உலக வெப்பமயமாதல் கட்டுரை

உலக வெப்பமயமாதல்

இந்த பதிவில் இன்று பூகோளம் எதிர்கொள்ளும் பாரிய சிக்கலான “உலக வெப்பமயமாதல் கட்டுரை” பதிவை காணலாம்.

சீரான வெப்பநிலை நிலவுதனால் தான் பூமியில் சீரான காலநிலையானது நிலவுகின்றது.

உலக வெப்பமயமாதல் கட்டுரை

உலக வெப்பமயமாதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன
  3. காரணங்கள்
  4. விளைவுகள்
  5. தடுக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய உலகில் உலக மக்களால் உணரப்படும் மிக தீவிரமான பிரச்சனையாக உலக வெப்பமயமாதல் பார்க்கப்படுகின்றது. இந்த விளைவானது உலகத்தினுடைய வெப்ப நிலையின் அளவு சடுதியாக அதிகரித்தமையே காரணமாக பார்க்கப்படுகின்றது.

இந்த வெப்ப அதிகரிப்பினால் பல அசாதாரண இயற்கை மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றது.

இந்த நிலமை எதிர்காலத்தில் மிகவும் மோசமடையும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது. இவற்றுக்கான காரணம் அதன் விளைவுகள் அதனை தடுக்கும் முறைகள் என்பன பற்றி இங்கே காண்போம்.

உலக வெப்பமயமாதல் என்றால் என்ன

சீரான வெப்பநிலை நிலவுதனால் தான் பூமியில் சீரான காலநிலையானது நிலவுகின்றது. கடந்த சில தசாப்பதங்களாக பூமியின் சராசரி வெப்பநிலை சடுதியாக அதிகரித்து உள்ளது.

பச்சைவீட்டு விளைவினால் பூமிக்கு உள்வரும் கதிர்கள் வெளியேறாமல் தடுக்கப்படுவதனால் பூமியின் வெப்பநிலை உயர்வடைகின்றது. இந்த நிலையினை தான் புவி வெப்பமயமாதல் என்று அழைக்கின்றார்கள்.

உலக வெப்பமயமாதல் காரணங்கள்

குறிப்பாக பூமி வெப்பமடைதலை தூண்ட கூடிய காரணிகளாக பச்சை வீட்டு வாயுக்கள் காணப்படுகின்றன. 1880 ஆண்டு முதல் உருவான கைத்தொழில் புரட்சியின் விளைவினால் பச்சைவீட்டு வாயுக்கள் அதிகம் வளிமண்டலத்தில் கலக்க ஆரம்பித்தன.

எரிபொருள் கொண்டு இயந்திரங்கள் இயங்க துவங்கிய காலம் முதல் காபனீரொட்சைட், கந்தகவீரொட்சைட், குளோரோ புளோரோ கார்பன் வாயுக்கள் அதிகளவில் வெளியேறி பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வலை போல உருவாகின. இதனால் தான் புவி வெப்பநிலை வழக்கத்தை காட்டிலும் 0.08 சதவீதமாக உயர்ந்தது.

பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்க இயற்கையான காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வந்தது. இதுவே இன்று நாம் எதிர்கொள்ளும் பாரிய ஒரு பிரச்சனையாக வடிவம் பெற்றுள்ளது.

உலக வெப்பமயமாதல் விளைவுகள்

இந்த பூகோள வெப்பமடைதலால் பல்வேறான விளைவுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த பூமியானது அனுபவித்து வருகின்றது. பிரதானமாக இன்று அதிகளவான வெப்பநிலையினை எம்மால் உணர முடிகின்றது.

இது வெறுமனே மனிதர்களை மட்டுமன்றி விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றையும் பாதிக்கின்றது. இந்த வெப்ப உயர்வினால் காலநிலை மாற்றங்கள் இடம் பெறுகின்றன.

உலகமெங்கும் ஆபத்தான புயல், வெள்ளம், வரட்சி, காட்டுத்தீ ஆகிய அனர்த்தங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றினால் பாதிக்கப்படும் விவசாய நடவடிக்கைகளால் உணவு உற்பத்தி குறைவடைந்து வறுமை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவதனால் கடல் மட்டமானது உயர்வடைகின்ற விளைவுகளையும் அவதானிக்க முடிகின்றது.

உலக வெப்பமயமாதல் தடுக்கும் வழிமுறைகள்

பூகோள வெப்பமடைதலை தடுக்கும் வழிமுறை என்பது உடனடியாக எடுக்க முடியாது. இந்த மாற்றம் ஏற்பட நீண்ட காலமானது தேவைப்படுகின்றது. முதலில் அளவுக்கு மீறி காபன் போன்ற நச்சு வாயுக்களின் வெளியேற்றத்தை தவிர்க்க வேண்டும்.

இதே போன்று இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் காடுகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறான நிலைத்து நிற்க கூடிய அவிருத்தி செயற்பாடுகளை கையாள்வதன் மூலமாக இதன் அபாயத்தை குறைக்கலாம்.

முடிவுரை

எமது உலகம் இன்று எதிர்கொண்டுவரும் மிக அபாயமான பிரச்னையாக உலக வெப்பமயமாதல் மாறி வருவதனால் நாம் இன்றே இந்த விடயம் தொடர்பாக கவனம் கொள்ள வேண்டும்.

பூமி வெப்பமடைவதனை தடுக்க எம்மால் இயன்றதை செய்வதன் மூலமாக எதிர்கால சந்ததியினருக்கு இந்த அழகான பூமியை கையளிக்க முடியும் என்பது வெளிப்படையாகும்.

You May Also Like:
சூழல் மாசடைதல் கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை