சர்வதேச மகளிர் தினம்

magalir thinam in tamil

உலக மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது

சர்வதேச மகளிர் தினம்மார்ச் 8
International Women’s DayMarch 8

ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த மகளிர் நாள் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை.

மகளிரைப் போற்றி வரும் இன்றைய காலகட்டத்தில் மகளிருக்கென பிரத்யேகமாக கொண்டாடப்படும் நாளே மகளிர் தினமாகும்.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடுகின்ற சர்வதேச மகளிர் தினம் தோன்றியது கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில் தான்.

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம்

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களைப் போற்றும் வகையிலும், அவர்களது பிரதிநிதித்துவத்தை உயர்த்தும் வகையிலும், பெண்களின் கலாச்சார அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பாலியல் சமத்துவ உரிமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றிற்கான தீர்வுகாண கொண்டாடப்படுகின்றது.

பெண்களின் முழுமையான பங்கேற்பு மற்றும் தலைமைத்துவம், அனைவரின் வாழ்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் போன்ற நோக்கத்திற்காக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக மகளிர் தினம் வரலாறு

வாரிசுக்காகமும் குடும்பத்திற்காகவும் மட்டும் என்று மகளிர் சமூகம் குன்றிக் கிடந்த நிலையில் பிரெஞ்சுப் புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 1789ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் நாள் முதன் முதலில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

பெண்களுக்கு வாக்குரிமை, வேலைக்கேற்ற ஊதியம், பெண் அடிமையாக நடத்தப்படுவதிருந்து விடுதலை பெறவேண்டும் என்று பெண்கள் போராட்டத்தை தொடங்கினர்.

பிரான்சிய மன்னன் இவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட போதிலும் வாக்குரிமையை நிறைவேற்ற இயலாததால் பதவி விலகினார். இந்த செய்தி பல நாடுகளுக்கும் பரவியது. பெண்கள் போராட்டம் உலகம் முழுவதும் விரிவடைந்தது.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் ரஷ்யா, இத்தாலி, போலந்து போன்ற இடங்களிலிருந்து நியூயோர்க்கிற்கு பணிக்காக குடிபெயர்ந்தனர்.

மணிக்கணக்கில் வேலை ஆனால் குறைந்த ஊதியம், பயன்படுத்தும் ஊசிநூல் மற்றும் உட்காரும் நாற்காலி தொடங்கி அனைத்திற்கும் வரிகட்ட வேண்டும் என்பதுடன் கழிவறையை அதிகநேரம் பயன்படுத்துவதற்கு எல்லாம் அபராதம்
விதிக்கப்பட்ட அவலநிலை காணப்பட்டது.

இந்நிலையில் பெண்கள் தங்கள் உரிமைக்காக தாங்களே களமிறங்க முடிவு செய்தனர். 1820இல் முதன் முதலில் பின்லாந்தில் நியூ இங்கிலாந்துப் பகுதியில் தையல் நிறுவனப் பெண்கள் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

அதன்பின்பு பல நகரங்களில் பெண்கள் போராட்டம் விரிவடையத் தொடங்கிய பின்னணியில் உழைக்கும் பெண்கள் சங்கம் உருவானது.

1908ஆம் ஆண்டு குறைந்த வேலை நேரம், உழைப்புக்கேற்ற கூலி, வாக்குரிமை போன்ற அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து பதினையாயிரம் பெண்கள் அணிதிரண்டு நியூயோர்க் நகரையே ஸ்தம்பிக்கச் செய்தனர்.

அதனால் உந்தப்பட்ட நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெண்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

1917 இல் முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ரஷ்யாவில் “போர் வேண்டாம் அமைதியும், றொட்டியும் தான் வேண்டும்” என்ற முழக்கத்துடன் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் முன் நின்று போராட்டம் நடத்தினர்.

4 நாட்கள் நீடித்த இந்த போராட்டம் ரஷ்ய மன்னன் ஜாரின் முடியாட்சிக்கு முடிவுகட்டியதுடன் பெண்களுக்கான வாக்குரிமையையும் பெற்றுத் தந்தது.

இந்த போராட்டத்தின் வீரியம் சற்றும் குறையாமல் அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற பெருமை பெண் போராளி கிளாரா ஜெட்கின்சையே சாரும்.

அடிப்படையில் கம்யூனிசவாதியான இவர்தான் உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் பெண்கள் தினத்தை முன்மொழிந்தவர். 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கிளாராவை வழிமொழிந்தனர்.

இதன் பின்பு 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினம் ஒவ்வொரு முழக்கத்தை முன்வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றது.

You May Also Like:
பெண்களின் சிறப்பு கட்டுரை
பெண்கள் பாதுகாப்பு கட்டுரை