாது.
You May Also Like: |
---|
தமிழுக்கு அமுதென்று பெயர் கட்டுரை |
தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை |