உலக தம்பதியர் தினம் எப்போது
உலக தம்பதியர் தினம் | மே 29 |
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ம் திகதி உலகம் முழுவதும் “சர்வதேச தம்பதியர் தினம்’” கொண்டாடப்படுகிறது.
உலக தம்பதியர் தினம் வரலாறு
உலக தம்பதியர் தினம் உருவாக்கத்திற்குப் பின்னணியாக வலுவான வரலாறு இல்லை. எனினும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ந் தேதி உலகம் முழுவதும் ‘சர்வதேச தம்பதியர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகின்றது.
தம்பதியினரின் ஒற்றுமையையும், தம்பதியாய் வாழ்வதின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நாள் அதிகமாக மேற்குலக நாடுகளிலேயே முக்கியம் பெற்று விளங்குகின்றது. சில நாடுகளில் இத்தினத்தில் தம்பதியினருக்காக விடுமுறையும் அளிக்கப்பட்டு சலுகைகளும் வழங்கப்படுகின்றது.
உலக தம்பதியர் தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம்
கணவன், மனைவியாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, பூரண இல்லற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கான உண்மையை உணர்த்தும் நோக்கிற்காக உலக தம்பதியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம் ஆகும்.
உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தம்பதியினர் தங்களின் திருமண பந்தத்தை புதுமையான மற்றும் வினோதமான முறையில் கொண்டாடி மகிழ்கின்றனர்.
உலக நாடுகள் முழுவதிலும் இந்த தினம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சில நாடுகள் தம்பதியினர் தினம் அன்று விடுமுறை அளிக்கின்றனர்.
உலக தம்பதியர் தினத்தின் முக்கியத்தும்
இந்நாள் தம்பதியினர் தங்களது உறவை எப்படிக் கொண்டாடுவது என்பதை சிந்திக்க ஊக்குவிக்கின்றது. வாழ்நாளில் ஒருவருக்கொருவர் எவ்வாறு நேரத்தைச் செலவிட்டு மகிழ்ந்தார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டும் அற்புத நாளாக உள்ளது.
சமூக கோட்பாடுகள் வகுக்கும் சீரான வாழ்கை முறைக்கு ஆண், பெண் தம்பதியாக வாழ்வது மிகவும் அவசியம்.
வருங்கால சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் தோள்களே குழந்தைகள். அவர்களின் செழிப்பான செம்மையான வளர்ச்சியையும், வாழ்வையும் ஆதரிப்பது தாயும் தந்தையுமான தம்பதிகளே.
திருமணத் துணையின் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்கு கிடைத்த அற்புதமான நாளாக இத்தினம் அமைந்துள்ளது.
திருமண பந்தத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அந்த ஒற்றுமையைப் போற்றும் விதமாக உலக தம்பதியினர் தினம் கொண்டாடப்படுகிறது.
கணவன் மனைவி இருவரும் தங்கள் அன்பினால் இணைய வேண்டும். அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை கணவன்-மனைவி உணர வேண்டும்.
தனிக்குடும்பமாய் வாழும் தம்பதியினர் தங்களுக்குள் சிறு பிரச்சினை வந்தாலே பிரிந்து விடுவோம் என்ற முடிவிற்கு வந்துவிடுகின்றமையை இக்காலங்களில் அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
விருப்பு வெருப்பு அறிந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இருவரும் இணக்கமாக வாழ வேண்டும். வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும் முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் இந்த உலகில் தலைசிறந்த தம்பதியர்.
You May Also Like : |
---|
உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை |
சர்வதேச மகளிர் தினம் |