பாரதத்தின் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் ஓர் புனிதத் தன்மை வாய்ந்த நதி கங்கை நதியாகும். இது இந்தியாவின் தேசிய நதியாகவும் காணப்படுகின்றது.
இந்நதியானது இமயமலை தொடக்கம் வங்களா விரிகுடா வரை சுமார் 1,569 மைல்கள் (2,525 கி.மீ) நீளமாக அமைந்துள்ளது. இதன் வடிகால் நீளம் 416,990 மைல்கள் (1,080,000 கி.மீ) ஆகும்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நதிகளில் குறிப்பிடத்தக்க நதியாகவும் இது காணப்படுகிறது . அதாவது இந்நதிதியினை சூழ சுமார் 400 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
கங்கை நதியானது, இமயமலையின் உத்திரகாண்டம் மாநிலத்தில் உள்ள கஸ்கோத்ரியில் தொடங்கி உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்டம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் காணப்படும் சம்மு, அகலாபாத், ஹரித்வார், கான்பூர், வாரணாசி, மிர்சாபூர், பாட்னா, ரிஷிகேஷ், மக்கள், பகல்பூர், கொல்கத்தா போன்ற நகரங்களின் ஊடாகப் பாய்கிறது.
இந்நதியானது “பகீரதன் நதி” எனவும் வங்கதேசத்தில் “பத்மா நதி” எனவும் அழைக்கப்படுகிறது.
கங்கை தோற்றம் பற்றிய புராணக்கதை
கங்கை நதியானது விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகம் கொண்டுவரப்பட்டதாக கங்கைப்புராணக்கதைகள் கூறுகின்றன.
அதாவது, பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று, அங்கே கங்கையைக் கண்டு வணங்கி தம் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடைய வேண்டி, கங்கை பூமிக்கு வந்து பாதாளத்திற்கும் பாய்ந்து அவர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என கங்கையிடம் வேண்டியதற்கு இணங்க, கங்கை பூமிக்கு வரச் சம்மதித்தாள்.
அத்துடன் தான் பூமிக்கு வரும் வேகம் அதிகமாக இருப்பதனால் அதனை பூமாதேவி தாங்கமாட்டாள். எனவே என்னை மெல்ல பூமியில் விடுவதற்கான வழி ஒன்றினை செய்யுமாறு கூறினார்.
அதற்கிணங்க, பகீரதன் சிவனை நோக்கித் தவம் புரிந்தார். பகிரதனது தவத்தால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து, கங்கையை பூமிக்கு அழைத்து வர தாம் உதவுவதாக, கங்கையை தனது சடாமுடியில் குதிக்கும் படியும் அதிலிருந்து மெல்ல தான் பாதாளம் சென்றடைய உதவுவதாகவும் கூறினார்.
பகிரதன் அதனை கங்கையிடம் கூற கங்கை சிவபெருமானின் சடாமுடியில் குதிக்கும் போது, ” எனது வேகம் என்ன இந்த சடாமுடி எனது வேகத்தை தாங்குமா?” என்று தனக்குள் அகங்காரம் கொண்டாள்.
எல்லாம் அறிந்த சிவபெருமான் கங்கையின் அகங்காரத்தை அடக்க அவளை தனது சடா முடியில் முடிந்து விட்டார். பின், பரதனின் வேண்டுகோளுக்கு இணங்க, சடா முடியில் இருந்து கங்கையை சிவபெருமான் விடுவித்தார்.
அதன்பின் கங்கை வரும் வழியில் ஜான் ஹபி முனிவரது ஆசிரமம் இருந்தது. அது நீரில் அடித்து சென்று விடுமோ என்று முனிவர் கங்கையை கையில் அள்ளி அருந்தி விட்டார். அதன்பின் பகிரதன் முனிவரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரிய பின்னர் முனிவர் தனது காது வழியாக கங்கையை அனுப்பினார்.
அதன் பிறகு கங்கை தடையில்லாமல் பாய்ந்து பாதாளம் வரை தடையில்லாமல் சென்று தம் மூதாதையரின் எலும்புகள் மற்றும் சாம்பல்களை கங்கை நீரில் நனைத்து புனிதமாக்கினார். அவர்களுக்கு நற்கதியும் கிடைத்தது.
அன்று முதலே கங்கை உலகில் பாய ஆரம்பித்ததாக ஐதீகம். கங்கை நதியானது விண்ணுலத்திலிருந்தே மண்ணுலகம் கொண்டுவரப்பட்டது என்பதற்கு சில சான்றுகள் காணப்படுகின்றன.
ஏனைய நதிகளின் நீரை விட கங்கை நதியின் நீரானது சற்று வேறுபாடு உடையதாக காணப்படுகிறது. அதாவது, ஏனைய நதிகளின் நீரை ஒரு செப்புப் பாத்திரத்தில் அடைத்து வைத்தால், அது சிறிது காலத்தில் கெட்டுவிடும்.
ஆனால் கங்கை நதியின் நீரினை பல வருடங்களும் செப்பு பாத்திரத்தில் அடைத்து வைக்கலாம் அதால் எவ்வித நுண்ணங்கிகளின் செயற்பாடும் இடம் பெறாது.
கங்கை நதியின் முக்கியத்துவம்
கங்கை நதிக்கரையில் ஆரம்ப காலத்திலிருந்து மக்கள் குடியேற்றப்பட்டனர். இவர்களது அன்றாட தேவைகளான குடிநீர், மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கான நீர் பாசனம் என்பவற்றை இந்நதியானது இன்றுவரை பூர்த்தி செய்து வருகிறது.
இதனை சூழ உள்ள 400 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் நதியாகவும் இது காணப்படுகிறது. இந்து மக்களுக்கு கங்கை நதியானது தமது சமயத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகவும், மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் கருதுகின்றனர்.
இந்து மக்கள் இந்நதியினை, “கங்கா மகாதேவி” என வழிபடுகின்றனர். கங்கை புராணத்தில், இந்நதியில் நீராடுபவர்களது பாவங்களானது நீங்கி தூய்மை அடைவார்கள் என்றும்,
இறந்தவர்களின் உடலை தகனம் செய்த பின்னர் எஞ்சும் சாம்பல் மற்றும் எலும்புகளை இந்நதியில் கரைப்பதன் மூலம் அவர்கள் நற்கதி பெறுவர் என்றும் நம்பப்படுகிறது.
கங்கை நதியின் நீருக்கு உயிரினங்களின் எலும்புகளை கரைத்து விடக் கூடிய சக்தி இருப்பதாக புராணங்களில் கூறப்படுகிறது. தற்காலத்தில் ஆய்வாளர்களாலும் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கங்கை ஆற்றின் மாசு
இந்திய மக்களுக்கு இந்நதியானது மத முக்கியத்துவம் மற்றும் தினசரி முக்கியத்துவம் வாய்ந்த நதியாக இருப்பினும், தற்போது உலகில் அசுத்தமடைந்த ஆறுகளில் மூன்றாவதாக கங்கை நதி காணப்படுகிறது.
இந்தியாவின் விரைவான வளர்ச்சி, சமய நிகழ்வுகள், மனித மற்றும் தொழிற்சாலை கழிவுகள் மூலம் மாசடைகிறது. தற்போது 400 மில்லியன் மக்கள் கங்கை நதிக்கரையினை வாழிடமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களினால் வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கங்கையிலே கலக்கின்றது.
ஆண்டொன்றிற்கு 10.5 கோடி பிளாஸ்டிக் குப்பைகள் கங்கை நதிகள் கலக்கின்றன. இவற்றை சுத்திகரிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் கணக்கான பணத்தினை இந்திய அரசாங்கம் செலவு செய்கிறது. இருப்பினும் நதியானது பூரணமாக சுத்தப்படுத்தப்படவில்லை.
You May Also Like: |
---|
திருவண்ணாமலை கோவில் வரலாறு |
தொழிற்சாலை பாதுகாப்பு கட்டுரை |